எழுத்துரு அளவு Larger Font Smaller Font

தேவநல்லூர், ஜூன் 6- “நம்பிக்கைக் குரிய நாணயஸ்தர்” என்று தமிழர் தலைவர் அவர்களால் புழ்ந்து ரைக்கப்பட்ட பெரியார் மணி யம்மை பல்கலைக்கழகத்தின் நிதி அதிகாரி ப.முத்துக் கிருஷ் ணன் உடல் நலக் குறைவால் 4.6.2017 அன்று காலை 10.30 மணிக்கு தஞ்சையிலுள்ள அவரது இல்லத்தில் காலமானார்.

தகவல் அறிந்தவுடன் சிங்கப் பூரிலுள்ள தமிழர் தலைவர் அவர்கள் மறைந்த முத்துகிருஷ் ணன் அவர்களின் சகோதரர்கள் பெரியார் திடல் மேலாளர் ப. சீதாராமன், பெரியார் வீரவிளை யாட்டு கழக தலைவர் பேரா. ப.சுப்ரமணியன் ஆகியோருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவர்கள் குடும்பத்தார் அனைவருக்கும் ஆறுதல் தெரிவித்தார்கள்.

பெரியார் மணியம்மை பல் கலைக்கழக துணைவேந்தர் பேரா.நல்.இராமச்சந்திரன், கழக பொது செயலாளர் இரா.ஜெயக் குமார், தலைமைச் செயற்குழு உறுப்பினர் உரத்தநாடு இரா. குணசேகரன், மாநில மகளிரணி செயலாளர் கலைச்செல்வி, மண் டல திராவிடர் கழக செயலாளர் மு.அய்யனார், மாவட்டத் தலை வர் சி.அமர்சிங், மாவட்ட செய லாளர் அ.அருணகிரி, பொதுக் குழு உறுப்பினர் வ.ஸ்டாலின், மாவட்ட ப.க. செயலாளர் கோபு.பழனிவேல், பேச்சாளர் இரா.பெரியார் செல்வன், வன்னிப்பட்டு தமிழ்செல்வன், அ.இராமலிங்கம், மா.திராவிட செல்வம், வேர்ட்ஸ்வொர்த் ராசன், ஞானம் மெட்ரிக்குலே ஷன் பள்ளி தாளாளர் கு.பன்னீர் செல்வம், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் இரா.வெற்றி குமார், திருச்சி பெரியார் கல்வி நிறுவனங்களின் ஒருங்கிணைப் பாளர் தங்காத்தாள், ஆர்.சின்னப் பன், தி.மூர்த்தி, பெரியார் சிந் தனை உயராய்வு மய்ய இயக்குநர் முனைவர் க.அன்பழகன், பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல் லூரி முதல்வர் முனைவர் மல் லிகா, துணை முதல்வர் முனை வர் பர்வீன், பெரியார் ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் கலைச் செல்வன், பெரியார் நூற்றாண்டு பாலி டெக்னிக் நூலகர் சிவகாமி, பேரா.மணிவண்ணன், குடும்ப விளக்கு நிர்வாகி வேணுகோபால் மற்றும் கல்வி நிறுவனங்களின் நிர்வாகிகள், கழகத் தோழர்கள் உள்ளிட்டோர் அன்னாரது உட லுக்கு மாலை அணிவித்து மரி யாதை செலுத்தினர்.

பெரியார் வீரவிளையாட்டு கழக தலைவர் பேரா.ப.சுப்ரமணி யத்திற்கு ஆறுதலை தெரிவித்து தோழர்கள் சொந்த ஊரான தேவ நல்லூருக்கு உடலை அனுப்பி வைத்தனர். இரவு 9 மணிக்கு தேவநல்லூருக்கு உடல் சென்ற டைந்தது. நெல்லை மாவட்டத் தலைவர் இரா.காசி, நெல்லை மாநகரத் தலைவர் ரெத்தினசாமி, மாவட்ட ப.க. தலைவர் வேல் முருகன், ப.க. செயலாளர் பீட் டர் ஆகியோர் தமிழர் தலைவர் அவர்களின் இரங்கல் அறிக்கையினை உற்றார் உறவினர்களுக்கு வழங்கினர்.

5.6.2017 அன்று மதியம் 12.30 மணிக்கு பெரியார் மணியம்மை பல்கலைக்கழக துணைவேந்தர் பேரா.நல்.இராமச்சந்திரன் தலை மையில் இரங்கல் கூட்டம் நடைபெற்றது. பெரியார் மணி யம்மை பல்கலைக்கழக வேந் தர், தமிழர் தலைவர் எழுதிய னுப்பிய இரங்கல் அறிக்கையை, தலைமை செயற்குழு உறுப்பினர் இரா.குணசேகரன் வாசித்தார்.

அப்பாவு, இரமேசு, இரா சேந்திரன், சங்கர், திலகவதி, ஆனந்தன், குமரேசன், நெல்லை மாவட்ட ப.க. தலைவர் வேல் முருகன், திருச்சி பெரியார் மணி யம்மை பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் பெ.கவுதமன், இரா.தினேஷ்குமார், ஓட்டுநர்கள் சி.தமிழ்ச்செல்வன், அருண்குமார், அருள், நை.பூமி நாதன் ஆகியோர் இறுதி நிகழ் வில் பங்கேற்றனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner