எழுத்துரு அளவு Larger Font Smaller Font

தருமபுரி, மார்ச் 30-   தருமபுரி மண்டல திராவிடர் கழக பொறுப் பாளர்கள் கலந்துரையாடல் கூட்டம் மத்தூர் நல்லாசிரியர் இந்திரா காந்தி அண்ணா.சரவ ணன் இல்லத்தில் 26.3.2017 அன்று காலை முதல் மதியம் வரை நடைபெற்றது.

தலைமை செயற்குழு உறுப்பினர் கே.சி.எழிலரசன் தலைமையேற்றார். மாநில அமைப்புச் செயலாளர் ஊமை. ஜெயராமன், கிருட்டினகிரி மாவட்டத் தலைவர் மு.துக்கா ராம், தருமபுரி மாவட்ட தலை வர் வீ.சிவாஜி, திருப்பத்தூர் மாவட்ட செயலாளர் வி.ஜி. இளங்கோ, மாநில பகுத்தறிவா ளர் கழக செயல் தலைவர் தகடூர் தமிழ்ச்செல்வி, மாநில பகுத்தறிவாளர் கழக துணை தலைவர் அண்ணா.சரவணன் ஆகியோர் முன்னிலை ஏற்ற னர். கூட்டத்தின் நோக்கம் குறித் தும் முகாமை செம்மையாக நடத்துதல் குறித்தும் தலை மைச் செயற்குழு உறுப்பினர் உரத்தநாடு இரா.குணசேகரன், மண்டல தலைவர் பழ.வெங் கடாசலம் ஆகியோர் கருத்துரை யாற்றினர்.

அவரவர் பங்களிப்பு குறித் தும் எப்படி நடத்தலாம் என்பது குறித்தும் தருமபுரி மாவட்ட செயலாளர் காமராஜ், கிருட்டி னகிரி மாவட்ட இணைச் செய லாளர் வனவேந்தன், கிருட்டின கிரி மாவட்ட துணைத் தலை வர் சுப்பிரமணி, அறிவரசன், திருப்பத்தூர் மாவட்ட இணைச் செயலாளர் அரங்க. இரவி, திருப்பத்தூர் மாவட்ட ப.க. தலைவர் சி.தமிழ்ச்செல்வன், திருப்பத்தூர் மாவட்ட ப.க. ஆசிரியரணி தலைவர் இரா.பழனி, மாவட்ட இளைஞரணி தலைவர் தே.பழனிச்சாமி, ஊற் றங்கரை ஒன்றிய செயலாளர் இர.அன்பு, மத்தூர் ஒன்றிய தலைவர் கி.முருகேசன், மத் தூர் நகர தலைவர் சி.வெங்கடா சலம், மாவட்ட மகளிர் பாசறை செயலாளர் நல்லாசிரியர் மு. இந்திரா காந்தி, ஒன்றிய மகளி ரணி செயலாளர் ம.ஜான்சி ராணி, கிருட்டினகிரி நகர தலை வர் கா.மாணிக்கம், மாவட்ட ப.க. ஆசிரியரணி இணைச் செயலாளர் திருநாவுக்கரசு, மாவட்ட மாணவரணி செயலா ளர் மு.சிலம்பரசன், மாவட்ட மாணவரணி கு.தமிழ்க் குடி மகன், தருமபுரி மாவட்ட மக ளிரணி செயலாளர் கி. சங்கீதா, அரசம்பட்டி சக்தி, மத்தூர் ஒன் றிய மாணவரணி இராமஜெயம், வெங்கட்ராமன், தனஞ்ஜெயன், மற்றும் தோழர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக கட வுள் மறுப்பு பெரியார் பிஞ்சு ஜா.இர. நிலவன் கூறினார். தருமபுரி மண்டல செயலாளர் கரு.பாலன் அனைவரையும் வரவேற்றார். மத்தூர் ஒன்றிய தலைவர் கி.முருகேசன் அனை வருக்கும் பதநீர் கொடுத்து உபசரித்தார். மண்டல இளை ஞரணி செயலாளர் வ.ஆறு முகம் நன்றி கூறினார்.கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.

தீர்மானம்.1. வருகின்ற ஏப்ரல் 7, 8, வெள்ளி, சனிக் கிழமைகளில் திருப்பத்தூர் கழக மாவட்டம் ஏலகிரியில் நடைபெறவுள்ள பெரியாரியல் பயிற்சி முகாமை மிகச் சிறப் பாக நடத்துவது எனவும், திருப் பத்தூர், தருமபுரி, கிருட்டின கிரி, மாவட்டங்களைசார்ந்த இளைஞர்கள், மாணவர்களை பெருமளவிற்கு பங்கேற்க செய் வது என தீர்மானிக்கப்படுகிறது.

தீர்மானம்: 2. பெரியாரியல் பயிற்சி முகாமிற்கு வருகை தரும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர் களுக்கு தருமபுரி மண்டல திரா விடர் கழகம் சார்பாக எழுச்சிமிகு வரவேற்பு அளிப்பது என தீர்மானிக்கப்படுகிறது.

தீர்மானம்: 3. மதவெறி கூட்டத்தால் தமிழகத்திற்கு ஏற் படவுள்ள பேராபத்தினை முறி யடிக்கும் வகையில் சிற்றூர் தொடங்கி, பெருநகரங்கள் வரை தெருமுனை பிரச்சார கூட்டங்கள் நடத்துவது என முடிவு செய்யப்படுகிறது.

தீர்மானம்: 4. தமிழர் தலை வர் அவர்களின் அறிவுறுத்தலை ஏற்று பெண்களை இழிவுபடுத் தும் மனுதர்மத்தை தீயிட்டு கொளுத்தியதில் பங்கேற்ற மக ளிரணி, மகளிர் பாசறை தோழி யர்களுக்கும், நுழைவு தேர்வை (நீட்) எதிர்த்து நடைபெற்ற இரு சக்கர வாகன பிரச்சார பய ணத்தை தருமபுரியில் தொடங்கி வைத்த தலைமைச் செயற்குழு உறுப்பினர் உரத்தநாடு இரா. குணசேகரன் அவர்களுக்கும் பங்கேற்ற தோழர்களுக்கும், முழுமையாக ஒத்துழைப்பு நல்கி ஊக்கப்படுத்திய மாநில, மாவட்ட, மண்டல,ஒன்றிய, நகர பொறுப்பாளர்களுக்கும் இக் கூட்டம் உளமார்ந்த நன் றியை தெரிவித்துக் கொள்கிறது.

தீர்மானம்: 5. தருமபுரியில் சேலம், தருமபுரி, மண்டலத் திற்குட்பட்ட தருமபுரி, திருப் பத்தூர், கிருட்டினகிரி, சேலம், மேட்டூர், ஆத்தூர், கழக மாவட்ட தோழர்கள் காவிரி யில் மேகதாது அணை கட்டு வதை எதிர்த்து நடந்த போராட் டத்தில் கலந்து கொண்டு சிறப் பித்த தலைமைச் செயற்குழு உறுப்பினர் உரத்தநாடு இரா. குணசேகரன், தலைமைக் கழக சொற்பொழிவாளர் தஞ்சை இரா.பெரியார் செல்வன் ஆகி யோரையும் தருமபுரி மண்டல திராவிடர் கழகம் பாராட்டி மகிழ்கிறது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner