எழுத்துரு அளவு Larger Font Smaller Font

அன்பார்ந்த பேரக் குழந்தைகளே! மகிழ்ச்சியாக இருக்கிறீர்களா? இருக்கிறோம்!!!

பழகுமுகாமில் ஆசிரியர் தாத்தாவின் அன்பும்! பேரக் குழந்தைகளின் பண்பும்!

தஞ்சை. ஏப். 29- பழகுமுகாமின் மூன்றாவது நாளில் ஆசிரியர் தாத்தாவிடம் பெரியார் பிஞ்சுகள் கேள்விகள் கேட்கும் “கேட்டலும் கிளத்தலும்’’ நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் கேட்கப்பட்ட அரிய கேள்விகளுக்கும் ஆசிரி யர் தாத்தா பதிலளித்தார்.

பழகுமுகாம் என்பது குண்டுச்சட்டிக்குள் ளேயே குதிரையை ஓட்டுதல் அல்ல, கிணற்றுத் தவளையாக இருக்கும் குழந்தைகளுக்கு ஒரு மாற்றுச்சிந்தனை தேவை! அதுவும் எதையும் கேள்வி கேட்கும் திறன் கைவரப்பெறும் வாய்ப் புத் தேவை! சுதந்திரமாக சிந்திப்பது என்பது இயற்கையான ஒன்றுதான் என்ற புரிதல் ஏற்படல் வேண்டும் என்ற பரந்த நோக்கில், இலக்கில் நடைபெற்றுவரும் அரிய நிகழ்வாகும். இதில் பங்கு பெற்ற குழந்தகள் இன்று சமூகத்தில் நல்ல நிலையில் இருப்பதே இதற்கு சான்றாகும். அப்படிப்பட்ட பழகுமுகாமில் நடைபெறும் நிகழ்ச்சிகளிலே சிறப்பான நிகழ்ச்சியாக எது இருக்க முடியும்? கேள்வி கேட்பதுதானே! அப்படிப்பட்ட அரிய நிகழ்வுதான், பெரியார் பிஞ்சுகள் ஆசிரியர் தாத்தாவிடம் கேள்வி கேட்கும் கேட்டலும் கிளத்தலும்!

கால்புதையும் பசும்புல்தரையில் மனம் புதைய, அதற்கு ஒத்து ஊதுவதுபோல வானத் தில் விண்மீன்கள் கண்சிமிட்ட, அதற்கு சவால் விடுகின்றதைப்போலவே, பூமியில் 130 மின் மினிகள் போன்ற பெரியார் பிஞ்சுகளும் களிப் புடன் காத்திருக்க, முத்தமிழ் அரங்கின் இரவு நேரத் தோற்றம் மனதை பறித்தது. அப்படிப் பட்ட இயற்கை சூழ்ந்த பழகுமுகாமின் மூன் றாம் நாளின் (28-04-2017) மாலை வேளை! ஆசிரியர் தாத்தாவுடன் பெரியார் பிஞ்சுகள் கேள்வி கேட்கும் நிகழ்வு நடைபெற்றது. தொடக்கத்திலேயே ஆசிரியர் தாத்தா, “அன் பார்ந்த பேரக்குழந்தைகளே! மகிழ்ச்சியாக இருக்கிறீர்களா?’’ என்று அன்பும், அரவணைப் புமான ஒரு கேள்வியை கேட்டவுடன் மொத்த முத்தமிழ் அரங்கமே உற்சாகத்தில் திளைத்து விட்டது. பிஞ்சுகளும் உடனடியாக, “இருக்கி றோம்’’ என்று பதிலளித்து அந்த உற்சாகத்தை அணைந்து போகாமல் காப்பாற்றினர். அடுத்து உடனடியாக ஆசிரியர், “மகிழ்ச்சியாக இருப்ப தற்கு எந்தப்பூ முக்கியம்?’’ என்று கேட்டார். பிஞ்சுகள் அதற்கும் உடனடியாக, “சிரிப்பூ’’ என்று பதிலளிக்க, கேட்டலும் கிளத்தலும் நிகழ்ச்சி களைகட்டிவிட்டது. பிஞ்சுகளின் உற்சாகத்தில் மனதைப்பறிகொடுத்த ஆசிரியர் தாத்தா அடுத்து, “வாய்விட்டு சிரித்தால்?’’ என்று மற்றொரு கேள்வியைக் கேட்டார். அதற் கும் வில்லில் இருந்து புறப்படும் அம்பாக, “நோய்விட்டுப் போகும்!’’ என்ற பதில் சட் டென்று வந்தது.

அதைத்தொடர்ந்து சிரிப்பதால் என் னென்ன நன்மைகள் என்பதையும் குழந்தை களுக்கு கற்றுக்கொடுத்தார். பிறகு பழகுமுகாம் பற்றிய பிஞ்சுகளின் கருத்தறிய விரும்பி அழைப்பு விடுத்தார். காஞ்சிபுரம் அபிநயா, அரியலூர் பெரியார் செல்வன் ஆகியோர் மேடைக்கு வந்து, தங்களுக்குப்பிடித்த பல் வேறு கருத்துகளை எடுத்து வைத்தனர். அதைத்தொடர்ந்து அனைவரும் எதிர்பார்த்த கேட்டலும் கிளத்தலும் தொடங்கியது. முன்ன தாகவே பழகுமு£மின் ஒருங்கிணைப்பாளர் களில் ஒருவரான பிரின்சு என்னாரெசு பெரியார் பிஞ்சுகளிடம் துண்டு சீட்டு கொடுத்து பெரியார் பிஞ்சுகளை கேள்விகளை எழுதப் பணித்திருந்தார். அதில் முதல் கேள்வியே மிகவும் சுவாரசியமாகவும், சுவையாகவும் இருந்தது. அதாவது, “உங்களுக்கு பிடித்தமான உணவு எது’’ கேள்வி கேட்கப்பட்டவுடன் ஒட்டுமொத்த அரங்கமும் சிரித்துவிட்டது. கவி பாலராஜன் இந்தக்கேள்வியை கேட்டிருந்தார். கேள்விகளை பிரின்சு என்னாரெசு பெரியார் வாசித்தார். “தஞ்சாவூரில் கிடைக்கும் விரால் மீன் குழம்பு தனக்குப்பிடித்தமான உணவு!’’ என்று அந்தக்கேள்விக்கான பதிலும் சிரிப்பை யும், சுவையையும் சேர்த்துக்கொண்டு வந்தது. அடுத்து கவிநிலவன், “திராவிடர் கழகப் போராட்டங்களில் சிறுவர்களை ஏன் சிறைக்குச் செல்ல அனுமதிக்க மாட்டேன் என்கிறீர்கள்?’’ என்று சிந்திக்க வைக்கும் ஒரு கேள்வியை கேட்டிருந்தார். பதில் சட்டென்று, “பள்ளிக்கூடத் திற்கு அனுப்புகிறோமே! அதைவிட வேறு சிறை எது?’’ என்று கேள்வியையே பதிலாகச் சொன்னதும் கவிநிலவன் உட்பட அனைவரும் கைதட்டி ஆரவாரத்துடன் முத்தமிழ் அரங் கமே அதிர அதிர சிரித்துவிட்டனர்.

இந்த அதிரடி கேள்விகளுக்குக் கிடையில் ஒரு முக்கியமான அறிவிப்பு ஒன்றை ஆசிரியர் தாத்தா வெளியிட்டார். அதாவது, அடுத்த ஆண்டுமுதல் பழகுமுகாமுக்கான முதல் நுழைவுச்சீட்டு என்பது பெரியார் பிஞ்சுக்கான சந்தாதான் என்றார். பெரியார் பிஞ்சு சந்தா செலுத்தியவர்கள்தான் வரவேண்டும்! பழகு முகாமின் விண்ணப்பத்தில் பெரியார் பிஞ்சு மாத இதழின் சந்தா எண் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும் என்பதுதான் அந்த அறிவிப்பு! பிஞ்சுகள் அதை ஏற்றுக்கொண்டனர். அவர் களா இதை விடுவார்கள்! 5 நாள் போதாது 10 நாள் நடத்துங்கள் என்று ஆசிரியரிடமே ஒரு குறையாக சொல்பவர்களல்லவா!

தொடர்ந்து ஆச்சரியமாக ‘நீட்’ தேர்வு பற்றி, கறுப்புச்சட்டை ஏன்?, பேய், பிசாசு, பூதம் பற்றிய கேள்விகளோடு, இதுவரையிலும் அவரி டம் கேட்கப்படாத கேள்விகள் சிலவும் வந்தது. அதாவது, “உங்களுக்குப்பிடித்த நடிகர் யார்?’’ என்றொரு கேள்வி, அதற்கு “பெரியார் விருது பெற்ற, பெரியாராக வேடமிட்டும் நடித்த இன முரசு சத்யராஜ்தான் என்றும், 1000 படங்களுக்கு மேல் நடித்த தமிழச்சி, பெரியாருக்கு தாயாக நடித்த ஆச்சி மனோரமாதான் எனக்கு பிடித்த நடிகை என்றும் சேர்த்துச் சொன்னார். “திரைப் படத்தில் உங்களுக்குப்பிடித்த பாடல் எது?’’ என்று அடுத்தொரு கேள்வி கேட்கப்பட்டது. பிஞ்சுகள் கேட்டிருந்தாலும் மற்ற அனைவரும் இந்தக்கேள்விக்கான பதிலை ஆவலுடன் எதிர் நோக்கியிருந்தனர். தனது பதிலில் மொத்தம் நான்கு பாடல்களைக் குறிப்பிட்டார் ஒன்று, “பாவமன்னிப்பு’’ திரைப்படத் தில் கண்ணதாசன் எழுதிய பறவையைக் கண்டான் விமானம் படைத்தான்! எதனைக் கண்டான் மதம்தனைப் படைத்தான்!’’ (வந்த நாள் நாள் முதல் இந்த நாள்வரை வானம் மாறவில்லை என்று தொடங்கும் பாடல்) இரண்டவது “ஓர் இரவு’’ திரைப்படத்தில் இடம் பெற்ற புரட்சிக்கவிஞரின் “துன்பம் நேர்கையில் யாழெடுத்து மீட்டு இன்பம் சேர்க்க மாட்டாயா!’’ என்ற பாடல், மூன்றாவது “தில்லானா மோக னாம்பாள்’’ திரைப்படத்தில் இடம் பெற்ற “நலந் தானா உடலும் உள்ளமும் நலந்தானா’’ என்ற பாடல், நான்காவது “சிந்துபைரவி’’ திரைப் படத்தில் இடம் பெற்ற வைரமுத்து எழுதிய “பாடறியேன் படிப்பறியேன் பள்ளிக் கூடம் நானறியேன்’’ என்ற பாடல் கள்தான் அவை.

ஒரு நாத்திக இயக்கத்திற்கு மாபெரும் தலைவராக, தனிவாழ்க்கை என்று எதுவும் இல்லாமல் பொதுவாழ்க்கைக்கே தன்னை ஒப்படைத்துக்கொண்ட ஒருவருக்கு இப்படிப் பட்ட தனிப்பட்ட கருத்துகளை பேசவும் நினைவு கூரவுமான வாய்ப்பை குழந்தைகள் வழங்கியதைக்கண்ட இயக்கத்தோழர்களுக் கும், மற்றவர்களுக்கும் ஆனந்தமாகவும் அதே சமயம் நெகிழ்ச்சியாகவும் இருந்தது. அனைத் துக் கேள்விகளுக்கும் உற்சாகமாகவும், நகைச் சுவையாகவும் குழந்தைகளுக்கு புரியும்படியும் அதேசமயம் ஆழமான கருத்துக்களை பதில் களாகச் சொல்லிவிட்டு அனைவரிடமும் விடைபெற்றுக்கொண்டு சென்றார்.

முன்னதாக உள்விளையாட்டரங்கத்திற்கு முன்பாக பெரியார் பிஞ்சுகள் அனைவரும் ஆசிரியர் தாத்தாவுடன் குழு ஒளிப்படம் எடுத்துக்கொண்டனர். அதே போல பெரியார் அறிவு மய்யம் கட்டிடத்தின் நுழைவு வாயிலில் பழகுமுகாமின் ஒருங்கிணைப்பாளர்களாக பணியாற்றும் முதலாமாண்டு பொறியியல் மாணவர்கள் தங்களின் வேந்தருடன் குழு ஒளிப்படம் எடுத்துக்கொள்ள ஆசைப்பட்டு எடுத்துக்கொண்டனர். அப்போது, தொண்டு செய்யும் வாய்ப்பு எவ்வளவு சிறப்பானது என்பதைப்பற்றிய சில கருத்துகளை பல்கலைக் கழகத்தின் வேந்தர் மாணவர்களோடு பரிமாறிக் கொண்டார். அமெரிக்கா போன்ற நாடுகளில் கூட அவர் எவ்வளவு பெரிய நபராக இருந் தாலும் ஒருநாளோ, ஒருமணி நேரமோ தொண்டு செய்வதற்கென்று நேரத்தை ஒதுக்கி மற்றவர்களுக்கு உதவி செய்கிறார்கள். இதற் கென்றே சிலர் சேமித்து மற்றவர்களுக்கு கொடுக் கின்றனர். இங்கே குழந்தைகள் எப்போதுமே உற்சாகமாக இருப்பவர்கள். அவர்கள் உங்க ளோடு பொருந்திப்போயிருப்பார்கள். அது உங்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பு! இந்த தொண்டு தொடரட்டும்! என்று வாழ்த்தினார்.

பிஞ்சுகள் நடத்திய நாடகமும்! பட்டிமன்றமும்!

தஞ்சாவூர் சைல்டுலைன் அமைப்பைப் பற்றி அந்த அமைப்பின் பொறுப்பாளர் ஜெரால்டு அறிமுகப்படுத்தினார். கேள்வியும் கிளத்தலும் முடிந்தபிறகும் சைல்டுலைன் நிகழ்ச்சி தொடர்ந்தது. அதில் நல்ல தொடுதல், தவறான தொடுதல் எது என்பதை அனிமேசன் வடிவில் எடுக்கப்பட்டிருந்த குறும்படம் ஒன் றைத் திரையிட்டுக் காட்டினர். தொடர்ந்து வளர்ந்து வரும் தொழில்நுட்பம் குழந்தை களுக்கு வளர்ச்சியா? தளர்ச்சியா? என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது. ஜானகி  அவர்கள் நடுவராக இருந்து இருதரப்பின் வாதங்களைக் கேட்டு வளர்ச்சியும் தேவை! அதனால் தொழில்நுட்பத்தை அளவோடு பயன்படுத்தினால் நன்மை தரும் என்று தீர்ப்பு வழங்கி நிறைவு செய்தார். அதைத்தொடர்ந்து ‘கொத்தடிமை முறை ஒழிப்பு’ என்ற தலைப்பில் நாடகம் நடைபெற்றது.

அதிகாலையில் தொடங்கி இரவு வரை யிலும் நடைபயிற்சி, கராத்தே, சிலம்பம், ஏரோ பிக்ஸ், விளையாட்டுகள், அறிவுச்செல்வன் நடத்திய “அன்றாடம் பயன்படுத்தும் பொருட் களில் அறிவியல்’’ என்ற அறிவியல் வகுப்பு, மனநல ஆலோசகர் லில்லிப்புஷ்பம் அவர்கள் நடத்திய மனித உறவுகள் பற்றிய செய்திகள், கலிலியோ அரங்கில் தாங்களே நடத்திக் கொண்ட விழிப்புணர்வு நாடகங்கள் என்று பரபரவென்று இருந்த பெரியார் பிஞ்சுகள் இரவு உணவை முடித்துக்கொண்டு அடுத்த நாளின் எதிர்பார்ப்போடு தங்களின் அறைகளில் படுத்துறங்கினர். மூன்றே நாட்களில் பிரிக்க முடியாத நண்பர்களாகவிட்ட சிலர் தூங்கும் போதுகூட கைகளைக் கோர்த்தபடியே தூங்கி யதைப் பார்க்க முடிந்தது.  இந்த நிகழ்வில் உடற் பயிற்சி ஆசிரியர் ரமேஷ், ஆனந்த ஜெரால்டு, அனிதா, பரமேஸ்வரி, ஜெரிடா,  சிவ.வீரமணி, கவிஞர்.கலிபூங்குன்றன், பதிவாளர் தேவதாஸ், துணைவேந்தர், உ.பர்வீன், பாலிடெக்னிக் முதல்வர் டாக்டர் மல்லிகா, நர்மதா, அனுசுயா, மோகனப்பிரியா, பெரியார் சிந்தனை உயராய்வு மய்யத்தின் இயக்குநர் பேராசிரியர் அன்பழகன், உதவிப் பேராசிரியர்கள் காளிமுத்து, ஜெயக் குமார், உடுமலை வடிவேல், பெரியார் வலைக் காட்சி கலைமதி, சுதன் மற்றும் ஏராளமான இயக்கத் தோழர்கள் பழகுமுகாமின் ஒருங் கிணைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner