எழுத்துரு அளவு Larger Font Smaller Font

தருமபுரி, மார்ச் 17- மத்திய பிஜேபி அரசு கொண்டு வந் துள்ள நீட் தேர்வை எதிர்த்து திராவிடர் கழக இளைஞரணி, மாணவரணி சார்பில் நடை பெறும் இரு சக்கர வாகன பிரச்சாரப் பேரணியில், தரும புரி மாவட்டத்தில் இருந்து 15 வண்டிகளில் கலந்து கொள் வதென மாவட்ட இளைஞரணி, மாணவரணி கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவெடுக்கப் பட்டுள்ளது.

தருமபுரி மாவட்ட இளை ஞரணி, மாணவரணி கலந்து ரையாடல் கூட்டம் 12.3.2017 ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணி அளவில் தருமபுரி பெரியார் மன்றத்தில், மாவட்ட இளைஞரணி தலைவர் சி.பகத் சிங் த¬மையில் நடைபெற்றது. மாநில மாணவரணி துணைச் செயலாளர் த.யாழ்திலீபன் வரவேற்புரையாற்றினார். மாவட்ட துணைச் செயலாளர் கோவிந்தராஜ் கடவுள் மறுப்பு கூறினார்.

கூட்டத்தினுடைய நோக்கத் தைப் பற்றி மாவட்ட திராவிடர் கழக தலைவர் வீ.சிவாஜி முன் னுரை வழங்கினார். மாநில அமைப்புச் செயலாளர் ஊமை ஜெயராமன் சிறப்புரையாற்றி னார். மாநில ப.க. செயல் தலைவர், தகடூர் தமிழ்ச்செல்வி, மாவட்ட செயலாளர் சி.காம ராஜ், பொதுக்குழு உறுப்பினர் அ.தமிழ்ச்செல்வன், மாவட்ட துணைத் தலைவர் பீம.தமிழ்பிரபாகரன், மாவட்ட துணைச் செயலாளர் கோவிந்த ராஜ், மாவட்ட அமைப்பாளர் இ.மாதன், மாவட்ட ப.க. தலைவர் கதிர்செந்தில், துணைத் தலைவர் இர.கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட மண்டல செயலாளர் கரு.பாலன், மாணவரணி செயலாளர் வி.ப.ஆதவன், இளைஞரணி மாணவரணி நிர்வாகிகள் இராமச்சந்திரன், மா.முனியப்பன், கார்த்திக் ராஜா, பி.சத்தியமூர்த்தி, ஜெ. ராம்குமார், பொ.செந்தில், வாசகர் வட்டத் தலைவர் க. சின்னராஜ், மகளிரணி தோழி யர் கவிதா, இ.சமரசன், அலெக்ஸ், வி.ப.அறிவு, சி.அறிவழகன் உட்பட பலர் கலந்து கொண் டனர்.

தீர்மானம் 1: தருமபுரியி லிருந்து துவங்கி விருத்தாசலம் வரையிலான நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நடத்தப் படும் இருசக்கர வாகன பிரச் சார பயணத்தில் 15 வண்டிகளில் 30 தோழர்கள் கலந்து கொள் வது,

தீர்மானம் 2: தருமபுரி மாவட்டத்திற்கு இளைஞரணி மாநில மாநாட்டை நடத்த அனு மதி அளித்த தமிழர் தலைவர் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.

தீர்மானம் 3: தமிழர் தலை வரின் அறிவுறுத்தலை ஏற்று பெண்களை இழிவுபடுத்தும் மனுதர்ம எரிப்புப் போராட் டத்தில் பங்கு பெற்று கைது செய்யப்பட்ட மகளிரணி தோழியர்களுக்கும், தோழர்க ளுக்கும் மாவட்ட கழகம் நன் றியை தெரிவித்துக் கொள்கிறது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner