எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

தருமபுரி, ஜூன் 18- தருமபுரி மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் 11.6.2017 அன்று மாலை 5 மணியளவில் தருமபுரி பெரியார் மன் றத்தில் மாவட்ட திராவிடர் கழக தலை வர் வீ.சிவாஜி தலைமையில் பொதுக் குழு உறுப்பினர் அ.தமிழ்ச்செல்வன், மாவட்ட துணைத் தலைவர்கள் க.கதிர், பீம.தமிழ்பிரபாகரன், மாவட்ட விவ சாய அணி தலைவர் சிசுபாலன் ஆகி யோர் முன்னிலையில் நடைபெற்றது.

மாவட்ட செயலாளர் சி.காமராஜ் வரவேற்புரையாற்றினார். மாநில அமைப் புச் செயலாளர் ஊமை.ஜெயராமன், மாநில ப.க.செயல் தலைவர் தகடூர் தமிழ்ச்செல்வி, மாநில மாணவரணி துணை செயலாளர் த.யாழ்திலீபன், மண்டல செயலாளர் கரு.பாலன் ஆகி யோர் கருத்துரையாற்றினர். கலந்துரை யாடல் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:

தீர்மானம் 1: மாநில பகுத்தறிவாளர் கழக செயல் தலைவர் தகடூர் தமிழ்ச் செல்வி அவர்களின் பணி நிறைவு விழாவிற்கு ஜூன் 27ஆம் தேதி தரும புரிக்கு வருகை தரும் தமிழர் தலைவர் திராவிடர் கழக தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு சிறப்பான முறையில் நல்லம்பள்ளி பகுதியில் இருந்து இருசக்கர வாகனம் மற்றும் மகிழுந்து மூலம் கருஞ்சட்டை தோழர் கள் கையில் கழகக் கொடியேந்தி வர வேற்பதென முடிவு செய்யப்படுகிறது.

தீர்மானம் 2: தமிழர் தலைவரை வரவேற்கும் விதமாக தருமபுரி நகர் முழுவதும் கழகக் கொடிகளை கட்டி யும், விளம்பர பதாகைகள், சுவரொட் டிகள், சுவர் விளம்பரங்கள், உள்ளூர் தொலைக்காட்சிகள் மூலம் விளம்பரம் செய்தும் மாநாட்டைப் போல எழுச்சி யுடன் நடத்துவதென தீர்மானிக்கப்படுகிறது.

தீர்மானம் 3: கழக மாணவரணி சார்பில் ஜூலை மாதத்தில் புத்தக விற்பனை பிரச்சாரம் செய்யவும், மாவட்ட மகளிரணி, மகளிர் பாசறையினரது-கட்டரசம்பட்டி, காமலாபுரம் பகுதிகளில் கலந்துரையாடல் கூட்டங் களை நடத்துவது எனவும், பகுத்தறி வாளர் கழகத்தின் சார்பில் பாப்பி ரெட்டிப்பட்டியில் கருத்தரங்கம் நடத் துவது, ஜூலை 15ஆம் தேதி கல்வி வள்ளல் காமராசர் அவர்களின் பிறந்த நாளை நகர கழகம் சார்பில் சிறப்பாக கொண்டாடுவது, விவசாய அணியின் சார்பில் வரகூர் பகுதியில் விவசாயி களை ஒருங்கிணைத்து கலந்துரையாடல் கூட்டம் நடத்துவது, பகுத்தறிவு ஆசிரி யரணி சார்பில் புதிய உறுப்பினர் சேர்த் தல், விடுதலை வாசகர் வட்டத்தின் சார்பில் மாதந்தோறும் கருத்தரங்கம் நடத்துதல் மற்றும் நூல் வெளியீட்டு விழா, திறனாய்வுரைகள் நடத்துவதென தீர்மானிக்கப்படுகிறது.

தருமபுரி மாவட்ட மகளிரணி புதிய பொறுப்பாளர்கள்

மாவட்ட மகளிரணி

மாவட்ட தலைவர்: அ.சங்கீதா, மாவட்ட செயலாளர்: த.முருகம்மாள், மாவட்ட அமைப்பாளர்: சி.முனியம் மாள், மாவட்ட துணைத் தலைவர்: சாமந்தி சிவலிங்கம், மாவட்ட துணைச் செயலாளர்: காமலாபுரம் உமா

மாவட்ட மகளிர் பாசறை

மாவட்ட தலைவர்: மு.சாந்தி, மாவட்ட செயலாளர் க.கவிதா, மாவட்ட அமைப் பாளர்: பெ.கோகிலா, மாவட்ட துணைத் தலைவர்: சி.சுகுணா, மாவட்ட துணைச் செயலாளர்: சி.கலைவாணி

விடுதலை வாசகர் வட்ட பொறுப்பாளர்கள்

தலைவர்: புரவலர் கே.ஆர்.சின்ன ராஜ், செயலாளர்: மா.சுதா, அமைப் பாளர்: ஊமை.பீமன்

கலந்துரையாடல் கூட்டத்தில் கலந்துகொண்ட கழக நிர்வாகிகள், மாநில ப.க. துணைத் தலைவர் அண்ணா. சரவணன், கலைக்குழு கா.இளங் கோவன், மாவட்ட இளைஞரணி தலை வர் சி.பகத்சிங், ஒன்றிய மாணவரணி தலைவர் இ.சமரசம், நகர செயலாளர் காசி.பாஸ்கர், மாணவரணி துணை செயலாளர் சி.அறிவழகன், முக.சக்கரை (திமுக), ஆசிரியரணி அமைப்பாளர் த.மணிவேல், மகளிரணி தோழர்கள் மென்மை, ச.ஜெயசூரியா, ச.தென்னரசு பெரியார், அருண்குமார், மாணவரணி அமைப்பாளர் வி.பி.சிங், மாணவரணி தலைவர் மாரவாடி முனியப்பன், நவலை கவிநிலவன், மாரவாடி கணேசன், காம லாபுரம் மாணவரணி தோழர் கவியரசு, மாவட்ட இளைஞரணி செயலாளர் சிங்கம் (எ) பெரியண்ணன், பெரியார் பிஞ்சுகள் விவேக், தமிழ்யாழினி, விடு தலை வாசகர் வட்ட செயலர், மா.சுதா, மகளிர் பாசறை செயலாளர் கவிதா காம ராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மாவட்ட துணை செயலாளர் பெ. கோவிந்தராஜ், கூட்டத்தில் கடவுள் மறுப்பு கூறி ஒருங்கிணைத்து நடத்தினார். ஆசிரி யரணி அமைப்பாளர் த.மணிவேல் நன்றி கூறினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner