எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

புதுச்சேரி

புதுச்சேரி மாநில திராவிடர் கழகத்தின் சார்பில் பா.ஜ.க. மேனாள் நாடாளுமன்ற உறுப் பினர் தருண் விஜயின் திமிர் பேச்சை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் 14.4.2017 அன்று காலை 11 மணியளவில் புதுச்சேரி சுதேசி பஞ்சாலை அருகில் நடைபெற்றது. புதுச் சேரி மாநில திராவிடர் கழக தலைவர் சிவ.வீரமணி தலை மையில், புதுச்சேரி மண்டல தலைவர் இர.இராசு, புதுச்சேரி மண்டல செயலாளர் கி.அறி வழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

புதுச்சேரி மாநில திராவிடர் கழகத்தின் அனைத்து அணிக ளின் பொறுப்பாளர்களும் கலந் துக் கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட கட்சியினர்

புதுச்சேரி மாநில இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மாநில செயலாளர் இரா.விசுவநாதன், கீதநாதன், நவீன் தனராமன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, புதுச்சேரி மாநில செயலாளர் தோழர் இராஜாங்கம், தோழர் முருகன், மீனவர் விடுதலை வேங்கைகள், மாநில அமைப் பாளர் தோழர் இரா.மங்கையர் செல்வம் மற்றும் தோழர்கள், மக்கள் உரிமை கூட்டமைப்பு, புதுச்செரி மாநில செயலாளர் கோ.சுகுமாறன், மனித நேய மக்கள் கட்சி, மாநில செயலளர் தோழர் பஷீர் மற்றும் இயக்க தோழர்கள்.

கழகத்தோழர்கள்

பகுத்தறிவாளர் கழக புதுச் சேரி தலைவர் வீர.இளங் கோவன், செயலாளர் கைலாச நெ.நடராசன், புதுச்சேரி உள் ளிட்ட தமிழக ப.க. துணைத் தலைவர் மு.ந.நடராசன், புதுச் சேரி நகராட்சி கழக தலைவர் மு.ஆறுமுகம், செயலாளர் த. கண்ணன், களஞ்சியம் வெங்க டேசன், பொதுக்குழு உறுப்பி னர்கள் கோ.கிருட்டிணமூர்த்தி, லோ.பழனி, விலாசினிஇராசு, பொ.தட்சிணாமூர்த்தி, அரி யாங்குப்பம் கே.குமார், ஆ. சிவராசன், இரா.ந.முத்துவேல், கு.உலகநாதன், இரா.நா.முத்து வேல், மு.குப்புசாமி, பெரியார் படிப்பகம் கணேசன், வினோத், பெரியார் பிஞ்சு கு.இனியவன், சுகன்யா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இராமநாதபுரம்

நாடாளுமன்ற உறுப்பினர் தருண்விஜய், தென்னிந்தியர் கருப்பின மக்கள் என்று இன வெறியோடு பேசியதை கண் டித்து இராமநாதபுரம் அரண் மனை முன்பு மாவட்டத் தலை வர் மு.முருகேசன் தலைமை யில் ஆர்ப்பாட்டம் நடைபெற் றது.

மாவட்ட செயலாளர் கோ. வ.அண்ணா ரவி, பொதுக்குழு உறுப்பினர் பா.செயராமன், ஒன்றிய செயலாளர் இரா.காம ராசு, பொ.தங்கப்பாண்டியன், குரு.விசயகாந்த், ஜெனிரோ, சாத்தையா, சிந்தார்கோட்டை கார்த்திக், தனசேகரன், கண்ண தாசன், இரத்தின சபாபதி, குழந்தை ராயர், இசையாஸ் முத்துராமன் ஆதித்தமிழர் பேரவை மாவட்ட செயலாளர் சிவக்குமார் மற்றும் ஏராளமான பொதுமக்களும் இந்த ஆர்ப் பாட்டத்தில் கலந்து கொண்ட னர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner