எழுத்துரு அளவு Larger Font Smaller Font

கருங்கல், மார்ச் 25- அன்று  குமரி மாவட்ட  திராவிடர் கழக  தலை வர்  மா.  மணி  இல்ல மண விழா,  மார்ச்  29  கருங்கலில்  நடக்கும்  பெரியார்  பிறந்தநாள் விழா  பொதுக்கூட்டத்தில் பங்கேற்ப தற்காக  தமிழர் தலைவர்  அவர்கள்  குமரி  மாவட்டம்  வருகிறார்கள்.

அதற்கான  ஏற்பாட்டுப் பணி களை  மாவட்ட    தலைவர்  மா.மணி,  மாவட்ட  செயலாளர்  சி.  கிருஷ்ணேஸ்வரி, மண்டல இளைஞரணி செயலாளர்  கோ.வெற்றி  வேந்தன்,  பொதுக் குழு உறுப்பினர்  மா. தயாளன்,  நகர  துணை தலைவர்  கவிஞர்  எச்.  செய்க்முகமது ஆகியோர் பல  நாட்களாக  செய்து  வருகின்ற னர்.

இந்நிலையில்  நேற்று (24.3.2017) கழக  பொதுச்செயலா ளர் தஞ்சை  இரா.  ஜெயக்குமார்,  அமைப்பு  செயலாளர்  வே.  செல்வம்   ஆகியோர் குமரி  மாவட்டம்  கருங்கலுக்குவந்து விழா  மேடை,  ஒலி, ஒளி  மற் றும்  இதர பணிகள்  குறித்து   பார்வையிட்டு  பொறுப்பாளர் களுக்கு  ஆலோசனை  வழங்கினர்.

மாவட்ட செயலாளர்  சி.  கிருஷ்ணஸ்வரி, மண்டல  இளைஞரணி செயலாளர்  கோ. வெற்றி  வேந்தன்,  நகர  துணை  தலைவர்  கவிஞர்  எச்.  செய்க் முகமது மாநில  மாணவ ரணி துணைச் செயலாளர்  இரவி. தர்மசீலன்  ஆகியோர் உடனிருந்தனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner