எழுத்துரு அளவு Larger Font Smaller Font

ஊற்றங்கரை, மார்ச் 12- ஊற்றங் கரை விடுதலை வாசகர் வட் டத்தின் 74ஆம் மாத நிகழ்வாக போச்சம்பள்ளி விநாயகா பாலி டெக்னிக் கல்லூரியுடன் இணைந்து மகளிர் தின விழா சிறப்புடன் கொண்டாடப்பட் டது. இந்நிகழ்வில் போச்சம் பள்ளியை சுற்றியுள்ள கிராமப் புற அரசு பள்ளிகளில் இருந்து ஏராளமான மாணவிகள் உற்சா கத்துடன் கலந்து கொண்டனர்

விநாயகா பாலிடெக்னிக் கல்லூரியின் கலையரங்கத்தில் மாணவிகள் அனைவரும் வர வேற்கப்பட்டு இக்கல்லூரியின் நிறுவனர் சீரிய பகுத்தறிவாளர் கே.ஏ.அரங்கநாதன் அவர்கள் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார்.

திராவிடர் மகளிர் பாசறை யின் பொறுப்பாளரும் நல்லாசி ரியர் விருது பெற்றவருமான மாதம்பதி அரசு நடுநிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் மு.இந்திராகாந்தி அவர்கள் முன் னிலை வகித்து உரையாற்றினார்

இயக்குநர் கீதா இளங்கோ வன் அவர்கள் இயக்கத்தில் வெளியான மாதவிடாய் ஆவ ணப்படம் திரையிடப்பட்டது. மாணவிகள் பலரும் ஆர்வத் துடன் ஆவணப்படத்தை பார்த் தனர். ஆவணப்படம் திரையி டல் நிகழ்வுக்கு பிறகு கோவை மைன்ட் கேர் மனநல மய்யத் தின் மனநல ஆலோசகர் எழில் அவர்கள் மகளிர் தின கருத்து ரையாற்றினார் அவரது கருத் துரைக்கு பின்னர் மாணவிகள் பலரும் போட்டி போட்டுக் கொண்டு கேள்விகளை கேட்டு அறிவு தெளிவு பெற்றனர்.நிகழ்ச்சியின் நிறைவாக ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டத்தின் செயலர் பழ.பிரபு நன்றியுரையாற்றினார்

கல்லூரியின் சார்பில் பங்கு பெற்ற அனைத்து அரசு பள்ளி மாணவர்களுக்கும் மதிய உணவு வழங்கப்பட்டு பேருந்தின் மூலம் அவரவர் பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். கல்லூரி நிர்வாகத்தின் வேண்டு கோளுக்கு இணங்க மதிய உணவு இடைவெளிக்கு பின் னர் கல்லூரி மாணவர், மாணவி களுக்கு தனியாக கருத்தரங்கம் நடத்தப்பட்டது. மனநல ஆலோ சகர் எழில் அவர்கள் இன்றைய காலகட்டத்தில் மாணவ சமுதா யம் சந்திக்கும் பிரச்சினைகளை எடுத்துக்கூறி பகுத்தறிவு வழி யில் எப்படி சாதனை மனிதர் களாக மாறுவது என்பதை மிகுந்த எடுத்துக்காட்டுக்களு டன் உரையாற்றினர். பின்னர் மாணவ மாணவிகள் பங்கு பெற்ற கலைநிகழ்ச்சிகள் நடை பெற்றது. நிறைவாக கல்லூரி யின் நிர்வாக செயலர் சுடலை லட்சுமி நன்றியுரையாற்றினார்.

இந்நிகழ்வில் கல்லூரியின் தாளாளர் இராஜா அண்ணா மலை, கல்லூரியின் செயலர் பேபி மனோகரி, ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்ட துணைத்தலைவர் இரா.வேங் கடம், பொருளாளர் அண்ணா.அப்பாசாமி, ஒன்றிய திராவிடர் கழக மகளிரணி பொறுப்பாளர் வித்யா, மாதேஸ்வரன் கல்லூரி யின் பேராசிரிய பெருமக்கள், அரசு பள்ளி ஆசிரியர்கள் என பலரும் கலந்து கொண்டனர். தொடர்ச்சியாக இது போன்ற நிகழ்வை விடுதலை வாசகர் வட்டம் நடத்த வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner