எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

அரியலூர், மார்ச் 31 ஆலத் தூர் ஒன்றியம் கூத்தூர் கிரா மத்தில் தந்தை பெரியாரின் 138ஆவது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.

19.3.2017 அன்று மாலை 6 மணிக்கு தொடங்கிய பொதுக் கூட்டத்திற்கு பொதுக்குழு உறுப்பினர் ப.ஆறுமுகம் தலை மையேற்க மண்டல தலைவர் சி.காமராஜ், மாவட்ட தலைவர் விடுதலை நீலமேகன், மண்டல செயலாளர் சு.மணிவண்ணன், அரியலூர் மாவட்ட செயலாளர் க.சிந்தனைச்செல்வன், பெரம் பலூர் மாவட்ட தலைவர் சி.தங்கராசு, மாவட்ட செய லாளர் பெ.அண்ணாதுரை, பேராசிரியர் தங்கவேல் ஆகி யோர் முன்னிலை வகித்தனர். ஆலத்தூர் ஒன்றிய தலைவர் ஆசிரியர் து.பெரியசாமி வர வேற்புரையாற்றினர். மாவட்ட மகளிரணி அமைப்பாளர் அ.ஞானம்மாள், நகரத் தலைவர் அக்ரி.ஆறுமுகம் ஆகியோர் உரையாற்றிய பின்னர் கழகப் பொதுச்செயலாளர் துரை.சந்திர சேகரன் தந்தை பெரியாரின் சிறப்புகள் குறித்தும், மூட நம்பிக்கைகள் ஒழிக்கப்பட வேண்டிய காரணங்கள் குறித் தும் விளக்கி சிறப்புரையாற் றினார்.

பங்கேற்றோர்

அரியலூர் மாவட்ட அமைப் பாளர் இரத்தின.இராமச்சந் திரன், மாவட்ட இ.அ.செய லாளர் க.கார்த்திகேயன், ஆலத் தூர் ஒன்றிய அமைப்பாளர் பிலிமிசை அ.செல்வராசு, பெரம்பலூர் நகர அமைப்பாளர் ஆதிசிவம், தி.க.சு.மேகநாதன், அரியலூர் ஒன்றிய தலைவர் சி.சிவக்கொழுந்து, அரியலூர் ஒன்றிய செயலாளர் மு.கோபால கிருட்டிணன், துணைத் தலை வர் தங்கராசு உள்ளிட்ட ஏரா ளமான கழக பொறுப்பாளர் களும் திரளான பொதுமக்களும் சிறப்பாக பங்கேற்றனர். கழகத் தோழர்களுக்கு ஆசிரியர் பெரியசாமி இல்லத்தில் சிறப் பான உணவு அளிக்கப்பட்டது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner