எழுத்துரு அளவு Larger Font Smaller Font

தஞ்சாவூர், ஜூன் 12- தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு ஒன் றிய திராவிடர் கழக கலந்துரை யாடல் கூட்டம் அம்மன்பேட்டை கண்ணன் இல்லத்தில் 9.6.2017 அன்று மாலை 6.30 மணியள வில் நடைபெற்றது.

மாவட்டத் தலைவர் சி.அமர்சிங் தலைமை வகித்து உரையாற்றினார். மாவட்டச் செயலாளர் அ.அருணகிரி முன் னிலையேற்று உரையாற்றினார். ஒன்றிய செயாளர் ஸ்டாலின் வரவேற்று உரையாற்றினார்கள். திருவையாறு நகரத் தலைவர் கவுதமன், நகரச் செயலாளர் மதுரகவி ஒன்றிய அமைப்பாளர் விவேகவிரும்பி, அம்மன் பேட்டை கலியபெருமாள், பெரும்புலியூர் தமிழரசன், ராயப்பேட்டை கவுதமன், இராவணன், தஞ்சை மாநகர இளைஞரணி துணைத் தலை வர் அ.பெரியார்செல்வன், திரு வையாறு ஒன்றியத் தலைவர் கண்ணன், பெரியார் பெருந் தொண்டர் தஞ்சை இரத்தின கிரி, மாவட்ட ப.க. செயலாளர் கோபு.பழனிவேல், மகளிரணி கோகிலா, மாநில ப.க. பொதுச் செயலாளர் மா.அழகிரிசாமி, கழகப் பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார் ஆகியோர் கருத்துரையாற்றினார்கள். ஒன் றிய இளைஞரணி செயலாளர் மோகன்ராஜ் தீர்மானங்களை வாசித்தார்.

கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன

தீர்மானம் 1: இரங்கல் தீர் மானம்

கலைவாணி வீரமணி அவர் களின் தந்தையார் பெரும் புலவர் இராமசாமி, பெரியார் பெருந்தொண்டர் தஞ்சை வையா புரி, பெரியார் மணியம்மை பல்கலைக்கழக நிதி அலுவலர் ப.முத்துகிருஷ்ணன், நாடாளு மன்ற முன்னாள் உறுப்பினர் இரா.செழியன் ஆகியோர் மறைவிற்கு இக்கூட்டம் ஆழ்ந்த இரங்கலையும் வீரவணக்கத்தை யும் தெரிவிக்கிறது.

தீர்மானம் 2: 26.5.2017 சென் னையில் நடைபெற்ற தலை மைச் செயற்குழு கூட்ட தீர்மா னங்களை ஏற்று செயல்படுத் துவது என முடிவு செய்யப்படு கிறது.

தீர்மானம் 3: திருவையாறு ஒன்றியத்தில் கிளைவாரியாக கலந்துரையாடல் கூட்டங்களை நடத்துவது. தெருமுனைக் கூட் டங்களை பெருமளவில் நடத் துவது என முடிவு செய்யப்படு கிறது.

தீர்மானம் 4: கல்லணையை கட்டி வரலாற்றில் நீங்கா இடம் பெற்றுள்ள கரிகால்சோழன் பிறந்த நாள் விழாவினை தமி ழர் தலைவர் ஆசிரியர் அவர்க ளின் தலைமையில் செப்டம்பர் (2017) மாதம் கல்லணையில் பெருவிழாவாக நடத்துவது என முடிவு செய்யப்படுகிறது.

தீர்மானம் 5: இனவுரிமை மீட்பு ஏடான விடுதலை சந்தாக் களை பெருமளவில் சேர்த்து வழங்குவது என முடிவு செய் யப்படுகிறது.

தீர்மானம் 6: இந்திய மாக்ஸ்சிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி அவர்களை தாக்கிய மதவாத கும்பலை வண்மையாக கண்டிக் கிறோம்.

தீர்மானம் 7: திருவையாறு தமிழ்மன்றத்தாரின் பெரியார் சுடர் பட்டம் பெற்ற மண்டலத் தலைவர் வெ.ஜெயராமன் அவர்களுக்கு பாராட்டை தெரிவித்துக் கொள்கிறது.

புதிய பொறுப்பாளர்கள்

திருவையாறு ஒன்றிய ப.க. செயலாளராக பெரும்புலியூர் இ.தமிழரசன் அவர்கள் நியமிக் கப்படுகிறார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner