எழுத்துரு அளவு Larger Font Smaller Font

நீட் நுழைவுத் தேர்வு எதிர்ப்பு

வாகனப் பேரணியை வரவேற்று பங்கேற்போம்

ஆண்டிமடம் கலந்துரையாடலில் தீர்மானம்

ஆண்டிமடம், மார்ச் 18 அரியலூர் மாவட்டம் ஆண்டி மடம் ஒன்றிய கலந்துரையாடல் கூட்டம் 16.3.2017 அன்று மாலை 6 மணிக்கு ஆண்டிமடம் தமிழ் நாடு ஆட்டோமொபைல்ஸ் வளா கத்தில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் விடுதலை நீலமேகன் தலைமையேற்க, மாவட்ட அமைப்பாளர் இரத்தின.இராமச் சந்திரன் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தின் நோக்கங்களை விளக்கி மாவட்ட செயலாளர் க.சிந்தனைச் செல்வன் உரை யாற்றிய பின் ஒன்றிய தலைவர் இரா.தமிழரசன், ஒன்றிய செய லாளர் தியாக.முருகன், ஒன்றிய துணைத் தலைவர் இரா.எ. இராமகிருஷ்ணன், மாவட்ட இ.அ.செயலாளர் க.கார்த்தி கேயன், சிலம்பூர் இராமச்சந்திரன், திருக்களப்பூர் ஆனந்தன், சத்ய சீலன், விளந்தை அய்யப்பன், கவரப்பாளையம், இராவண கோபால், ப.சுந்தரமூர்த்தி, ஒன் றிய இ.அ.தலைவர் க.செந்தில், மாவட்ட மாணவரணி தலைவர் த.தர்மேந்தர், ஒன்றிய அமைப் பாளர் த.பன்னீர் செல்வம், பிச்சமுத்து ஆசிரியர், நகர தலை வர் ந.சுந்தரம் உள்ளிட்ட தோழர் கள் கருத்துகளை எடுத்துக்கூறிய பின்னர் மண்டல தலைவர் சி.காமராஜ் சிறப்புரையாற்றினார்.

தீர்மானங்கள்

1) மேனாள் மாவட்ட அமைப் பாளர் கோ.பாண்டியன் அவர் களின் தாயார் திருவாட்சி அம்மாள் மறைவிற்கு இக் கூட்டம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.

2) மருத்துவக் கல்லூரிகளில் அகில இந்திய அளவில் ஒரே நுழைவுத் தேர்வு  ‘நீட்’ என்ற ஒன்றினைத் திணிப்பது தமிழ் நாட்டு கிராமப்புற ஏழை எளிய மாணவர்களை டாக்டர் படிப் புக்கு சேரவிடாமல் தடுக்கும் உயர்ஜாதி ஆதிக்க சூழ்ச்சி என்ப தால் அதை எதிர்த்து தமிழ்நாடு முழுவதும் கழக இளைஞரணி மாணவரணி சார்பில் எதிர்வரும் 21.3.2017 அன்று நடைபெறவுள்ள நீட் நுழைவுத் தேர்வு எதிர்ப்பு வாகனப் பேரணியை வரவேற்று பின் அவர்களுடன் பங்கேற்று விருத்தாசலத்தில் நடைபெற வுள்ள நிறைவு நிகழ்ச்சியில் சிறப்பாக பங்கேற்பது எனவும் முடிவு செய்யப்படுகிறது.

3) கழக அமைப்பு உள்ள பகுதிகளில் தெருமுனைப் பிரச்சாரக் கூட்டங்களை நடத்தி டுவதென முடிவு செய்யப்படு கிறது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner