எழுத்துரு அளவு Larger Font Smaller Font

உசிலம்பட்டி, மே. 2- உசிலம்பட் டிக் கழக மாவட்ட இளைஞ ரணி சார்பில் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் எழுதிய வாழ்வியல் சிந்தனைகள் நூல் வெளியீட்டு விழா சோழவந்தா னில் கழக கொள்கை பிரச்சார விழாவாக எழுச்சியுடன் நடை பெற்றது.

உசிலம்பட்டி கழக மாவட்ட இளைஞரணி சார்பில் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் எழுதிய வாழ்வியல் சிந்தனை 12ஆம் தொகுதி நூல் வெளியீட்டு விழா கழக கொள்கை பிரச்சார விழாவாக 27.4.2017 இரவு 7 மணியளவில் சோழவந்தானில் மிகுந்த எழுச் சியுடன் நடைபெற்றது.

இந்த விழாவில் மாவட்டச் செயலாளர் ரோ.கணேசன் அனைவரையும் வரவேற்றார். மாவட்டத் தலைவர் கா.சிவா தலைமையேற்று உரையாற்றி னார். மதுரை மண்டலச் செய லாளர் மா.பவுன்ராசா, மாவட்ட ப.க. தலைவர் அ.மன்னர்மன் னன், வழகுரைஞர் கணேசன் ஆகியோர் முன்னிலையேற்று உரையாற்றினார்கள். நிறைவாக தலைமை கழக சொற்பொழி வாளர் வழக்குரைஞர் பூவை. புலிகேசி சிறப்புரையாற்றினார். தனது உரையில் விவசாய சங்க தலைவர் அய்யாக்கண்ணு டில் லியில் நடத்திய போராட்டம், நீட் நுழைவுத் தேர்வால் கிராமப்புற மாணவர் களுக்கு மருத்துவ படிப்பு எட்டா கனி யாகிவிடும். அதன் பாதிப்புக ளையும் மத்திய மோடி அரசின் புதிய கல்வி கொள்கை, இந்தி மொழி திணிப்பு போன்ற பல் வேறு கருத்துகளையும் விளக்க மாக எடுத்துரைத்தார். பொது மக்கள் இங்கு பல்வேறு கூட் டங்கள் கேட்டு உள்ளோம். ஆனால் இன்றுதான் தேவை யான கருத்துகளை கேட்க முடிந் தது என பாராட்டி சென்றார்கள். நகர செயலாளர் இ.காளிமுத்து நன்றி கூறினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner