எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

 

வேதாரண்யம், மார்ச் 30-  முது பெரும் பெரியார் பெருந் தொண்டர் சட்ட சட்ட எரிப்பு போர் வீரர் கோடியக்கரை வீர.சுப்பிரமணியன் (வயது 96) 24.3.2017 இரவு இயற்கை எய் தியதையொட்டி மாவட்டத் தலைவர் கி.முருகையன், மாவட் டச் செயலாளர் ச.பொன்முடி, பொதுக்குழு உறுப்பினர்கள் கி.இராசேந்திரன், சி.இராம சாமி, ப.க. அமைப்பாளர் சி. பஞ்சாபகேசன், வேதை நகரத் தலைவர் தெ.ஆறுமுகம், கோ. சு.மணி, இராசி.கதிரவன், மா. மீனாட்சிசுந்தரம் (திமுக) ஆகி யோர் மாலை அணிவித்து மரி யாதை செலுத்தினர்.

25.3.2017 அன்று மாலை 3 மணிக்கு மாநில விவசாய தொழிலாளர் அணி தலைவர் வீ.மோகன் தலைமையில் இரங் கல் கூட்டம் நடைபெற்றது. திருத்துறைப்பூண்டி ஒன்றியத் தலைவர் சு.சித்தார்த்தன், வேதை ஒன்றியத் தலைவர் நா.இராமையன், திருவாரூர் மாவட்டச் செயலாளர் சு.கிருட்டிணமூர்த்தி, மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் சி.கலைவாணி, கவிஞர் மாசி (திமுக), அனந்தராமன் (காங் கிரஸ்), கோ.பழனிச்சாமி (அதி முக) ஆகியோர் உரையாற்றினர்.

நிறைவாக திருத்துறைப் பூண்டி நகரத் தலைவர் தி. குணசேகரன் உரையாற்றினார். அவர் உரையில்: 1958இல் வீர. சுப்பிரமணியன் தந்தை பெரி யார் தலைமையில் திருமணம் செய்து கொண்டதையும், 1938 இல் இந்தி எதிர்ப்பு போர் மற் றும் சட்ட எரிப்பு போராட் டத்தில் கலந்து கொண்டு சிறை சென்றதையும், தனது மகன் களுக்கு காமராஜ், ஜவகர்லால் நேரு என்றும் மகள்களுக்கு இந்திராகாந்தி, பெரியார் செல்வி என்று பெயர் வைத்ததையும், மகள் பெரியார் செல்விக்கு கோவில் மண்டபத்தில் திரும ணம் செய்ய நேரிட்டதால், தன் மகள் திருமணத்திற்கே அவர் செல்லாதவர் என்றும், அவர் ஊரில் பெரியார் படிப்பகத்தை உருவாக்கி, அதை தமிழர் தலைவரை அழைத்து திறப்பு விழா செய்தவர் என்றும், தான் இறந்த பின் எந்த மூட சடங் கும் கூடாது என்று ஏற்கெனவே கூறியதை குடும்பத்தார் ஏற்று நடத்திய விதத்துக்கு நன்றி தெரிவித்தும் நிறை வாழ்வு வாழ்ந்தவர். பெருவாழ்வு வாழ்ந்தவர் மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்த பெரியார் பெருந்தொண்டர் வீர.சுப்பிரமணியம் என்று கூறி நிறைவு செய்தார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner