எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

திருச்சி, ஏப். 4- திருச்சி மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் திரா விடர் இயக்க நூற்றாண்டு விழா பொதுக் கூட்டம் 29.3.2017 அன்று மாலை 6 மணிக்கு சிறீ ரங்கம் சாத்தார வீதியில் நடை பெற்றது.

இப்பொதுக் கூட்டத்திற்கு பெரியார் பெருந்தொண்டர் ப. இராமநாதன் தலைமை வகித் தார். மண்டல செயலாளர் மு. நற்குணம், திருவரங்கம் நகர செயலாளர் முருகன், திருச்சி மாநகர செயலாளர் சத்திய மூர்த்தி, மாவட்ட இளைஞரணி செயலாளர் தேவா, நகர இளை ஞரணி செயலாளர் சுதாகர், சட்ட எரிப்பு வீரர் முத்துக்குமா ரசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாவட்ட தலைவர் ச.கணே சன் தொடக்கவுரையாற்றினார். திராவிடர் கழக பொதுச் செய லாளர் முனைவர் துரை.சந்திர சேகரன் கலந்து கொண்டு உரை யாற்றினார். அவர் பேசும் போது:  பெரியாரை யாரோடும் ஒப்பீட்டு பேச முடியாது. ஒப் பாரும், மிக்காரும் இல்லாத தலைவராக பெரியார் திகழ்ந் தார். ஒதுக்கப்பட்ட, ஒடுக்கப் பட்ட மக்களுக்காக போராடிய வர்  தந்தை பெரியார் அவர்கள். எனவேதான் நீதிக்கட்சி வரலாறு தொடங்கி இன்றைய காலம் வரை திராவிடர் இயக்கம் சாதித் தையும், அவர்களால் மனித சமுதாயம் பெற்ற பலன்களை யும் நாடு முழுவதும் பேசி வருகிறோம்.

டில்லியில் விவசாயிகள் போராடி வருகிறார்கள். அவர் களை பிரதமர் மோடி பார்க்க வில்லை. ஆனால் பார்ப்பனர் கள் அந்த இடத்தில் ஒரு போராட்டத்தை நடத்தியிருந் தால் மோடி போய் பார்த் திருப்பார். ஒட்டுமொத்தமாக இந்தியாவை காவிமாயமாக்கி சாமியார் மடங்களாக ஆக்கத் துடிக்கும் இந்துத்துவா, ஆர். எஸ்.எஸ், பி.ஜே.பி அமைப்பு களை புறந்தள்ளுங்கள். தமிழ் நாட்டில் காலுன்ற நினைக்கும் இந்த சக்திகளை முறியடியுங் கள். இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தின் முன்னதாக மாவட்ட செயலாளர் இரா. மோகன்தாஸ் வரவேற்புரை யாற்றினார். நிறைவாக சிறீரங் கம் நகர தலைவர் ப.கண்ணன் நன்றி கூறினார். இப்பொதுக் கூட்டத்தில் விடுதலை வாசகர்  தலைவர் மீனாட்சிசுந்தரம், ஆலோ சகர் த.ஜெயராஜ், பொதுக்குழு உறுப்பினர் தி.மகாலிங்கம், சிறீரங்கம் இரா.குணசேகரன், நகர துணை செயலாளர் அண்ணா துரை, அப்பாசாமி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் அறிவுச்செல்வன், வழக்குரை ஞர் அரிகரன், காட்டூர் சங்கிலி முத்து, ப.க. தலைவர் மதிவா ணன், கவிஞர் செல்வராஜ்,  பொன்னுசாமி (தி.மு.க) உள் ளிட்ட ஏராளமான கழகத் தோழர்களும், பொதுமக்களும் பெருந்திராளாக கலந்து கொண் டனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner