எழுத்துரு அளவு Larger Font Smaller Font

தருமபுரி மாவட்ட பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில்
அன்னை மணியம்மையார் பிறந்தநாள் - மகளிர் தின சிறப்புக் கருத்தரங்கம்
புதிய இளைஞர்கள் கழகத்தில் இணைந்தனர் - மூடநம்பிக்கை கயிறு அறுப்பு!

பாப்பிரெட்டிபட்டி, ஏப். 18- தருமபுரி மாவட்ட பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில் அன்னை மணியம்மையார் பிறந்த நாள் விழா மற்றும் மகளிர் தின சிறப்புக் கருத்தரங்கம் பாப்பிரெட்டிபட் டியில் 10.3.2017 மாலை 6 மணியளவில் நடைபெற்றது.

கருத்தரங்கிற்கு தருமபுரி மாவட்ட திராவிடர் கழக தலைவர் வீ.சிவாஜி தலைமை தாங்கினார். மாவட்ட பகுத் தறிவாளர் கழக தலைவர் கதிர்.செந்தில்குமார் வரவேற்புரையாற்றினார். பெரியார் பெருந்தொண்டர் பொன்னன், செங்கல் மாரி, ஆசிரியை ஜீவிதா, சமூக ஆர்வலர் காமதேஸ், தலித் ஆய்வு மய்ய ஒருங்கிணைப்பாளர் அறிவழகன், ஆசிரியர் ரவிசங்கர் ஆகியோர் முன் னிலை வகித்தனர். திராவிடர் கழக மாநில அமைப்புச் செயலாளர் ஊமை.ஜெயராமன் கருத்தரங்கை தொடங்கி வைத்து உரையாற்றினார்.
பகுத்தறிவாளர் கழகத்தின் மாநில செயல் தலைவர் தகடூர் தமிழ்ச்செல்வி பெண்ணுரிமை, பெண் உரிமைக்கா கவும், பெண் விடுதலைக்காகவும் திரா விடர் கழகம் ஆற்றிவரும் களப்பணி களை பட்டியலிட்டு சிறப்புரையாற் றினார்.

பகுத்தறிவாளர் கழகத்தின் மாநில துணைத் தலைவர் அண்ணா.சரவணன் அவர்கள் மூடநம்பிக்கைகள் குறித்தும், ஜாதிக் கொடுமைகள் குறித்தும் விளக் கிப் பேசினார். ஜாதி ஒழிப்பு, மூட நம்பிக்கை ஒழிப்பு ஆகியவற்றில் திரா விடர் கழகம் ஆற்றிவரும் களப்பணி களையும், இளைஞர்கள், மாணவர்கள் திராவிடர் கழகத்தில் இணைய வேண் டியதன் அவசியத்தையும் எடுத்துரைத் தார்.

கருத்தரங்கின் நிறைவாக பாப்பி ரெட்டிபட்டி ஒன்றிய தலைவர் கு.தங்க ராசு நன்றியுரை நிகழ்த்தினார். தருமபுரி மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலா ளர் மாரி.கருணாநிதி கருத்தரங்க நிகழ்வை ஏற்பாடு செய்து ஒருங்கிணைத்து சிறப் பாக நடத்தினார்.

முன்னதாக திரைப்பட பின்னணி பாடகர் இராமலிங்கம் கழக பாடல் களை பாடினார். சூர்ய வினோத், பிரேம் குமார் ஆகியோர் பின்னணி இசை அமைத்தனர். கருத்தரங்கில் கலந்து கொண்டவர்களில் மாணவி பருவதம், மாணவர்கள் கார்த்திகேயன், சுகன் ஆகியோர் தங்கள் கைகளில் கட்டியிருந்த மூடநம்பிக்கைக் கயிறுகளை மாநில அமைப்புச் செயலாளர் ஊமை.ஜெயராமன், மாநில ப.க. செயல் தலைவர் தகடூர் தமிழ்ச்செல்வி, மாநில ப.க. துணைத் தலைவர் அண்ணா.சரவணன் ஆகியோர் முன்னிலையில் அறுத்தெறிந்தனர்.
கருத்தரங்கத்தின் தாக்கத்தினால் மேடையிலேயே 15 மாணவர்கள் மற் றும் இளைஞர்கள் திராவிடர் கழகத்தில் தங்களை இணைத்துக் கொள்வதாக அறிவித்தனர். அவர்களை மாவட்ட தி.க. தலைவர் வீ.சிவாஜி பொன்னாடை அணிவித்து வரவேற்றார்.

கருத்தரங்கில் ஒன்றிய துணைத் தலைவர் ராமன், வைத்தியர், இளம் பருதி, கோட்சா மணி, வெங்கடாசலம், சவுந்தர்யா, கல்லூரி விரிவுரையாளர் தினேஷ், மீனா தினேஷ், பெரியசாமி மாணிக்கம், தனபாக்கியம் மாரி, நடனக்கலைஞர் சவுந்தர்யா, பொன்.தங்கம், கனகராஜ், அண்ணாமலை, சதா சுர்ஜித்குமார், விஜயானந்த், ஜெய மாலன், சிவானந்தம், அரவிந்த், வெங் கடாசலம், சூரி வினோத், மோகன், கார்த்தி, ஜெகதீசன், சர்வேசன், பாலா கார்த்திக், நந்தன், பிரசாந்த், பிரவீன் மணி, பவித்ரன், பாலு, சிறுத்தை சூர்யா, பூவெழிலன், தினேஷ் குமார், தன்னிலவன், செஞ்சுடர், சுதர்சன், சத்யஜித், சச்சின், அபிநயா, பர்வதம், சிவசங்கரி, கனிஷா, கீர்த்தனா, யோகசிறீ, லட்சுமி, தீபா, கிருத்திகா, சவு மியா, பவதாரணி, தரணிகா, மோனிகா, இரகுதீபா, சினேகா, டாலி, பிரீத்தா, தங்க சினேகா, நந்திதா, மீனா, கீர்த்திகா பீட்டர், நிஷா, திவ்யா, அன்பரசி, சுஜிதா, ஆனந்தி, வள்ளி, பெரியார் பிஞ் சுகள் கவின்நிதி, பொழில்நிதி, நரேன் நந்தா, நகுல் நந்தா, திவ்யலட்சுமி, சாமுவேல், கார்த்திக், சுப்ரஜாசிறீ, பிரக தீஷ், காருண்யா, அகிலரசி, விகுன், சுகன், தட்சயா, மதுமிதா, தேசிகன், நிரஞ்சன், அம்மு, மகாலட்சுமி, அறி வழகன் ஆகியோர் பங்கேற்று சிறப்பித் தனர்.

இக்கருத்தரங்கில் கலந்து கொண்ட பெரும்பாலோனோர் புதிய இளை ஞர்கள், கல்லூரி மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner