எழுத்துரு அளவு Larger Font Smaller Font

மதுரை, ஜூன் 14- 1.6.2017 சனிக் கிழமை மாலை 6.30 மணிக்கு மதுரை விடுதலை வாசகர் வட்டத்தின் 54ஆவது நிகழ்ச்சி நடைபெற்றது.

கூட்டத்திற்கு விடுதலை வாசகர் வட்டத் தலைவர் பொ.நடராசன், நீதிபதி (பணி நிறைவு) தலைமை தாங்கி னார். வந்திருந்தோரை விடு தலை வாசகர் வட்டத்தின் செயற்குழு உறுப்பினர் செல் லத்துரை வரவேற்றுப் பேசி னார். சிறப்பு விருந்தினர் பேராசி ரியர் சு.கண்ணன் அவர்களை அறிமுகம் செய்து பேராசிரியர் அழகிரிசாமி உரையாற்றினார். இறுதியில் மதுரையின் “வர லாற்றுப் பாரம்பரியம்“ என்ற தலைப்பில் பேராசிரியர் சு. கண்ணன் அவர்கள் உரையாற் றினார். அவரது உரையில் மதுரையின் வரலாறு 52000 ஆண்டுகள் பழமையானது என்பதோடு தொடர்ச்சியாக தொடர்ந்து வந்த வரலாறு என்பதும் ஒரு தனிச்சிறப்பா கும்.

மதுரை நகருக்கு கீழே  பழமையான நகரம் உள்ளது. கல் ஆயுதங்கள் பயன்படுத்தப் பட்ட காலம் கி.மு.500, முதல் 150000 வரையிலான காலம். சங்க காலம் கி.மு.500 முதல் கி.பி. 300 எனக் கணக்கிடப்பட்டுள் ளது. கோவளம்பொட்டல், அனுப்பானடி பகுதிகளில் சங்க கால நாணயங்கள் கிடைக் கின்றன. சங்க காலத்தில் புறச் சமயத் தாரை மிக ஆபாசமாக திட்டியதும் இந்து மதத்தினரி டம் இருந்து வந்தது என்பதை விரித்துரைத்தார். மதுரை நக ரின் அமைப்புகளை சித்திரை வீதி, மாசி வீதி, வெளி வீதி என அமைக்கப்பட்ட விதங் களை அருமையாக விளக்கி னார். மாலிக் கபூர், சுல்தான் கள், நாயக்கர்கள், ஆங்கிலே யர் ஆகியோர் ஆட்சிக் காலத் தில் மதுரை எவ்வாறு இருந் தது என்பதை தெளிவாக விவ ரித்தார்.

மதுரையின் வரலாற்றுப் பாரம்பரியத்தை பேராசிரியர் சு.கண்ணன் விவரித்தபோது பார்வையாளர்களுக்கு ஒரு பிரமிப்பை ஏற்படுத்தியது. ஒரு தனிச் சிறப்பாகும். ஒருங் கிணைப்பாளர் மா.பவுன்ராசா நன்றி கூறினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner