எழுத்துரு அளவு Larger Font Smaller Font

மேட்டுப்பாளையம், ஜூன் 6- கோவை மண்டல திராவிடர் கழக கலந்துரையாடல் கூட் டம், மேட்டுப்பாளையம் வசந் தம் ஸ்டீல்ஸ் மேல்தளத்தில் 4.6.2017 மாலை 6 மணிக்கு நடைபெற்றது. திராவிடர் கழக பொருளாளர் டாக்டர் பிறை நுதல் செல்வி அவர்கள் தலைமை தாங்கினார். கூட்டத்தில் ஜூன் 24, 25 தேதிகளில் குன்னூரில் நடைபெறும் பயிற்சி முகா மையும், 25ஆம் தேதி நடை பெறும் தமிழர் தலைவர் கலந்து கொள்ளும் பொதுக் கூட்டத்தினையும் சிறப்பாக நடத்துவது குறித்து கலந்தா லோசிக்கப்பட்டது.

மண்டல கழக தலைவர் ஆ.கருணாகரன் துவக்க உரை யாற்றினார். பெரியார் மருத்து வக் குழு இயக்குநர் டாக்டர் இரா.கவுதமன் பயிற்சி முகாமை நடத்துவதன் அவசியம் மற்றும் எவ்வாறு சிறப்புடன் நடத்து வது என்பது குறித்து விரிவாக எடுத்துரைத்தார். கூட்டத்தில் கலந்து கொண்டு கழக அமைப் புச் செயலாளர் ஈரோடு த.சண் முகம், மாநில மாணவரணி துணைச் செயலாளர் ஆ.பிர பாகரன், மாநில இளைஞரணி துணை செயலாளர் தே.காம ராஜ், மேட்டுப்பாளையம் மாவட்ட தலைவர் சு.வேலுசாமி, பொதுக் குழு உறுப்பினர் சாலைவேம்பு சுப்பையன், கோவை மாவட்ட தலைவர் ச.சிற்றரசு, நீலகிரி மாவட்ட தலைவர் மு.நாகேந் திரன், மேட்டுப்பாளையம் மாவட்ட செயலாளர் அர.வெள் ளிங்கிரி, கோவை மாவட்ட செயலாளர் செந்தில் நாதன், நீலமலை மாவட்ட செயலாளர் மு.நாகேந்திரன், மேட்டுப்பா ளையம் பா. பாலசுப்ரமணியன், மேட்டுப் பாளையம் மாவட்ட அமைப் பாளர் செல்வராசு, நகர தலைவர் கோ.அர. பழனிசாமி, நகர செயலாளர் வெ.சந்திரன், காரமடை ஒன் றிய தலைவர் ஏ. எம்.ராஜா, மேட்டுப்பாளையம் மாவட்ட இளைஞரணி தலைவர் நந்த குமார், செயலாளர் வே.வீர மணி, மேட்டுப்பாளையம் மாவட்ட மாணவரணி செயலாளர் விக்னேஷ், குன் னூர் ஜோதிமணி, த.செ.இனியா சோலை, கள்ளக்கரை வெங்கட் ராமன், மேட்டுப்பாளையம் ரங்கசாமி, த.செ.மதியரசு, மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் குறிச்சி செல்வன் உட்பட ஏராளமான தோழர்கள் கலந்து கொண்டு தங்களின் கருத்துக்களை தெரிவித்தனர்.

கோவையில் இருந்து 50க் கும் மேற்பட்ட மாணவர்கள் பயிற்சி வகுப்பிற்கு அனுப்பி வைப்பதாக கோவை மாவட்ட தலைவர் அறிவிப்பு வெளியிட்டார். மேட்டுப்பாளையம் பகுதியிலிருந்து தோழர்களை அனுப்பி வைப்பதுடன், பயிற்சி வகுப்பில் பங்கு பெறும் தோழர் களுக்கு ஒரு நேர உணவு செலவை ஏற்பதாக மேட்டுப் பாளையம் நகர தலைவர் கோ.அர.பழனிசாமி அறிவித்தார்.

பொதுக்குழு உறுப்பினர் சாலைவேம்பு சுப்பையன் சார் பாக ஜூன் 11.6.2017 ஞாயிறு அன்று சாலைவேம்பில் குடும்ப விழா ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது என்றும் அதில் அனை வரும் கலந்து கொள்வது என் றும் அறிவிக்கப்பட்டது. தோழர் நாகேந்திரன் நன்றி கூற கலந்து ரையாடல் நிறைவு பெற்றது.

கூட்டத்தில் பெரியார் பெருந் தொண்டர் கழக பொதுக்குழு உறுப்பினர் சாலைவேம்பு சுப் பையன் அவர்களது 78ஆவது பிறந்த நாளையொட்டி கழகப் பொருளார் டாக்டர் பிறைநுதல் செல்வி அவர்கள் சால்வை போர்த்தி வாழ்த்துக்களையும், பாராட்டையும் தெரிவித்துக் கொண்டார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner