எழுத்துரு அளவு Larger Font Smaller Font


புதுச்சேரி, மே 24- புதுச்சேரி மாநில ‘நீட்’ எதிர்ப்பு நடவடிக்கை குழுவின் சார்பில் தீவிர விழிப் புணர்வு பிரச்சாரம் முதல் கட் டமாக 19.5.2017 அன்று மாலை 5 மணியளவில் புதுச்சேரி நேரு வீதி சண்முகா சில்க்ஸ் அருகில் நடைபெற்றது.

நீட் எதிர்ப்பு நடவடிக்கை குழுவின் ஒருங்கிணைப்பாளர் புதுச்சேரி மாநில திராவிடர் கழக தலைவர் சிவ.வீரமணி தலைமையில் நடைபெற்றது. புதுச்சேரி மாநில இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியின் விவசாய அணி செயலாளர் தோழர் கீத நாதன் வரவேற்புரையாற்றினார். புதுச்சேரி மாநில மாணவர் கூட்டமைப்பின் தலைவர் சாமிநாதன், புதுச்சேரி மாநில மனித நேய மக்கள் கட்சியின் மாநில தலைவர் பஷீர் அகமது, அண்ணா இலக்கிய பேரவை நிறுவனர், புதுவை சிவம் இலக்கிய பேரவை தலைவர் முனைவர் சிவ.இளங்கோ, புதுச்சேரி மாநில சமூகநீதி பேரவை தலைவர் நவீன் தனராமன் ஆகியோர் புதுச்சேரி மாநிலத்திற்கு நீட் தேர்வு தேவையில்லை என்றும் பாஜக மோடி தர்பாரின் மாய்மால வித்தைகளை காரசாரமாக எடுத்துரைத்து பொதுமக்கள் மாணவர்கள் மத்தியில் விழிப் புணர்வு பிரச்சாரம் செய்தனர். நேரு வீதி, காந்தி வீதி சந்திப்பு, முத்தியால்பேட்டை சின்ன மணிக் கூண்டு அருகிலும் பரப் புரை நடைபெற்றது. இதில் அனைத்து அமைப்புகளின் தோழர்கள், மாணவர்கள் மற் றும் கழக பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner