கிருட்டிணகிரி, மார்ச் 30- தமிழ் நாடு முழுவதும் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் வழிகாட்டுதலின்படி தமிழ்நாட்டில் அய்ந்து முக்கிய நகரங்களிலிருந்து கடந்த 18.3.2017 தொடங்கி விருத்தாச லத்தில் 21.3.2017 அன்று நிறைவு பெற்றன.
18.3.2017 அன்று தருமபுரி யில் தொடங்கிய இரண்டாம் குழு இருசக்கர வாகன பரப் புரைப் பயணக் குழுவினை தலைமை செயற்குழு உறுப் பினர் உரத்தநாடு இரா.குண சேகரன் தொடங்கி வைத்தார். அங்கு மாநில மாணவரணி துணைச் செயலாளர் தருமபுரி த. யாழ்திலிபன் தலைமையில், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் ஆத்தூர் அ.சுரேசு ஒருங்கிணைப்பில் தஞ்சை மாவட்ட மாணவரணி தலை வர் வே.தமிழ்செல்வன் விளக்க உரையுடன் மருத்துவ நுழைவு (நீட்) தேர்வை எதிர்த்து இரு சக்கர வாகன பரப்புரை பய ணக்குழுவினருக்கு கிருட்டிண கிரி மாவட்ட எல்லை சப்பா னிப்பட்டியில் காவேரிப்பட் டணம் ஒன்றிய கழகச் செயலா ளர் சிவ.மனோகர் தலைமையி லும். பையூரில் மேனாள் மாவட்டச் செயலாளர் பெ.மதிமணியன் தலைமையிலும், காவேரிபட்டணத்தில் மாவட்ட இளைஞரணி அமைப் பாளர் தியாக.கதிரவன் தலைமையி லும், கிருட்டிணகிரியில் மாவட்ட இளைஞரணி தலைவர் இல. ஆறுமுகம் தலைமையிலும், பருகூரில் மாவட்ட இளைஞ ரணி செயலாளர் வே.புகழேந்தி தலைமையிலும் சிறப்பாக முறையில் இருசக்கர வாகன பரப்புரை பயணக்குழுவினரை கைத்தறி அணிவித்து வரவேற் றனர்.
கிருட்டிணகிரி மாவட்ட தலைவர் மு.துக்காராம், மாவட்டச் செயலாளர் கோ.திராவிடமணி, மாவட்ட துணைத் தலைவர் த.அறிவர சன், மாவட்ட இணைச் செய லாளர் சு.வனவேந்தன், காவே ரிப்பட்டணம் ஒன்றியத் தலை வர் சி.சீனிவாசன், கிருட்டிண கிரி நகரச் செயலாளர் கா.மாணிக்கம், நகர அமைப்பாளர் அ.கோ.இராசா ஆகியோர் முன்னிலையில் இருசக்கர வாகனப் பரப்புரைப் பயணக் குழுவினரை மாவட்ட ப.க. தலைவர் ஈ.லூயிசுராசு, மாவட்ட ப.க. செயலாளர் தி.அன்புச் செழியன், மாவட்ட ப.க. துணைத் தலைவர் செ.ப. மூர்த்தி, பையூர் கிளை தலை வர் ப.பெரியசாமி, பெ.செல் வேந்திரன், தமிழ்செல்வி மதி மணியன், சின்னபாப்பா பெரி யசாமி, காவேரிப்பட்டணம் நகர அமைப்பாளர் பி.விஜய குமார், க.ச.இனியவன், மாவட்ட மாணவரணி, தலைவர் சீ.வீரமணி, ஒன்றிய துணைச் செயலாளர் புலியாண்டூர் சி.இராசா, காவேரிப்பட்டணம் ஒன்றிய ப.க. தலைவர் அ. வெங்கடாசலம், ஓசூர் சரவ ணன் உள்பட கழகத் தோழர்கள் திரளாக பங்கேற்று சிறப்பாக வரவேற்றனர்.
பரப்புரை பயணக்குழுவி னரை தலைமைச் செயற்குழு உறுப்பினர் தா.திருப்பதி, மாநில அமைப்புச் செயலாளர் ஊமை.செயராமன், மண்டலத் தலைவர் பழ.வெங்கடாசலம், மண்டலச் செயலாளர் கரு.பாலன், மாநில ப.க.துணைத் தலைவர் அண்ணா.சரவணன், கிருட்டிணகிரி விடுதலை வாசகர் வட்டத் தலைவர் வெ. நாராயணமூர்த்தி, தமிழ்நாட்டு கல்வி இயக்க ஒருங்கிணைப் பாளர் ஒப்புரவாளன், பருகூர் அறிவியல் இயக்க பொறுப் பாளர் உள்ளிட்டோர் இருசக்கர வாகன பரப்புரை பயணக்குழு இளைஞர்களை மாணவர்க ளைப் பாராட்டி வாழ்த்துரை வழங்கி சிறப்பித்தனர்.
இருசக்கர வாகன பய ணக்குழு ஒருங்கிணைப்பாளர் ஆத்தூர் அ.சுரேசு, பயணக்குழு தலைவர் தருமபுரி த.யாழ்திலிபன், பேச்சாளர் சிவ.தமிழ்செல்வன் ஆகியோருக்கு சிவ.மனோகர், ª.மதிமணியன், வே.புகழேந்தி ஆகியோர் கைத் தறி ஆடை அணிவித்து சிறப் பித்தனர்.
கிருட்டிணகிரி மாவட்ட இளைஞரணி, மாணவரணி தோழர்கள் 15 இருசக்கர வாக னத்தில் மாவட்ட எல்லை சப்பானிப்பட்டியில் வரவேற்று மாவட்ட எல்லை முடிவு திருப்பத் தூர் வரை சென்று வழியனுப்பி வைத்துவிட்டு திரும்பினர்.