எழுத்துரு அளவு Larger Font Smaller Font

ஆண்டிமடம், மார்ச் 25- தென்காசி யில் புறப்பட்ட நீட் நுழைவுத் தேர்வு எதிர்ப்பு இருசக்கர வாகன பிரச்சார பயணம் அரியலூர் மாவட் டத்தில் தா.பழுர் செயங்கொண் டத்தை அடுத்து ஆண்டிமடம் கடைவீதிக்கு 21.3.2017 அன்று மாலை 4 மணிக்கு வந்தது.

மாவட்ட செயலாளர் கி. சிந்தனைச்செல்வன் தலைமை யில் ஒன்றிய செயலாளர் தியாக. முருகன், மாவட்ட இ.அணி செயலாளர் க.கார்த்திகேயன், மாவட்ட மாணவரணி தலை வர் த.தர்மேந்தர், ஒன்றிய தலை வர் இரா.தமிழரசன், ஒன்றிய அமைப்பாளர் த.கு.பன்னீர் செல்வம், நகர தலைவர் ந.சுந் தரம், ஒன்றிய இ.அ.தலைவர் க.செந்தில், இளைஞரணி ப. சுந்தரமூர்த்தி, சிலம்பூர் இரா மச்சந்திரன், வடுகர்பாளையம் இராயர், ஒன்றிய துணைத் தலைவர் இரா.எ.இராமகிருட்டி ணன், திருக்களப்பூர் சத்யசீலன், பிரபு, நாகராஜ், அஜீத், இளவழ கன், அருள்முருகன், குரு உள் ளிட்ட தோழர்கள் பிரச்சாரப் படையை வரவேற்றனர். ராஜ பாளையம் மாவட்ட தலைவர் இல.திருப்பதி, மாநில மாண வரணி துணைச் செயலாளர் ச.அஜிதன் ஆகியோர் சிறப்பு ரையாற்றினர். திரளான பொது மக்கள் கேட்டு விளக்கம் பெற் றனர்.

Comments  

 
#1 tamilvanan 2017-03-27 16:15
மாணவர்கள் அல்லவா எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்? தமிழ் நாட்டில் எட்டு இடங்களில் நீட் தேர்வு நடைபெற இருக்கிறது. பல மாணவர்களும் தேர்வில் பங்கு கொள்ள யிருக்கின்றனர். இப்போது இது தேவையா?
இக்கருத்துக்கு உங்கள் கருத்து .?
 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner