எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பாபநாசம், மே 17- சிந்தனைக் களம் 5, உலக புத்தக நாள் விழா, தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் எழுதிய வாழ்வியல் சிந்தனைகள் தொகுதி 12 அறிமுக விழா, புரட்சி கவிஞர் பாரதிதாசன் பிறந்த நாள் விழா நிகழ்ச்சி கும்பகோணம் மாவட் டம் பாபநாசத்தில் ஒன்றிய பகுத்தறிவாளர் கழகத்தின் சார் பில் 6.5.2017 அன்று மாலை 6.30 மணிக்கு நட்புறவாடல் மற்றும் சிற்றுண்டியுடன் விழா நடைபெற்றது.

விழாவுக்கு மாவட்ட செய லர் க.குருசாமி தலைமை ஏற்க மாவட்ட பகுத்தறிவாளர் கழக துணைத் தலைவர் க.திருஞான சம்பந்தம் வரவேற்றார்.

மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் வி.மோகன் தனது ஒருங்கிணைப்பு உரை யில் நிகழ்வு அனைத்துமே அழைப்பிதழில் குறித்த நேர ஒதுக்கீட்டின் படியே நடை பெற அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

விழாப் பேருரையாற்றிய தஞ்சை தமிழ் பல்கலைக்கழக பேராசிரியர் தெ.வெற்றிச்செல் வன் தனது தந்தையின் இயக்கத் தொடர்பு பற்றியும் தொடர்ந்து பாரதிதாசன் அவர்களின் பல் வேறு கோணங்கள் எப்படி அய்யாவை நோக்கியே இருந் தது என்பதையும் புதிய கோணத் தில் கூறியது அனைவரையும் கவர்ந்தது. தனது உரையில் பார்வையாளர்களை கொள்கை வயப்படுத்தி உரையாற்றியது சிறப்பு.

இறுதியாக தமிழர் தலைவ ரின் வாழ்வியல் சிந்தனைக் நூல் தொகுதி 12 ரூ. 250 மதிப் புள்ள நூல் விழாவில் ரூ. 200க்கு வழங்கிட உடனடியாக 70 நூல்கள் பார்வையாளர்களால் வாங்கப்பட்டது.

மாவட்ட திராவிடர் கழக துணைச் செயலாளர் சு.துரை ராசு நன்றி கூறி, விழா இனிதே முடிவுற்றது.

விழாவில் முன்னதாக குறித்த நேரத்தில் கேழ்வரகு, அரிசி புட்டும், தக்காளி சூப் பும் அனைத்து முன்னிலையா ளர்கள் சார்பில் மாவட்ட திரா விடர் கழக தலைவர் வை. இளங்கோ உரையாற்றினார்.

தொடர்ந்து தலைமை செயற்குழு உறுப்பினர் ராஜகிரி கோ.தங்கராசு அவர்கள் புத்த கம் படிப்பது ஏன்? எதற்கு என் றும் வாழ்வியல் சிந்தனைகள் நூல் பற்றியும், புரட்சி கவிஞ ரின் வாழ்க்கை பற்றியும் பேசி னார்.

வாழ்வியல் சிந்தனைகள் தொகுதி 12 பற்றி அறிமுக உரை யாற்றிய மேனாள் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியா ளர் சு.அன்பழகன் நூலின் சிறப்பு, மற்ற நூல்களுக்கும் இதற்கும் உள்ள வேறுபாடு, நூலின் ஒவ்வொரு தலைப்பை யும் ஒட்டிய செய்திகள் உலகின் மற்ற தலைவர்களின் எழுத்துக் களில் இருந்து தமிழர் தலைவ ரின் எழுத்துகள் சிந்தனைகள் எப்படி வேறுபடுகிறது என சுவைபட கூறினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner