எழுத்துரு அளவு Larger Font Smaller Font

மதுரை, மே 18- 13.05.2017 சனிக் கிழமை, காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மதுரை விடுதலை வாசகர் வட்டத்தின் 53ஆவது நிகழ்ச்சியாக குடும்ப விழா மிகவும் குதூகலத்துடன் கொண்டாடப்பட்டது.

ஆண்களை விட பெண்கள் அதிகமாக கலந்து கொண்டனர். இடைவிடாது விளையாட்டு போட்டிகளும் கேளிக்கை நிகழ்ச்சிகளும் நடந்தன. விழா வின் ஒருங்கிணைப்பாளராக விடுதலை வாசகர் வட்டத்தின் தலைவர், பொ. நடராசன் நீதி பதி (பணி நிறைவு) அவர்களின் பெயர்த்தியும், உயர்நீதிமன்ற வழக்குரைஞர் ந.தமிழ்மணியின் புதல்வியுமான, பெரியார் பிஞ்சு த.ஓவியா சிறப்புற நடத் தினார்.

விழாவில் சிறுவர்களுக்காக 1. நினைவாற்றல் போட்டி, 2. பிஸ்கட்டை நெற்றியிலிருந்து வாய்க்கு கொண்டுவருதல், பெண்களுக்காக 1. ரப்பர் பேண்டை கைவிரலில் கோப் பது, 2. ஜம்கிளிப்பை வரிசையாக கோப்பது, ஆடவர்களுகாக 1.தலையால் பலூனை தட்டு வது, 2. பந்தை கூடையில் போடு வது போன்ற விளையாட்டுகள் நடைபெற்றன. அனைவரும் கலந்து கொள்கின்ற வகையில் தமிழோடு விளையாடு என்ற போட்டியும் நடைபெற்றது. இப்போட்டிகளில் வந்திருந்த அனைவரும் கலந்து கொண்ட தோடு மிகுந்த உற்சாகத்தையும் ஆர்வத்தையும் வெளிப்படுத்தி யது குறிப்பிடத்தக்கதாகும். மதி யம் அறுசுவை உணவு அனை வர்க்கும் வழங்கப்பட்டது.

அதன் பின்னர் மேலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளரும் சிறந்த மேஜிக் நிபுணருமான வேம்பன் அவர் களின் மேஜிக் நிகழ்ச்சி நடை பெற்றது. கலந்து கொண்ட பெண்கள் அனைவருக்கும் நினைவுப் பரிசும், போட்டியில் கலந்து கொண்டவர்களுக்கு பரிசுகளும் வழங்கி சிறப்பு செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சி மதுரை கழகத் தோழர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது சிறப்பம்சமாகும்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner