எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

செந்துறை, மார்ச் 13- அரியலூர் மாவட்டம், செந்துறை வட் டம், நக்கம்பாடி ஊராட்சி, நிண் ணியூர் கிராமத்தில் வாழ்ந்து வந்த து.சாமிநாதன் அவர்கள் தமது 90-ஆவது அகவையில் கடந்த 4.1.2017 அன்று மறை வுற்றார்.

5.1.2017 அன்று நடைபெற்ற இறுதி மரியாதை நிகழ்வில் எந்தவிதமான மூடப்பழக்க வழக்கங்களுக்கும் இடமளிக் காத வகையிலும், மறைந்த சாமிநாதன் அவர்களுடைய மருமகள்களே முன்னின்று சிதைமூட்டியதை கிராம மக் கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர். அதனைத் தொடர்ந்து கடந்த 21.1.2017 அன்று நினைவேந்தல் மற்றும் படத்திறப்பு நிகழ்ச்சி அருணா-பார்வதி மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் திராவிடர் கழக பாடகர் திருத் தணி பன்னீர்செல்வம்--------------------- அவர் கள் பகுத்தறிவு பாடல்களுடன், மறைந்த சாமிநாதன் அவர்களு டைய பெருமைகளையும் சேர்த்து அருமையாகப் பாடி யது வருகை தந்தோருக்கு புதிய சிந்தனையை தூண்டியது.

தொடர்ந்து படத்திறப்பு மற்றும் நினைவேந்தல் நிகழ் வுக்கு திராவிடர் கழக துணைத் தலைவர் கவிஞர் கவி.பூங் குன்றன் அவர்கள் தலைமை யேற்க, திராவிட முன்னேற்றக் கழக அரியலூர் மாவட்ட செய லாளரும், மேனாள் குன்னம் சட்ட மன்ற உறுப்பினருமான எஸ்.எஸ்.சிவசங்கர், செம்மொழி தமிழாய்வு மய்ய மேனாள் இயக்குனர் செம்மொழி இராம சாமி ஆகியோர் முன்னிலை வகிக்க, மறைந்த சாமிநாதன் அவர்களுடைய குடும்ப உற வின் மூத்த உறுப்பினர் கோவில் பாளையம் ரத்தினம் அவர்க ளின் வாழ்வியல் இணையர் நூறு வயதை தொடந்த  அச லாம்பாள் அவர்கள் சாமிநாதன் அவர்களுடைய படத்தை திறந்து வைத்தார். தொடர்ந்து தி.மு.கவின் மாநில கொள்கை பரப்பு துணை செயலாளர் சா.அ.பெருநற்கிள்ளி, அரிய லூர் மாவட்ட கழகத் தலைவர் விடுதலை நீலமேகன், மண்ட லத் தலைவர் சி.காமராஜ், நிண்ணியூர் ஆசிரியர் சா.தங்கசாமி, மறைந்த சாமிநாதன் அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்த அரி யலூர் கோல்டன் மருத்துவ மனை இயக்குநரும், பேராசிரி யருமான ந.தங்கவேலு, அரிய லூர் மாவட்ட திமுக அவைத் தலைவர் வழக்குரைஞர் தங்க. துரைராஜ், திராவிடர் கழக மாநில அமைப்புச் செயலாளர் வெ.ஞானசேகரன், திராவிடர் கழக பொதுச் செயலாளர் தஞ்சை இரா. செயக்குமார் ஆகியோர் இரங்கல் உரைக்குப் பின்னர், நிகழ்வின் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் நிறைவுறையாற்றினர்.

அவர் தனது உரையில், மறைந்த சாமிநாதன் அவர் களுக்கும், அண்மையில் சவுதி அரேபியாவில் மறைந்தவரும், செந்துறை ஒன்றிய திராவிடர் கழகத்தில் மிகச் சிறப்பாக பணியாற்றி பறக்கும் படை தளபதி என போற்றப்பட்ட சோழன்குடிக்காட்டைச் சேர்ந்த தோழர் மாதவன் அவர்களுக் கும் இரங்கல் தெரிவிக்கும் விதமாக இரண்டு மணித்துளி கள் அமைதி காக்க அழைப்பு விடுத்து, அமைதி காக்கப்பட் டது. மேலும், இந்நிகழ்வில் அரியலூர் மாவட்ட செயலாளர் க.சிந்தனைச் செல்வன், பொய் யூர் மாவட்ட கழக தோழர்கள் பா.ஆறுமுகம், ஓய்வு பெற்ற வங்கி மேலாளர் ஆறுமுகம், அரியலூர் நகரத் தலைவர் பொறியாளர் கோவிந்தராசு, முன்னாள் ஒன்றிய செயலாளர் ந.செல்லமுத்து, ஒன்றிய செய லாளர் மு.கோபாலகிருட்டி ணன், சோழன் குடிக்காடு ஓய்வு பெற்ற ஆசிரியர் இரா இளங்கோவன், அமீனா கணே சன் ஆகியோரும், மறைந்த சாமிநாதன் அவர்களுடைய உறவினர்களான அரியராயி, கோவில்பாளையம், சேடக் குடிக்காடு, மருவத்தூர், நிண் ணியூர், சிலுப்பனூர், பொன் பரப்பி, விழுப்பணங்குறிச்சி, திருச்சி, ஆத்தூர், ஆந்திரா சித்தூர் ஆகிய பகுதிகளிலிருந்து உறவினர்களும் பெருமளவில் கலந்து கொண்டனர்.

தொடக்கத்தில் மறைந்த சாமிநாதன் அவர்களுடைய மகளான செந்தாமரையின் மகள் உதயபானு வரவேற்புரையாற் றிட, மற்றொரு மகள் லோகேஸ் வரி மறைந்த சாமிநாதன் அவர் களைப் பற்றிய இரங்கல்பாடல் ஒன்றை பாடி அனைவரையும் மனம் நெகிழச் செய்தார்.

மறைந்த சாமிநாதன் அவர் களுக்கு, சா.இராசேந்திரன் -(புழல் மத்திய சிறை தொண்டு ஆசிரியர், சென்னை), சா.இராசகோபால் (தலைமை பாதுகாப்பு அதிகாரி, முன்னாள் இராணுவ வீரர், கோவை), சா.இராதா (கட்டிடக் கலைஞர், சவுதி அரேபியா), சா.பகுத் தறி வாளன்- (வழக்குரைஞர், அரி யலூர்), சா.தங்கசாமி (-வேளாண் இளம் விஞ்ஞானி, அமெரிக்கா) என்கிற அய்ந்து மகன்களும், இராசாத்தி, செந்தாமரை என் கிற இரண்டு மகள்களும் வாரி சுகள் என்பது குறிப்பிடத்தக்கது. நிகழ்வுக்கு வந்திருந்த அனை வருக்கும் மறைந்த சாமிநாதன் அவர்களுடைய மகள் வழி மூத்தப் பேரப்பிள்ளைகளை வழக்குரைஞர் மு.வேலவன், பேரப்பிள்ளைகள் கோவலன், வீரவேங்கை, புலியரசி, அறி வுச்சுடர் (எ) கிருஷ்ணவேணி, முகிலன், சிந்தனைவளவன், அறிவரசன் ஆகியோர் ஆடை போர்த்தி சிறப்பு செய்தனர்.

மேலும், கவிஞர் கலி.பூங் குன்றன் அவர்களுக்கு மறைந்த சாமிநாதன் அவர்களுடைய மூத்த மகள் இராசாத்தி அவர் களும், திமுக மாவட்ட செய லாளர் எஸ்.எஸ்.சிவசங்கர் அவர்களுக்கு இளைய மகள் செந்தாமரையும் பயனாடை அணிவித்து சிறப்பு செய்தனர். மறைந்த சாமிநாதன் அவர்க ளுக்கு சரோசா, செல்லம்மாள், தனம், தவமணி, அனிதா என் கிற மருமகள்களும், முருகே சன், தவலேஸ்வர ரெட்டி என்கிற மருமகன்களும் 17 பேரப்பிள்ளைகளும், 5 கொள் ளுப்பேரப்பிள்ளைகளும் உள் ளனர். கடந்த 2015-ஆம் ஆண்டு செந்துறையில் நடைபெற்ற தி.மு.க. வின் முன்னோடியும், முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் எஸ்.எஸ்.சிவசுப்ர மணியன் அவர்களுக்கு நடை பெற்ற பாராட்டுவிழாவில் கலந்து கொண்ட தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு மறைந்த சாமி நாதன் தையல்நாயகி இணையர் பெரியார் உலக நிதியாக ரூ.25 ஆயிரத்திற்கான நூறுரூபாய் பணத்தாள்களாலான பண மாலையை அணிவித்தனர்.

மேலும், சாமிநாதன்--தையல்நாயகி ஆகியோருக்கு திருமணம் நடைபெற்று 60 ஆண்டுகள் நிறைவடைந்த ஆண்டையொட்டி கடந்த 24.1.2016 அன்று மணவிழாவின் மணிவிழா கண்ட நாயகர்கள் என்கிற விழாவினை செம் மொழி இராமசாமி தலைமை யில் அவருடைய வாரிசுகள் நடத்தினார்கள். பெற்றோர் மற்றும் முதியோர் பாதுகாப்பு மற்றும் பராமரிப்புச் சட்டம்-2007 என்ற சட்டம் கொண்டு வரப்பட்டுள்ள நிலைக்கு இந் திய சமூகத்தின் போக்கு சென்று கொண்டிருக்கும் நிலையில் பெரியாரின் பகுத்தறிவு சிந்த னையை பெற்றுள்ள இக்குடும் பம் சமூகத்திற்கு வழிகாட்டு தலாக உள்ளது.

மறைந்த சாமிநாதன் அவர் களின் இரண்டாவது மகன் இராசகோபால்-செல்லம்மாள் ஆகியோருடைய திருமணம் 1987- ஆம் ஆண்டு செந்துறையில் சுயமரியாதை திருமண முறை யிலும், மூத்த மகன் சா.இரா சேந்திரன்--சரோசா ஆகியோரின் வாழ்க்கை இணை ஏற்பு விழா செந்துறையில் கடந்த 10.2.1989 அன்று தமிழர் தலைவர் ஆசிரி யர் அவர்கள் தலைமையிலும், சா.இராதா- தனம் ஆகியோரின் திருமணம் 2000-ஆம் ஆண்டில் செந்துறையில் பெரியார் பேரு ரையாளர் பேராசிரியர் அ.இறையன் அவர்கள் தலை மையிலும், மகள் செந்தாமரை -தவலேசுவரரெட்டி ஆகியோ ரின் திருமணம் பேராசிரியர் அ.இறையன் தலைமையில் பெரியார் திடல். மணியம்மை யார் அரங்கிலும், வழக்குரைஞர் சா.பகுத்தறிவாளன்-தவமணி ஆகியோரின் கைம்பெண் திரு மணம் தஞ்சையில் கடந்த 30.12.2002 அன்று நடைபெற்ற மாநில இளைஞரணி மாநாட் டில் தமிழர் தலைவர் தலை மையிலும், சா.தங்கசாமி--அனிதா ஆகியோரின் திருமணம் 2006-ஆம் ஆண்டு கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன் றன் தலைமையிலும் நடை பெற்றது என்பது குறிப்பிடத் தக்கது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner