எழுத்துரு அளவு Larger Font Smaller Font

கீழப்பாவூர், ஜூன் 16 தென்காசி மாவட்ட திராவிடர் கழக கழந்துரையாடல் கூட்டம் கீழப்பாவூர் பெரியார் திடலில் தலைமை  செயற்குழு உறுப்பினர்  சீ.டேவிட் செல்லத்துரை  தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு கருத்துரையாக தஞ்சை  இரா.ஜெயக்குமார் (பொதுச் செயலாளர்) மதுரை வே.செல்வம், (அமைப்பு செயலாளர்)  முன்னிலையாக இல.திருப்பதி  குருசாமி,  வழக்குரைஞர், த.வீரன்  அய்.ராமச் சந்திரன்,  அருண் பங்கேற்றனர்.

கூட்டத்தில், மு.இராமசாமி (நகரத் தலைவர்)  செ.செல் வராஜ் (நகரச் செயலாளர்) கோ.வெற்றிவேந்தன் (நெல்லை மண்டல இளைஞரணி செயலாளர்) அ.சவுந்தர பாண்டியன் (நெல்லை மண்டல மாணவரணி செயலாளர்) சு.கோபால் (தென் காசி மாவட்ட இளைஞரணி தலைவர்) ராசையா (பகுத்தறி வாளர் கழக மாவட்டச் செயலாளர்) மு.குமார், மகேஷ்குமார், பி.சிவா, ஆ.முருகன், இல. அன்பழகன், ஜா.ஜோன்ஸ் ஆகியோர் பங் கேற்றனர்.

இரங்கல் தீர்மானம்

தீர்மானம் 1: பெரியார் மணியம்மை பல்கலைகழக இணை வேந்தர் கொடையாளர் வீகேயென், பெரியார் பல்கலைகழக நிதி அலுவலர் நெல்லை மாவட்டம் தேவநல்லூரைச் சேர்ந்த ப.முத்துகிருஷ்ணன் விடுதலை முன் னாள் செய்தியாளர் விடுதலை ராதா, கவிஞர் இன்குலாப், நாடாளுமன்ற முன்னாள் உறுப் பினர் இரா.செழியன், மேலமெஞ்ஞானபுரம் டேவிட் ஜெயராஜ், கீழப்பாவூர் கருவேலம் ஆகியோர் மறைவிற்கு இரங்கலையும், வீர வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

தீர்மானம் 2: 26.05.2017 அன்று சென்னையில் நடைபெற்ற திராவிடர் கழக தலைமைச் செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ஏற்று செயல்படுத்திடுவது என முடிவு செய்யப்படுகிறது.

தீர்மானம் 3: 2017 சூலை 6,7,8 மற்றும் 9 ஆகிய நாள்களில் குற்றாலத்தில் நடைபெறும் பெரியாரியல் பயிற்சிப்பட்டறையில் தென்காசி மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் பெரு மளவில் மாணவர்களை பங்கேற்கச் செய்வ துடன் முழு ஒத்துழைப்பு வழங்குவது என முடிவு செய்யப்படுகிறது.

தீர்மானம் 4: 2017 சூலை 8ஆம் தேதி ஆலங் குளத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பங்கேற்கும் தந்தை பெரியார் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தை மிக எழுச்சியுடன் நடத் துவது எனவும், பெரியாரியல் பயிற்சிப் பட்டறை,  பொதுக்கூட்டத்தை விளக்கி சுவர் எழுத்து விளம்பரம் உள்ளிட்ட அனைத்து விளம் பரங்களையும் மிகச்சிறப்பாக செய்வது எனவும், சூலை 8ஆம் தேதி குற்றாலம் வருகை தரும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு தென்காசி மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிப்பது என முடிவு செய்யப்படுகிறது.

தீர்மானம் 5: கோடானகோடி தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணவர்களை பாதிக்கும் மருத்துவக்கல்விக்கான நுழைவுத் தேர்வு (நீட்) தொடர்பாக தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் எடுக்கும் முடிவுக்கு துணை நிற்பது என முடிவு செய்யப்படுகிறது. நீட் தேர்வி லிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என தமிழ்நாடு சட்டமன்றத்தின் முடிவுக்கு மத்திய அரசும், குடியரசு தலைவரும் ஒப்புதல் வழங்குமாறு இக்கூட்டத்தில் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner