எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

சேலம் மண்டல மகளிரணிக் கூட்டத்தில் தீர்மானம்

சேலம், மே 2- சேலம் மண்டல திராவிடர் கழக மகளிரணி -- மகளிர் பாசறை கலந்துரையா டல் கூட்டம் 16.4.2017 அன்று மாலை 5 மணிக்கு சேலம் மண் டல கழக செயலாளர் சேலம் அ.ச.இளவழகனின் குயில் பண்ணை (பகுத்தறிவு பாசறை) இல்லத்தில் மிகச்சிறப்புடனும் எழுச்சியுடனும் நடைபெற்றது.

இக்கலந்துரையாடல் கூட் டத்தில் பங்கு கொண்டு கழக பொதுக்குழு உறுப்பினர் மக ளிரணி தோழர் ரா.கமலம் தலைமையேற்று நிகழ்ச்சியை நடத்தினார். நிகழ்ச்சியின் துவக்கத்தில் சேலம் மகளிரணி தோழர் சேலம் த.சுஜாதா அனை வரையும் வரவேற்று சிறப்பான தொரு உரை நிகழ்த்தினார். நிகழ்ச்சியில் முன்னிலை வகித்து பா.அறிவுமணி, ராணி, முத்துலட்சுமி, சத்யா ஆகியோர் தங்கள் தம் முன்னிலை உரையினையும், தந்தை பெரியார், அன்னை மணியம்மையார், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் காலங்களில் கழக மகளிரணி வளர்ச்சி குறித்து உரை நிகழ்த்தினர்.

இந்நிகழ்ச்சியில் பங்கு கொண்டு சிறப்புரை நிகழ்த்திய மாநில மகளிர் பாசறை செயலா ளர் கோ.செந்தமிழ்ச்செல்வி மிகச்சிறப்பான முறையிலும், எழுச்சிமிக்க வகையிலும் தந்தை பெரியார் அவர்களின் பெண்ணுரிமை சிந்தனைகள் குறித்தும் அன்னை மணியம் மையார் காலத்தில் தஞ்சையில் நடைபெற்ற மாநாடு குறித்தும் அம்மாநாட்டில் இரண்டாம் நாள் ஊர்வலத்திற்கு விதிக்கப் பட்ட தடையை எவ்விதம் துணிச்சலுடன் அன்னையார் எதிர்கொண்டார் என்பன போன்ற நிகழ்வுகளையெல் லாம் எடுத்துரைத்து அன்னை மணியம்மையாரின் துணிச்ச லையும் இயக்கத்தை நடத்தி சென்ற பாங்கினையும் எடுத்து ரைத்தார். மேலும் தற்போது தமிழர் தலைவர் ஆசிரியர் தலைமையில் கழக மகளிரணி - மகளிர் பாசறை எவ்விதம் சிறப்பாக இயங்குகிறது. மகளி ரணி - மகளிர் பாசறை தோழர் கள் மீது கழக தலைவர் அவர் களின் பாசம், நலம் விசாரிப்பு, அக்கறை ஆகியவை குறித்து சிறப்பான முறையில் விளக்கி தமிழர் தலைவரின் கழக கொள்கை குடும்ப உறவு குறித்தும் உரை நிகழ்த்தியதோடு சிறப்பாக நடைபெற்ற திருவாரூர் மாநாடு குறித்தும் அதில் நிறை வேற்றப்பட்ட எழுச்சி மிக்க தீர்மானங்கள் குறித்தும் திருவா ரூர் மாநாட்டுவெற்றி குறித்தும் மேலும் திருவாரூரில் நடை பெற்ற மாநாட்டின் புரட்சி தீர்மானமான பெண்களை இழிவு செய்யும் மனுதர்ம எரிப்பு போராட்ட வெற்றி குறித்தும். மேலும் கழக மகளிரணி, மகளிர் பாசறை செயல்பாடுகளை எவ்வாறு சிறப்புடன் மேற்கொள்வது என்றும் தெரிவித்து, மகளிர் களம் 2017 தெருமுனைக் கூட் டம் மற்றும் மகளிரணி, மகளிர் பாசறை ஆகியன தமிழர் தலை வர் தலைமையில் வழிகாட்டு தலின்படி சிறப்பாக நடத்துவது குறித்தும் சிறப்புரை நிகழ்த் தினர்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தலைமைச் செயற்குழு உறுப் பினர் பழனி.புள்ளையண்ணன், மண்டல செயலாளர்  சி.சுப்பிர மணியன், மண்டல செயலாளர் அ.ச.இளவழகன், சேலம் மாவட்ட தலைவர் கி.ஜவகர், சேலம் மாவட்ட செயலாளர் கடவுள் இல்லை சிவக்குமார், சேலம் மாவட்ட அமைப்பாளர் ச.வெ.இராவணபூபதி, அம்மா பேட்டை தனபால், மேட்டூர் மாவட்ட செயலாளர் கா.நா. பாலு, ஆத்தூர் மாவட்ட செயலாளர் நீ.சேகர், ஓமலூர் ஒன்றிய செயலாளர் செ.சவுந் திரம் ஆகியோர் கருத்துரை நிகழ்த்தி மகளிர் பாசறை, மக ளிரணி மாவட்ட கழகங்கள் பங்களிப்பு குறித்து உரையாற் றினர்.

நிகழ்ச்சியில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட் டன.

தீர்மானங்களை ஆத்தூர் மகளிரணி தோழர் சத்யா வாசித்தார். மேலும் நிகழ்ச்சி யில் சேலம் மண்டல (ஆத்தூர் - மேட்டூர் - சேலம்) கழக மக ளிரணி, மகளிர் பாசறை புதிய பொறுப்பாளர்கள் நியமிக்கப் பட்டனர். மேலும் நிகழ்ச்சி யில் பின்வரும் தோழர்கள் பங் கேற்றனர். அ.இ.தமிழர் தலை வர் மாணவரணி, பா.வெற் றிச்செல்வன், இளைஞரணி, சம்பத், (பகுத்தறிவாளர் கழகம் ஆத்தூர்) தாத்தியம்பட்டிமுத்து ஆகியோர் பங்கேற்று சிறப்பித் தனர். இறுதியாக மகளிரணி இ.கண்ணகி அவர்கள் நிகழ்ச்சி யில் கலந்து கொண்டு அனைவ ருக்கும் தேனீர் உபசரிப்பு வழங்கி நன்றியுடன் ஆற்றினார்.

புதிய பொறுப்பாளர்கள்

சேலம் மண்டல மகளிரணி, செயலாளர் ரா.கமலம், சேலம்

சேலம் மாவட்ட தலைவர் ஜெ.விசாலாட்சி, சேலம் மாவட்ட செயலாளர் த.சுஜாதா, சேலம் மாவட்ட அமைப்பாளர் ஈரோடு நா.சந்திரா.

மேட்டூர் மாவட்ட தலைவர் கை.அறிவுமணி (எடப்பாடி), செயலாளர் கோ.அமராவதி (மேட்டூர்), அமைப்பாளர் மு.ராணி (ஓமலூர்)

ஆத்தூர் மாவட்ட தலைவர்: கொ.பாப்பாத்தி (முல்லை வாடி, ஆத்தூர்), செயலாளர் கோ.சித்ரா (காந்தி நகர், ஆத் தூர்), அமைப்பாளர் ஆ.சத்தியா (மேல் நாரியப்பனூர் சின்ன சேலம்)

தீர்மானம் 1: உலக நாத்திக இயக்கங்களின் முதல் பெண் தலைவர் புரட்சி வீராங்கனை அன்னை மணியம்மையார் பிறந்த நாளாம் மார்ச் 10 அன்று தமிழர் தலைவர் ஆசிரியர் அவர் களால் மதுரை பொதுக்குழுவில் மாநில முழுவதும் 10 இடங் களில் அறிவிக்கப்பட்ட பெண் களை இழிவுபடுத்தும் மனு தர்ம எரிப்பு போராட்டத்தினை, தருமபுரியில் வெற்றிகரமாக நடத்திய சேலம் மண்டல அனைத்து தோழர்களுக்கும் மாநாட்டிற்கும் நன்றியும் தெரி விக்கப்படுகிறது.

2) தமிழர் தலைவர் ஆசிரி யர் அவர்களின் அறிவிப்பின் படி மகளிரணி, மகளிர் பாசறை பொறுப்பாளர்களை நியமனம் செய்து சிறப்பாக செயல்படுவது என தீர்மானிக்கப்படுசிறது.

3) உலகத் தலைவர் தந்தை பெரியார் கொள்கைப்படி எந்த ஒரு கொள்கையும் முதலில் பெண்களிடம் சென்றால்தான் வெற்றியடையும் என்பதற் கேற்ப மகளிர் களம் 2017 என்றும் ஆண்டுத் திட்டத்தில் ஏப்ரல் 16 முதல் 30க்குள் சேலம் மண்டலத்தில் 5 இடங் களில் பெரியாரின் பெண்ணு ரிமைக் கருத்துக்களை சமுதா யத்திற்கு கொண்டு சேர்க்கும் விதமாக தெருமுனை கூட்டங் களை சிறப்பாக நடத்துவது என தீர்மானிக்கப்படுகிறது.

4) பெண்கள் தொடர்பான கழக களங்களுக்கான அழைப் பிதழில் வரவேற்புரை, தலைமை, முன்னிலை, நன்றியுரை என அனைத்து செயல்பாட்டிலும் மகளிரே பங்கேற்க வேண்டும். அழைப்பிதழில் பெரியாரின் பெண்ணுரிமை சிந்தனைகள் அச்சிட வேண்டும் என்று தீர் மானிக்கப்படுகிறது.

5) வருகிற மே மாதத்தில் நடைபெறவுள்ள மாநில மகளி ரணி, மகளிர் பாசறை கலந்து ரையாடலில் அதிக மகளிர் பங் கேற்பது என தீர்மானிக்கப்படு கிறது.

திராவிடர் கழக மகளிரணி மகளிர் பாசறை பொறுப்பா ளர்கள் விபரம்:

மேட்டூர் கழக மாவட்டம்

கை.அறிவுமணி (தலைவர் மாவட்ட மகளிரணி: 97891 69060), சோ.அமராவதி (செய லாளர், மாவட்ட மகளிரணி: 7502236271), மு.ராணி (மாவட்ட அமைப்பாளர், மகளிர் பாசறை: 8122818596)

ஆத்தூர் கழக மாவட்டம்

கு.பாப்பாத்தி (மகளிரணி தலைவர்), கோ.சித்திரா (செய லாளர், மகளிரணி) ஆ.சத்தியா ஆனந்த் திராவிடன் (மகளிரணி பாசறை: 9943872179).

சேலம் கழக மாவட்டம்

ரா.கமலம் சுஜாதா (செய லாளர்: 94886125604), (சேலம் மண்டல மகளிரணி செயலா ளர்: 9750506595), ஈரோடு நா. சந்திரா (அமைப்பாளர்: 98426 37071), ஜெ.விசாலாட்சி (தலை வர்: 9487572094).

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner