எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பெரியார் நூலக வாசகர் வட்டத்தின் சார்பில்

பொருளாளர் கு.மனோகரன் படத்திறப்பு

சென்னை, ஏப்.7 பெரியார் நூலக வாசகர் வட்டத்தின் பொரு ளாளராக பொறுப்பு வகித்து சிறப்பாக செயலாற்றி வந்தவரான கு.மனோகரன் கடந்த 16.3.2017 அன்று மறைந்தார். அன்று மாலை சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற பெரியார் நூலக வாசகர் வட்டக் கூட்டத்தில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

மறுநாள் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள்,  சென்னை வானகரத்தில் உள்ள இல்லத்தில் நேரில் மரியாதை செலுத்தி, குடும்பத்தாருக்கு இரங் கலைத் தெரிவித்தார்.

நேற்று 6.4.2017 மாலை சென்னை பெரியார் திடலில்

அன்னை மணியம்மையார் அரங்கில் பெரியார் நூலக வாசகர் வட்டம் சார்பில் படத்திறப்பு, நினைவேந்தல் நிகழ்ச்சி நடை பெற்றது.

பெரியார் நூலக வாசகர் வட்டத் தலைவர் மயிலை நா.கிருஷ்ணன் தலைமையில் கு.மனோகரன் படத்தை கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் திறந்து வைத்து நினைவேந்தல் உரை யாற்றினார்.

இந்நிகழ்வில், பெரியார் நூலக வாசகர் வட்டத்தின் சார் பில் கு.மனோகரன் குடும்பத் தாருக்கு ஆறுதலும், இரங்கலும் தெரிவிக்கப் பட்டது.

கழக வெளியுறவு செயலாளர் வீ.குமரேசன், எழுத்தாளர் ஓவியா, பெரியார் நூலக வாசகர் வட்டச் செயலாளர் கி.சத்திய நாராயணன், ச.சேரன், புலவர் பா.வீரமணி,  வழக்குரை ஞரணி அமைப்பாளர் ஆ.வீரமர்த்தினி, வடமாவட்டங்களின் அமைப்புச் செயலாளர் வெ.ஞானசேகரன், பெரியார் நூலக வாசகர் வட்ட மேனாள் துணைச்செயலாளர் தென்னவன், வடசென்னை மாவட்டத் தலைவர் சு.குமார தேவன்,  வடசென்னை மாவட்டத் துணை செயலாளர் கி.இராம லிங்கம், அறிவியலா ளர்கள் இளங்கோ சுப்பிரமணி யன், சித்து.முருகானந்தம், திருக் குறள் மாமணி தெ.பொ.இளங் கோவன், ஆ.சீ.அருணகிரி,  சி.வெற்றிசெல்வி, சென்னை மண்டல மாணவரணி செயலாளர் பா.மணியம்மை, ஆவடி முத்துக் கிருஷ்ணன், புலவர் வெற்றி யழகன், பக்தவச்சலம், அரும் பாக்கம் சா.தாமோதரன், சைதை தென்றல், வாசுதேவன் எத்திராஜ், செஞ்சி ந.கதிரவன், கொரட்டூர் பார்த்திபன், பாடகர் பார்த்திபன் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் கு.மனோகரன் குடும்பத்தின் சார்பில் அவர் மகள் அமுதாராணி, மருமகன் ஜி.விஜயராஜ், பெயரன் பொன் விமல்ராஜ் கலந்துகொண்டனர்.

 


நீட் தேர்வுக்கு எதிராக சாஸ்திரி பவன் முற்றுகை

 

மதுரை, ஏப். 7 இந்திய மாணவர் சங்கத்தின் தமிழ்நாடு மாநிலக்குழு கூட்டம் அண்மையில் மதுரையில் மாநிலத் தலைவர் வீ.மாரியப்பன் தலைமையில் நடைபெற்றது.

மாநிலச் செயலாளர் உச்சிமாகாளி மாநில நிர்வாகிகள் கண்ணன், ஆறுமுகம், ஆனந்த் உள் ளிட்ட மாநிலக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண் டனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:ஏழை, எளிய அரசுப் பள்ளி மாணவர்களை மருத்துவப் படிப்பில் இருந்து அகற்றும் அகில இந்திய மருத்து நுழைவுத் தேர்வான நீட் தேர்வை தமிழகத்தில் அனுமதிக்கக் கூடாது. தமிழகத்திற்கு விலக்கு அளிக்க சட்டமன்றத்தில் இயற்றப்பட்ட தீர்மானத்திற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்க, தமிழக அரசு மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.

மாணவர்களின் மருத்துவ கனவை அழிக்கும் நீட் தேர்வுக்கு எதிராக ஏப்ரல் 26 அன்று சென்னையில் உள்ள சாஸ்திரி பவனை முற்றுகையிட்டு போ ராட்டம் நடத்தப்படும்.

கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தமிழகத்தில் உள்ள தனி யார் பள்ளிகளில் ஏழை, எளிய மாணவர்களுக்கு 25 விழுக்காடு இட ஒதுக்கீட்டை முறையாக அமல் படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner