எழுத்துரு அளவு Larger Font Smaller Font

குடந்தை கலந்துரையாடலில் தீர்மானம்
குடந்தை, மார்ச் 19- குடந்தை மாவட்ட திராவிடர் கழக கலந் துரையாடல் கூட்டம், குடந்தை பெரியார் மாளிகையில் 16.3.2017 வியாழன் மாலை 6 மணியளவில் மாவட்ட திரா விடர் கழக தலை வர் தாராசுரம் வை.இளங்கோவன் அவர்களது தலைமையிலும், மாவட்ட கழக செயலாளர் குடந்தை க. குருசாமி, மாநில பகுத்தறிவா ளர் கழக முன்னாள் தலைவர் குடந்தை.தி.இராஜப்பா ஆகி யோர் முன்னிலையிலும் நடை பெற்றது.

அன்னை மணியம்மையார் பிறந்த நாளில் பெண்களை இழி வுப்படுத்தும் மனுதர்ம நகலை எரிக்கும் போராட்டத் தில் மார்ச் -10ஆம் தேதியன்று தஞ்சையில் குடந்தை மாவட்ட கழகம் சார்பாக கலந்துகொண்டு சிறை சென்ற மகளிர் அணியினரை பாராட்டியும்,  மருத்துவ நுழைவு தேர்வு (நீட்) எதிர்த்து 21.3.2017 அன்று நடைபெற இருக்கும் இரு சக்கர வாகன பரப்புரைபற்றியும், ஏப்ரல் 8, 9 தேதிகளில் தந்தை பெரியாரின் வாழ்க்கை வரலாற்று தொகுதி கள் மற்றும் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களின் வாழ்வியல் சிந்தனை பாகம் 12 நூல்கள் வெளியீடு ஆகியன பற்றியும் விளக்கிக் கூறி கலந்து ரையாட லுக்கு வந்திருந்த அனை வரையும் வரவேற்றும் மாவட்ட கழக செயலாளர் குடந்தை க. குரு சாமி உரையாற்றினார்.

குடந்தை கழக மாவட்டத் தலைவர் வை.இளங்கோவன் தலைமையேற்றார். கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய வர்கள். மாவட்ட துணைத் தலை வர் வலங்கை, வே. கோவிந்தன், குடந்தை பெருநகர கழக தலைவர் கு.கவுதமன், மாவட்ட வழக்குரை ஞரணி அமைப்பாளர் கு.நிம்மதி, மாவட்ட மகளிரணி தலைவர் வ.ஜெயமணிகுமார், மாவட்ட மகளிரணி செயலாளர் கலைச் செல்வி இராஜப்பா, துணைத் தலைவர் எம்.திரிபுரசுந்தரி, மாவட்ட மகளிர் பாசறை செய லாளர் இராணி குருசாமி, குடந் தை பெருநகர செயலாளர் வழக் குரைஞர் பீ.ரமேசு, மாவட்ட பகுத்தறிவாளர் கழக துணைத் தலைவர் கதிருஞானசம்பந்தம், மாவட்ட இளைஞரணி தலைவர் பொறியாளர்.க.சிவக்குமார், பவுண்ட ரீகபுரம் திராவிடர் கழக பொறுப்பாளர். கே.முருகேசன், வலங்கை ஒன்றிய துணைத் தலைவர் ஆண்டாங்கோயில் மா. வீரமணி,திருவிடைமருதூர் ஒன்றிய மகளிரணி அமைப்பா ளர் எம்.அறிவுமனி, பாபநாசம் ஒன்றிய செயலாளர் க.கலிய மூர்த்தி, குடந்தை ஒன்றிய செய லாளர் கோவி.மகாலிங்கம், ஆசி ரியர் வலங்கை.விஜய் பூபாலன், திருநாகேஸ்வரம் தோழர் டி.கே.விஜயகுமார், திருவிடைமருதூர் ஒன்றிய செயலாளர் நா.முருகா னந்தம், கும்பகோணம் நகர துணைத் தலைவர் என்.காம ராஜ் ஆகியோர் கலந்து கொண் டனர்.

இறுதியாக மாநில பகுத்தறி வாளர் கழக முன்னாள் தலை வர் தி.இராஜப்பா சிறப்புரை யாற்றி னார். கூட்டத்தில் கீழ்க் கண்ட தீர் மானங்கள் நிறை வேற்றப்பட்டது.

தீர்மானம் - 1: திருவாரூர் மாநாட்டில் தமிழர் தலைவர் அவர் களால் அறிவிக்கப்பட்ட அன்னை மணியம்மையார் பிறந்தநாளில் பெண்களை இழிவுபடுத்தும் மனு தர்ம நகலை எரிக்கும் போராட் டத்தில் மார்ச் - 10 அன்று தஞ்சை யில் குடந்தை மாவட்டம் சார் பாக கலந்துகொண்ட 49 கழகத் தோழர்களில் மகளிர் 29 பேர் மனுதர்மத்தை எரித்து கைதாகி சிறை சென்றார்கள். அவர்களுக்கு குடந்தை பெரியார் மாளிகையில் மார்ச் மாதத்திற்குள் பாராட்டு விழா நடத்துவது என தீர்மானிக் கப்பட்டது.

தீர்மானம் - 2: மருத்துவ நுழை வுத்தேர்வை எதிர்த்து திராவிடர் கழக இளைஞரணி, மாணவரணி நடத்தும் நான் காம் குழு இரு சக்கர வாகன பரப்புரை பயணத் தில் 21.3.2017 அன்று அய்யம் பேட்டை பாபநாசம், சுவாமி மலை வழியாக செல்லும் பயணத்திற்கு குடந்தை மாவட்ட கழக எல்லையான மாத்தூரி லிருந்து சுவாமிமலை வரை தோழர்களை ஒருங்கிணைத்து வாகனத்தில் பேரணியுடன் எல்லை முடியும் வரை கீழ்கண்ட பொறுப்பாளர்கள் பொறுப்பேற்று வர வேண்டும் என தீர்மானிக்கப் படுகிறது.
வ.அழகுவேல் - மாவட்ட அமைப்பாளர், சு.துரைராசு- --- மாவட்ட துணைச் செயலாளர், தங்க பூவானந்தம்- -- பாபநாசம் ஒன்றிய தலைவர், சு.கலிய மூர்த்தி -- பாபநாசம் ஒன்றிய செயலாளர், க.திருஞானசம்  பந்தம் - --மாவட்ட பகுத்தறி வாளர் கழக துணைத்தலைவர், வி. மோகன் -- மாவட்ட பகுத்தறி வாளர் கழக செயலாளர்

தீர்மானம் 3: சுவாமிமலையிலிருந்து -அசூர் வழியாக நீலத்த நல்லூர் வரை பேரணி யுடன் சென்று வழியனுப்ப கீழ்க்கண்ட பொறுப்பாளர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
கு.கவுதமன் -- குடந்தை பெரு நகர தலைவர், கசிவக்குமார் மாவட்ட இளைஞரணி தலைவர், த.ஜில் ராஜ் -- குடந்தை ஒன்றிய தலைவர், கோவி.மகா லிங்கம் -- குடந்தை ஒன்றிய செய லாளர் (தெற்கு), அசூர்.செல்வம் -- குடந்தை ஒன்றிய செயலாளர் (வடக்கு).

தீர்மானம் -4: அய்ந்தாம் குழுபிரச்சார பேரணி குடவாச லிலிருந்து -திருச்சேறை, நாச்சி யார் கோயில், சாக்கோட்டை வழியாக குடந்தை தாராசுரம் (மதியவிருந்து) வந்தடைந்து மீண்டும் சோழபுரம், திருப்ப னந்தாள் வழியாக அணைக்கரை வரை உள்ள குடந்தை மாவட்ட கழக எல்லைக்குள் பேரணியை வரவேற்று அழைத்துச் சென்று எல்லைவரை வழியனுப்ப கீழ்க்கண்டுள்ள பொறுப்பா ளர்கள் கேட்டுக் கொள்ளப்படு கிறார்கள்.
வலங்கை வே.கோவிந்தன் -- மாவட்டத் துணைத்தலைவர், இரா.கு.நிம்மதி - -மாவட்ட வழக்குரைஞரணி அமைப்பாளர், பீ.இரமேசு -- வழக்கறிஞர், குடந்தை பெருநகர செயலாளர், எம்.என்.கணேசன் -- திருவிடை மருதுர் ஒன்றிய துணைத்தலை வர், நா.முருகானந்தம் -- திரு விடைமருதூர் ஒன்றிய செய லாளர், க.சந்திரசேகரன் -- வலங்கை ஒன்றிய தலைவர்.

தீர்மானம் 5: நீட் நுழைவுத் தேர்வை எதிர்த்து நடைபெறும் திராவிடர் கழக இளைஞரணி, மாணவரணி பேரணியின் சார் பாக கீழ்க்கண்ட இடங்களில் பரப்புரை செய்ய தீர்மானிக் கப்படுகிறது.
1. பாபநாசம் ஒன்றியம்: மாத்தூர், அய்யம்பேட்டை, பாபநாசம்
2. திருவிடைமருதூர் ஒன்றி யம்: திருச்சேறை, நாச்சியார் கோயில்
3. குடந்தை ஒன்றியம் மற்றும் நகரம்: குடந்தை புதிய பேருந்து நிலையம், தாராசுரம், சோழபுரம்

தீர்மானம் - 6: நீட் நுழைவுத் தேர்வை எதிர்த்து திராவிடர் கழக இருசக்கர வாகன பேரணி ஊர்வ லம், மதிய உணவு ஏற்பாடு, பரப் புரை கூட்டங்கள் நடத்துவது தொடர்பான பணிகளுக்கு மாவட்ட கழக தலைவர் வை.இளங்கோ வன் (செல் : 9941008969), குடந்தை மாவட்ட கழக செய லாளர் குடந் தை க.குருசாமி (செல் : 9442200823) ஆகியோரை தொடர்பு கொள்ள கழக பொறுப்பாளர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

தீர்மானம் - 7: தந்தை பெரி யாரின் வாழ்க்கை வரலாற்று பகுதிகளையும், கழக தலைவர் ஆசிரியர் அவர்களின் வாழ்வி யல் சிந்தனைபாகம்--12, ஆகிய இரண்டு நூல்களுக்கும் ஏப்ரல் 8 மற்றும் 9 ஆகிய நாட்களில் குடந்தை கழக மாவட்டம் பாபநாசம் ஒன்றியத்தில் தலை மை கழக அறிவிப்பிற்கு இணங்க நூல் அறிமுக விழா சிறப்பாக நடத்துவதென தீர்மானிக்கப்படு கிறது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner