எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, ஏப். 17- சென்னை மண்டல கழக மாவட்டங்களின் பொறுப்பாளர்கள் கலந்துரையா டல் கூட்டம் நேற்று (13.4.2017) மாலை 6.3-0 மணிக்கு சென்னை பெரியார் திடலில், துரை.சக்கர வர்த்தி நிலையத்தில் நடை பெற்றது.

இக்கூட்டத்திற்கு கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் தலைமை வகித்தார்.

கூட்டத்தில் சென்னை மண் டல செயலாளர் வி.பன்னீர் செல்வம், வடசென்னை மாவட்ட தலைவர் வழக்குரை ஞர் சு.குமாரதேவன், தென் சென்னை மாவட்ட தலைவர் இரா.வில்வநாதன், தாம்பரம் மாவட்ட தலைவர் ப.முத்தை யன், கும்மிடிப்பூண்டி மாவட்ட தலைவர் புழல் த.ஆனந்தன், செயலாளர் இரா.இரமேஷ், ஆவடி மாவட்ட செயலாளர் த.சிவக்குமார், சென்னை மண் டல இளைஞரணி செயலாளர் ஆ.இர.சிவசாமி, மாநில மாண வரணி துணைச் செயலாளர் நா.பார்த்திபன், மண்டல மாண வரணி செயலாளர் பா.மணி யம்மை, பொதுக்குழு உறுப்பி னர் வெ.மு.மோகன், வட சென்னை மாவட்ட மகளிரணி செயலாளர் ச.இ.இன்பக்கனி, மாவட்ட துணைச் செயலாளர் கி.இராமலிங்கம், இளைஞரணி துணைத் தலைவர் ஆ.பாசுகர், மாணவரணி ச.சிற்றரசு, பா.பார்த்திபன், பா.நதியா, பெரம் பூர் தலைவர் து.தியாகராசன், வியாசர்பாடி செயலாளர் சு.பெரியார் மூர்த்தி, சி.இரகுபதி, தென் சென்னை மாவட்ட துணைச் செயலாளர் அரும் பாக்கம் சா.தாமோதரன், பொருளா ளர் மயிலை டி.ஆர்.சேதுராமன், கோ.மஞ்சுநாதன், தென் சென்னை கழக இளைஞரணி த.மணிதுரை, தாம்பரம் மாவட்ட இளைஞரணி தலை வர் ஓவியச்செல்வன், தாம்பரம் நகர செயலாளர் சு.மோகன்ராஜ், ஊரப்பாக்கம் அரங்க.பொய்யா மொழி, தி.தொ.க. கூடுவாஞ்சேரி இராசு, கும்மிடி பூண்டி மாவட்ட இளைஞரணி செய லாளர் க.ச.க.இரணியன், ஜெகன், ஆவடி மாவட்ட மகளிர் பாசறை செயலாளர் பூவை.செல்வி, பூந்தமல்லி நகர கழக செயலாளர் க.ச.பெரியார் மாணாக்கன், ஆவடி மாவட்ட அமைப்பாளர் உடுமலை வடிவேல், ஆவடி நகர கழக இளைஞரணி செயலாளர் க. கலைமணி, பெரியார் திடல் வை.கலையரசன் மற்றும் கழ கத் தோழர்கள் பயிற்சி முகாம் குறித்து ஆலோசனைகளை வழங்கினர்.

பயிற்சி முகாமில் சென்னை மண்டலத்திலுள்ள புதிய இளைஞர்களை பெருமளவில் கலந்து கொள்ளச் செய்ய வேண்டுமெனவும், மாணவர் கள் குறித்த நேரத்தில் வருகை தருவதற்கும், ஆர்வமுள்ள இளைஞர்கள், பள்ளி விடு முறையில் உள்ள மாணவர்கள் வகுப்புகளில் கலந்து கொள்வ தற்கும், மாணவர்களுக்கு உரிய வகுப்பறை, உணவு, தங்குமி டம் ஆகியன குறித்தும், 14.4.2017 இல் சென்னையில் நடைபெறும் கண்டன ஆர்ப் பாட்டம் குறித்தும் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் தனது கருத்து களைக் கூறினார்.

சென்னையில்

29, 30.4.2017 (சனி, ஞாயிறு) ஆகிய தேதிகளில் பெரியாரியல் பயிற்சி முகாமினை சென்னை பெரியார் திடலில் சிறப்பாக நடத்துவதென முடிவெடுக்கப் பட்டது.

நன்கொடை

பயிற்சி முகாமிற்கு நன் கொடையாக ரூபாய் பத்தாயிரம் வழங்குவதாக சென்னை மண் டல கழகத் தலைவர் தி.இரா.இரத்தினசாமி அறிவித்தார்.

29.4.2017, முதல் நாள் மதிய உணவினை தாம்பரம் மாவட் டமும், இரவு உணவினை ஆவடி மாவட்டமும், காலை மாலை தேநீர் - பிஸ்கட் கும் மிடிப்பூண்டி மாவட்டமும் வழங்குவதாக மாவட்டக் கழகப் பொறுப்பாளர்கள் அறிவித்தனர்.

30.4.2017, இரண்டாம் நாள் காலை உணவு மற்றும் தேநீர் பிஸ்கட் தென் சென்னை மாவட் டமும், மதிய உணவினை வட சென்னை மாவட் டமும் வழங் குவதாக இரு மாவட்டங்களின் கழகப் பொறுப்பாளர்களும் அறிவித்தனர்.

மாணவர்களுக்கு நோட்டு, எழுதுகோல் முதலானவை களை வழங்குவதாக வடசென்னை மாவட்ட மகளிரணிப் பொறுப் பாளர்கள் அறிவித்தனர்.

அமைப்பாளர் நியமனம்

வடசென்னை மாவட்ட கழ கத்தின் புதிய அமைப்பாளராக பெரம்பூர் சி.இரகுபதி அவர் களை கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அறி வித்து சிறந்த முறையில் செயல்படுமாறு கேட்டு அவ ருக்குத் தனது வாழ்த்துகளையும் தெரிவித்தார்.

இரவு 8 மணியளவில் கலந் துரையாடல் கூட்டம் நிறை வடைந்தது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner