எழுத்துரு அளவு Larger Font Smaller Font

குடியாத்தம், ஜூன் 11- குடியாத் தம் புவனேசுவரிப் பேட்டை ஓவிஸ் அழகுநிலையத்தில் 8.6.2017 அன்று இரவு 7.30 மணியளவில் வேலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பில் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு வேலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் இர.அன்பரசன் தலைமை தாங்கினார்,

மாவட்ட அமைப்பாளர் மா.அழகிரிதாசன் மற்றும் வேலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக துணை செயலாளர் க.அருள் மொழி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் எழுதிய நீட் நுழைவுத் தேர்வு கூடாது ஏன்? என்ற புத்தகத்தை கிராம புறத்தில் உள்ள மாணவர்களுக் கும் ஆசிரியர்களுக்கும் வழங்கு வதென தீர்மானிக்கப்பட்டது. தமிழர் தலைவர் அவர்களிடம் பெறப்பட்ட 500 புத்தகங்களை கிராமப்புறங்களில் உள்ள 12ஆம் வகுப்பு பயிலும் மாண வர்களுக்கும் பெற்றோர்களுக் கும் ஆசிரியர்களுக்கும் பள்ளி களுக்கு சென்று வழங்குவதென தீர்மானிக்கப்பட்டது.

நீட் நுழைவுத்தேர்வு கூடாது ஏன் புத்தகத்தை பெற்றுக்கொண்டவர்கள்

1. வெ.தங்கராசு -- வேலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் - 100 புத்தகம் ரூ. 1000, வ.இரவிக்குமார் -- குடியாத்தம் விடுதலைவாசகர் வட்டம் சார்பில் - 100 புத்தகம் ரூ. 1000, சு.பன்னிர்செல்வம் - போளூர் பகுத்தறிவாளர் கழகம் 100 புத்தகம் ரூ. 1000, குடியாத்தம் மனிதநேய அறக்கட்டளை சார்பில் -100 புத்தகம் ரூ. 1000, வி.இ.சிவக்குமார் - வேலூர் மாவட்ட தலைவர் திராவிடர் கழகம் -50 புத்தகம் ரூ. 500,

இந்நிகழ்ச்சியில் வேலூர் மாண்டல தலைவர் வி.சடகோ பன், வேலூர் மாவட்ட தலை வர் வி.இ.சிவக்குமார், வேலூர் மாவட்ட மகளிர் பாசறை தலைவர் ந.தேன்மொழி, குடியாத்தம் விடுதலை வாசகர் வட்ட செயலாளர் வ.இரவிக் குமார், பகுத்தறிவாளர் கழக தோழர் எம்.பிரபு ஆகியோர் கலந்துகொண்டனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner