எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுச்சேரி, மார்ச் 31 மத்திய பா.ஜ.க. அரசு நீட் நுழைவுத் தேர்வை மாநில அரசுகளின் மீது திணித்து தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட கிராம புற மாணவர்களின் கல்வி உரி மையையும், இதனால் வேலை வாய்ப்பையும் முற்றிலும் பாழக்கும் முயற்சியை கண் டித்து "வேண்டாம்! வேண் டாம்! நீட் நுழைவு தேர்வு! புதுச்சேரி மற்றும் தமிழகத் திலும் அறவே வேண்டாம்!" என முழங்கி திராவிடர் கழகத்தின் சார்பில் 21.3.2017 அன்று காலை 10 மணியளவில் இராஜா நகர் பெரியார் படிப் பகத்தில் இருந்து புறப்பட்டு புதிய பேருந்து நிலையம் திருவள்ளுவர் சிலை அருகில் பிரச்சாரம் நடைபெற்றது.

புதுச்சேரி மாநில திராவிடர் கழக தலைவர் சிவ.வீரமணி பிரச்சாரத்தை தொடங்கி வைத்து உரையாற்றினார். இந் நிகழ்வுக்கு புதுச்சேரி மண்டல தலைவர் இர.இராசு, புதுச்சேரி மண்டல செயலாளர் கி.அறி வழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பிரச்சார குழுவின் ஒருங்கிணைப்பாளரும், மாநில மாணவரணி செயலாள ருமான ச.பிரின்சு என்னாரெசு பெரியாரின் துவக்க உரைக்குப் பின் திராவிடர் கழக தலை மைக் கழக பேச்சாளர் பா.மணி யம்மை அவர்கள் 'நீட்' தேர்வை திராவிடர் கழகம் மாத்திரமல்லாது தமிழகத் திலும், புதுச்சேரியிலும் உள்ள அனைத்து அரசியல் கட்சி களும், அமைப்புகளும் அதி லும் பெரியாரிய அமைப்புகள் மிக தீவிரமாக எதிர்த்து வரு வதை விளக்கிப் பேசினார்.

பிரச்சார குழுவினர் இரு சக்கர வாகனங்களில் பேரணி யாக நீட் எதிர்ப்பு முழக்கங் களுடனும், தலைவர் தந்தை பெரியார் வாழ்க என்ற முழக் கத்துடன் ஒலி பெருக்கியில் அறிவிப்பு செய்த வண்ணம் தந்தை பெரியார் சிலைக்கு மாணவரணி செயலாளர் ச.பிரின்சு என்னரெசு பெரியார், மாநில மாணவரணி துணை செயலாளர் நா.பார்த்திபன் ஆகியோர் மாலை அணிவித்து விட்டு திருவள்ளுவர் சாலை, நெல்லித்தோப்பு ரெட்டியார் பாளையம், மூலைகுளம் வழியாக வில்லியனூர் வந்த டைந்தனர். வில்லியனூரில் அறிஞர் அண்ணா சிலைக்கு புதுச்சேரி மண்டல செயலாளர் கி.அறிவழகன் முன்னிலையில் பிரின்சு என்னரெசு பெரியார், நா.பார்த்திபன் ஆகியோர் மாலை அணிவித்தனர். அண்ணா சிலை அருகில் நீட் நுழைவுத் தேர்வு எதிர்ப்பு பாடலை தோழர்கள் மேளம் அடிக்க பிரின்சு பாடினார். தலைமைக் கழக சொற்பொழிவாளர் பா.மணியம்மை நீட் எதிர்ப்பு உரையை ஆற்றினார். புதுச்சேரி மண்டல இளைஞரணி தலை வர் தி.இராசா நன்றி கூறினார். திமுக பொறுப்பாளர் பூக்கடை சண்முகம் அனைவருக்கும் குளிர்பானங்களை வழங்கி மகிழ்ந்தார்.

வில்லியனூர் பேருந்து நிறுத்தம் அருகில் பிரச்சாரம் நடைபெற்றது. மாணவரணி செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார், பா.மணியம்மை ஆகியோர் நீட் எதிர்ப்பு பிரச் சார உரையாற்றினர். பகுத்தறி வாளர் கழக செயலாளர் கைலாச நெ.நடராசன் நன்றி கூறினார்.

சென்னையிலிருந்து இரு சக்கர வாகனம், ஜீப் மற்றும் ஒலி பெருக்கி பொருத்திய சரக்குந்து வாகனத்துடன் வருகை தந்த சென்னை மண் டல செயலாளர் வி.பன்னீர் செல்வம், மாநில பகுத்தறி வாளர் கழக துணை செயலாளர் ஆ.வெங்கடேசன், மாவட்ட இளைஞரணி தலைவர் கும் முடிப்பூண்டி, சு.நாகராசன் மாவட்ட இளைஞரணி செய லாளர் கும்முடிப்பூண்டி க.ச.க. இரணியன், வடசென்னை மாவட்ட இளைஞரணி செய லாளர் பா.தளபதி, மாவட்ட துணை தலைவர் ஆவடி ஏழுமலை, மாவட்ட துணை செயலர் ஆவடி க.பாலமுரளி,  மாவட்ட இளைஞரணி தலை வர் பா.சு.ஓவியச்செல்வன், மாவட்ட மாணவரணி தலை வர் கு.மணிமாறன், ஆவடி இளைஞரணி செயலாளர் மதுரவாயல் த.சரவணன், வடசென்னை மாணவரணி தோழர் ப.கலைமதி, தென் சென்னை திராவிடர் மகளிர் பாசறை தோழர் மு.பவானி, பெரம்பூர் மாணவரணி அமைப்பாளர் பா.பார்த்திபன், வடசென்னை திராவிடர் மகளிர் பாசறை செயலாளர் த.மரகதமணி, வடசென்னை மாணவரணி தோழர் கா.காரல்மார்ஸ், ஊடகவியாளர் சி.முரளிகிருஷ்ணன், பிரச்சார வாகன ஓட்டுநர் மு.முருகன், ந.மகேஷ், செவிலியர் தோழர் அ.நித்யா ஆகியோர் அடங்கிய பிரச்சாரக் குழுவுடன் புதுச்சேரி மண்டல செயலாளர் கி.அறி வழகன், இளைஞரணி தலை வர் திராவிட இராசா, புதுச்சேரி பொதுக்குழு உறுப்பினர் டிஜிட்டல் லோ.பழனி, உழவர்கரை நகராட்சி கழக அமைப்பாளர் ஆ.சிவராசன் ஆகிய தோழர்களுடன்  இரு சக்கர வாகன பிரச்சார பேரணி வடமங்கலம், பங்கூர் மும் மொழி நாயக்கன்குப்பம், பங்கூர் வழியாக அரியூர் வந்தடைந்தது. தலைவர் தந்தை பெரியாருடன் பிரச்சார பயணங்களில் பயணித்தவரும், தமிழக அரசு பள்ளி கல்விதுறை அதிகாரியுமான ஓய்வு பெற்ற ஆசிரியர் பெரியார் பெருந்தொண்டர் கி.வ.இராசன், புதுச்சேரி அரசின் மகளிர் மேம்பாட்டு கழக ஒருங்கிணைப்பாளரும், ஓய்வு பெற்ற அலுவலர் லலிதா இராசன் அவர்கள் ஆகியோர் வரவேற்று இளநீர், வாழைப்பழம் போன்றவை களை வழங்கி மகிழ்ந்தனர்.

அரியூரில் சிறப்பான வரவேற்பு தந்த மாணவர்கள்

பெரியார் பெருந்தொண்டர் கே.வி.இராசன் அவர்களிடம் பயின்றவரும், அவரின் அன் புக்கு பாத்திரமான மாண வரும், தனியார் பள்ளியான சிறீராமச்சந்திரா வித்யாலயா உயர்நிலைப் பள்ளியின் மேலான் இயக்குநருமான சங்கர நாராயணன் அவர்களின் ஏற்பாட்டில் பள்ளியின் ஆசிரி யர்கள், மாணவர்கள் அனை வரும் விழுப்புரம் மெயின் ரோட்டில் வருகை தந்து நீட் எதிர்ப்பு பிரச்சார படையினரை சிறப்பாக வரவேற்றனர். பள்ளி மாணவர்களிடையே பிரின்சு என்னாரெசு பெரி யாரும், சொற்பொழிவாளர் பா.மணியம்மையும் உரையா டினர். பின்னர் நீட் தேர்வு குறித்த எதிர்ப்பு பிரச்சார புத்த கங்கள், துண்டறிக்கைகளை வழங்கி சிறப்பான உரையை ஆற்றினர். இந்நிகழ்வில் மருத் துவர் அஸ்வின் ராம், கே.வி. இராசன், மண்டல செயலாளர் அறிவழகன், திராவிட இராசா, சிவராசன், லலிதா இராசன் ஆகியோர் கலந்து கொண்டனர். புதுச்சேரி மாநிலத்திலேயே 2ஆவது சிறந்த பள்ளியாக அரசால் தெரிவு செய்யப்பட்ட தனியார் பள்ளியான சிறீராமச் சந்திரா வித்யாலயா பள்ளி இயக்குநர் சங்கர நாராயணன் மற்றும் ஆசிரியர்கள், மாணவர் களிடம் பிரியா விடைபெற்ற பிரச்சார படையினர் கண்ட மங்கலம் புறப்பட்டனர்.

கண்டமங்கலம்

விழுப்புரம் மண்டல தலைவர் க.மு.தாஸ், விழுப் புரம் மாவட்ட தலைவர் ஓய்வு பெற்ற ஆசிரியர் ப.சுப்பரா யன், பெரியார் பெருந் தொண் டர் அரியூர் கே.வி.இராசன், லலிதா இராசன்,  ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர்கள் மா.கலிவரதன், பொன். ஆறு முகம், கணேசன் ஆகியோர் பிரச்சார குழுவினரை வரவேற் றனர். இராசன் அவர்களின் நண்பர்கள் பிரச்சார குழுவி னர்களுக்கு மோர் கொடுத்தனர். தலைமைக்கழக சொற்பொழி வாளர் தோழர் பா.மணி யம்மை அவர்களும், ஒருங் கிணைப்பாளர் பிரின்சு என்னாரெசு பெரியாரும் நீட் தேர்வு தேவையில்லை, தேவை யற்றது என பாஜக அரசின் நரித் தந்திரங்களை எடுத்துரைத் துரையாற்றினர். முடிவில் விழுப்புரம் மாவட்ட தலைவர் சுப்பராயன் நன்றி கூறினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner