எழுத்துரு அளவு Larger Font Smaller Font

தஞ்சை, ஜூன் 11- தஞ்சாவூர் மாதாக்கோட்டை சாலை பொது நலத்தொண்டர் ந.பூபதி நினைவு பெரியார் படிப்பகம், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி நூலக நிர்வாகக் குழு கலந்துரையாடல் கூட் டம் 4.6.2017 அன்று மாலை 6 மணியளவில் பெரியார் படிப்பகத்தில் நடைபெற்றது.

படிப்பக புரவலர் தஞ்சை மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் வழக்குரைஞர் சி.அமர்சிங் தலைமை வகித்து உரையாற்றினார். தஞ்சை மாவட்டச் செயலாளர் அ.அருணகிரி, படிப்பகத் தலை வர் தங்க.வெற்றிவேந்தன், படிப் பக இயக்குநரும், மாவட்ட ப.க. செயலாளருமான கோபு.பழனிவேல் ஆகியோர் நிகழ் விற்கு முன்னிலையேற்று உரையாற்றினார்கள். படிப்பக செயலாளரும் மாவட்ட இளை ஞரணி அமைப்பாளருமான இரா.வெற்றிக்குமார், படிப் பக ஓராண்டு வரவு செலவை தாக்கல் செய்து உரையாற்றி னார். தொடர்ந்து மாவட்ட இளைஞரணி செயலாளர் வே.ராஜவேல், கழக பேச்சா ளர் முனைவர் அதிரடி க.அன் பழகன், ஒன்றிய இளைஞரணி செயலாளர் நா.வெங்கடேசன், மாவட்ட பகுத்தறிவு ஆசிரிய ரணி அமைப்பாளர் ந.சங்கர், மாநகர இளைஞரணி துணை தலைவர் அ.பெரியார்செல் வன், மாவட்ட வழக்குரைஞ ரணி தலைவர் இரா.சரவணக் குமார், பெரியார் பெருந் தொண்டர் தண்டாயுதபாணி, மாநகரத் தலைவர் பா.நரேந் திரன், மாநகரச் செயலாளர் சு.முருகேசன், வாசகர் முருகா னந்தம், மாவட்ட அமைப்பா ளர் ப.தேசிங்கு, விடுதலை வாசகர் வட்டச் செயலாளர் அழகர்சாமி, பூவை உ.முரு கேசன், பேராசிரியர் மணி வண்ணன், மாவட்ட கலை இலக்கிய அணி தலைவர் கவிஞர் துரை.சித்தார்த்தன், ஒன்றிய இளைஞரணி தலை வர் ப.விஜயக்குமார், சரவ ணன், வை.ராஜேஷ்கண்ணா, சர்வேயர் பாலகிருட்டிணன், திமுக மாவட்ட மருத்துவரணி அமைப்பாளர் டாக்டர் அஞ் சுகம்பூபதி, தலைமைச் செயற் குழு உறுப்பினர் இரா.குண சேகரன், தஞ்சை மண்டல செயலாளர் மு.அய்யனார் ஆகியோர் உரையை தொடர்ந்து கழகப் பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார் கருத்து ரையாற்றினார். படிப்பகத் தலைவர் தங்க.வெற்றிவேந் தன் நன்றி கூறினார்.

நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

1) இரங்கல் தீர்மானம்: கடந்த 37 ஆண்டுகளாக பெரி யார் கல்வி நிறுவனங்களுக்காக தன்னுடைய உழைப்பை நல் கியவரும், பெரியார் மணி யம்மை பல்கலைக்கழகத்தில் நிதி அலுவலராக பணியாற்றி யவரும் தமிழர் ஆசிரியர்  அவர்களின் நம்பிக்கைகுரிய வரும் ப.முத்துகிருட்டிணன் அவர்கள் 4.6.2017 அன்று உடல் நலக்குறைவால் மறை வுற்றார்கள். விடுதலை முன் னாள் மேலாளர் ஆளவந்தார் அவர்களின் மருமகன் விடுத லையில் செய்தியாளராக பணியாற்றிய விடுதலை ராதா பெரியார் பெருந்தொண் டர் தஞ்சை வையாபுரி ஆகி யோர் மறைவிற்கு இக்கூட் டம் ஆழ்ந்த இரங்கலையும், வீர வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறது.

2) பொதுநலத் தொண்டர் ந.பூபதி நினைவு பெரியார் படிப்பகம். தமிழர் தலைவர் நூலகம் 10ஆம் ஆண்டு விழாவினை 13.6.2017 அன்று மிகச்சிறப்பாக நடத்துவது என முடிவுசெய்யப்படுகிறது. அன்று காலை இப்பகுதி மக் கள்  பயன்பெறும் வகையில் காலையில் இரத்தப்பரிசோத னையும் மாலை மருத்துவரின் ஆலோசனைக் கருத்தரங்கமும் நடைபெறும்.

3) பூபதி நினைவு பெரியார் படிப்பகத்தின் நிர்வாகக்குழு புதிய உறுப்பினர்களாக, நக ரத்தலைவர் ப.நரேந்திரன், விடுதலை வாசகர் வட்ட செயலாளர் மீ.அழகர்சாமி, பூவை உ.முருகேசன், ஆர். எம்.எஸ்.காலனி முருகானந் தம், ஆசிரியர் ராஜி, இரா.வீரக்குமார், ஒன்றிய இளை ஞரணி தலைவர் ப.விஜயக் குமார் ஆகியோர் சேர்க்கப்படு கிறார்கள்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner