எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, மே 13- சுயமரியா தைச் சுடரொளி காரைக்குடி தி.பெரியார் சாக்ரடீசு அவர் களின் மூன்றாம் ஆண்டு நினைவு நாளையொட்டி நேற்று (12.05.2017) சென்னை பெரியார் திடலில் உள்ள சுயமரியாதைச் சுடரொளிகள் நினைவிடத்தில், திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் தலைமையில் மலர்வளையம் வைத்து மரி யாதை செலுத்தப்பட்டது.

கழக வெளியுறவுச் செய லாளர் வீ.குமரேசன், பெரி யார் திடல் மேலாளர் ப.சீத் தாராமன், விடுதலை அச்சகப் பிரிவு மேலாளர் க.சரவணன், மஞ்சை வசந்தன், வே.சிறீதர், ச.பிரின்சு என்னாரெசு பெரி யார், தி.புருனோ என்னாரெசு, கா.ரம்யமலர், பெரியார் பிஞ்சு சித்தார்த்தன், வை.கலையரசன், இசையின்பன், பசும்பொன் செந்தில்குமாரி, உடுமலை, பா.மணியம்மை மற்றும் தோழர்கள் கலந்து கொண்டனர்.

காரைக்குடி சந்தைப் பேட்டையில் அமைந்துள்ள பெரியார் சாக்ரடீசு அவர்களின் நினைவிடத்தில் தலைமைச் செயற்குழு உறுப்பினர் சாமி.திராவிடமணி தலைமையில் ஜெயா, ஜெ.இங்கர்சால், இ. பெ.தமிழீழம், தி.என்னாரெசு பிராட்லா உள்ளிட்ட குடும்பத் தினர் மற்றும் கழகத் தோழர் கள் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner