எழுத்துரு அளவு Larger Font Smaller Font

செந்துறை, மே 6- அரியலூர் மாவட்ட ப.க. சார்பாக புரட்சியாளர் அம்பேத்கர், புரட்சி கவிஞர் பாரதிதாசன் பிறந்த நாள் விழா கருத்தரங்கமும் வாழ்வியல் சிந்தனைகள் 12ஆம் தொகுதி நூல் அறிமுக விழாவும் 23.4.2017 அன்று செந்துறை அருணா - பார்வதி திருமண மண்டபத்தில் மாலை 6 மணிக்கு சிறப்பாக நடைபெற்றது.

மாவட்ட ப.க. தலைவர் தங்க.சிவ மூர்த்தி தலைமையேற்க இரா.இராசேந் திரன் வரவேற்க ஆசிரியரணி மாவட்ட செயலாளர் சி.நீதிபதி, மாவட்ட ப.க. அமைப்பாளர் செ.நடராசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். புரட்சியாளர் அம்பேத்கர் பற்றி வழக்குரைஞர் பூவை.புலிகேசி சிறப்பாக கருத்துரை யாற்றிய பின்னர் கழகப் பொதுச் செய லாளர் வழக்குரைஞர் துரை.சந்திரசேக ரன் வாழ்வியல் சிந்தனைகள் நூலினைப் பற்றியும், புரட்சி கவிஞரின் பாடல் களின் சிறப்பினையும் தந்தை பெரியா ரின் கவிதைக் குரலாக புரட்சி கவிஞர் விளங்கியதையும் விளக்கி சிறப்புரை யாற்றினார். நகர கழகத் தலைவர் ப.இளங்கோவன் நன்றி கூறினார்.

பங்கேற்றோர்

நிகழ்ச்சிக்கு வருகை தந்து நூல் களையும் பெற்றுக்கொண்ட தோழர்கள் மண்டல தலைவர் சி.காமராஜ், மண் டல செயலாளர் சு.மணிவண்ணன், மாவட்ட தலைவர் விடுதலை நீல மேகன், மாவட்ட செயலாளர் க.சிந்த னைச்செல்வன், மாவட்ட அமைப்பாளர் இரத்தின.இராமச்சந்திரன், வழக்குரை ஞர் சா.பகுத்தறிவாளன், மாவட்ட இளைஞரணி தலைவர் பொன்.செந்தில் குமார், மாவட்ட இ.அ.செயலாளர் க. கார்த்திகேயன், பெரியார் பெருந் தொண்டர்கள் செ.அரங்கசாமி, புலவர் அரங்கநாடன், அமீனா எஸ்.எஸ்.கணே சன், தலைமையாசிரியர் இராவணன், அரிமா சங்கம் செல்வராசு, ஆசிரியர்கள் தங்க.சிவமூர்த்தி, இராசேந்திரன், நீதி பதி, வீரமணி, இராஜ்மோகன், இரா ஜேஷ், பெங்களூரு இராஜாராம், ஆண் டிமடம் ஒன்றிய செயலாளர் தியாக.முருகன், தா.பழுர் ஒன்றிய செயலாளர் பி.வெங்கடாசலம், செயங்கொண்டம் ஒன்றிய தலைவர் மா.கருணாநிதி, அரி யலூர் நிருவாகிகள் மு.கோபாலகிருட் டிணன், சி.சிவக்கொழுந்து, பொறியா ளர் இரா.கோவிந்தராஜன், விவசாய சங்கத் தலைவர் மதியழகன், செந்துறை ஒன்றிய நிருவாகிகள் மா.சங்கர், மு.முத்தமிழ்செல்வன், சோ.க.சேகர், மருத் தூர் செல்வராசு, ஆண்டிமடம் இரா.தமிழரசன், த.தர்மேந்தர், ந.சுந்தரம், பிரபுதுரை, கடலூர் மாவட்ட செயலா ளர் தாமோதரன் ஏழுமலை, இளவரசன் உள்ளிட்ட ஏராளமான தோழர்கள் நிகழ்ச்சியில் சிறப்பாக பங்கேற்றனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner