எழுத்துரு அளவு Larger Font Smaller Font

போளூர், ஜூன் 9 போளூரில் பாரதிதாசன் கணினி மய்யம் மற்றும் நகலகம் 3.6.2017 அன்று காலை 11 மணியளவில் துவக்க விழா நடைபெற்றது.

போளூர் சுயமரியாதைச் சுடரொளி வாயாடி சுப்ரமணி அவர்களின் மகனும் கழகத் தோழரும் ஓய்வு பெற்ற வட் டாட்சியரும் மய்யத்தின் உரி மையாளருமான சு.பன்னீர்செல் வம்  அனைவரையும் வர வேற்று உரையாற்றினார்.

திருவண்ணமலை மாவட்ட மேனாள் தலைவர் தி.ச.கவுத மன், வேலூர் மண்டல செய லாளர் கு.பஞ்சாட்சரம் ஆகி யோர் முன்னிலை வகித்தனர்.

வேலூர் கழக மாவட்ட செயலாளர் கு.இளங்கோவன் தலைமையேற்று உரிமையாற்றி னார். பாரதிதாசன் கணினி மய்யம் மற்றும் நகலகத்தை சு.பன்னீர்செல்வம்  இணையர் ப.விஜயலட்சுமி திறந்த வைத்தார்.

நிகழ்வில் தந்தை பெரியார் படத்தினை வி.ஏழுமலை  அம் பேத்கர்  படத்தை மேனாள் திருவண்ணாமலை மாவட்ட தலைவர் தி.ச.கவுதமன்  பேரறி ஞர் அண்ணா  படத்தை கழகப் பொதுக்குழு உறுப்பினர் முனு. ஜானகிராமன்  ஆகியோர் திறந்து வைத்து உரையாற்றினார்கள்.

கணிணி மய்யம் சிறப்பாக செயல்படவும் தந்தை பெரியார், புரட்சி கவிஞர் பாரதிதாசன் ஆகியோரைப் பற்றி வேலூர் மாவட்ட மகளிர் பாசறை தலைவர் ந.தேன் மொழி, அனைத்துத்துறை ஓய்வு பெற்றோர் சங்க மாவட்ட துணைத் தலைவர் சி.ஜெகந்நாதன், ஓய்வு பெற்ற வட்டாட்சியர் எல்.லட்சுமணன் ஓய்வு பெற்ற துணை ஆட் சியர்கள் ஏ.இ.மூர்த்தி, ஏ.சந் திரன் ஆகியோர் உரையாற் றினார்கள்.

வேலூர் கழக மாவட்ட தலைவர் வி.இ.சிவக்குமார் தமிழர் தலைவர் நீட் தேர்வு பற்றி எழுதியப் புத்த கத்தை வெளியிட்டு உரையாற் றினார். நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் சு.பன்னீர்செல்வம் 100 புத்தகங்கள் வாங்கி அனை வருக்கும் வழங்கினார். வேலூர் மாநகர ப.க.அமைப்பாளர் உ.விஸ்வநாதன், குடியாத்தம் நகர பாசறை தலைவர் கி.லதா, வேலூர் மாவட்ட மகளிரணி அமைப்பாளர் ச.கலைவாணி, உறவினர்கள், நண்பர்கள் அரசு அலுவலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

போளூர் நகர செயலளர் தா.சுந்தரமூர்த்தி அனைவருக் கும் நன்றி கூறினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner