எழுத்துரு அளவு Larger Font Smaller Font

நீடாமங்கலம், ஜூன் 23 நீடா மங்கலம் முதுபெரும் பெரியார் பெருந் தொண்டரும், திராவிடர் கழகப் பொதுக்குழு உறுப்பி னருமான ஆ.சுப்பிரமணியன் அவர்கள் 76 ஆவது வயதில் 16.6.2017 அன்று இரவு 11 மணியளவில் உடல் நலக்குறைவு காரணமாக இயற்கை எய்தினார்.

அன்னாரின் இறுதி நிகழ்வு 17.6.2017 அன்று மாலை 4 மணி யளவில் அவரது இல்லத்தில் நடை பெற்றது. இந்த நிகழ்விற்கு தலைமைச் செயற்குழு உறுப் பினர் இராஜகிரி கோ.தங்கராசு தலைமையேற்று இரங்கலுரை ஆற்றினார்.

அவரின் ஈடற்ற பொது வாழ்வு பற்றி பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன், பொதுச் செயலாளர் இரா.ஜெயக் குமார், தலைமை செயற்குழு உறுப்பினர் இரா.குணசேகரன், பட்டுக்கோட்டை மாவட்டத் தலைவர் ஆர்.பி.எஸ்.சித்தார்த் தன், மாவட்டச் செயலாளர் பெ. வீரையன், விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் மோகன், ப.க. பொதுச்செயலாளர் அழகிரிசாமி, பகுத்தறிவு ஆசிரி யரணி மாநில அமைப்பாளர் சி.இரமேசு, திருத் துறைப்பூண்டி மாவட்டத் தலைவர் கி.முருகையன், தஞ்சை மாவட்டத் தலைவர் சி.அமர்சிங், மாவட்டச் செயலாளர் அருணகிரி, மண்டலத் தலைவர் ஜெய ராமன், திருவாரூர் மண்டலத் தலைவர் கோபால், நீடா நகரத் தலைவர் பி.எஸ்.ஆர்.அமிர்தராஜ், ஒன்றியத் தலைவர் கோ.கணேசன், ப.க. மாவட்டத் தலைவர் த.வீரமணி, மகளிரணிச் செயலாளர் கலைச் செல்வி, குடந்தை மாவட்டத் தலைவர் கவுதமன், பட்டுக்கோட்டை மாவட்ட அமைப்பாளர் சிதம் பரம், பெரியார் கல்வி மய்ய இயக்குனர் பேச்சாளர் அதிரடி அன்பழகன் ஆகியோர் இயக்கத்தின் சார்பில் நினைவுரை ஆற்றினர். அனைத்துக் கட்சிகளின் சார்பாக நீலன் பள்ளி தாளாளர் உ.நீலன், அதிமுக ஒன்றியச் செயலாளர் எம்.எஸ். சங்கர், முன்னாள் வர்த்தக சங்கத் தலைவர் இளங்கோவன், வர்த்தக சங்க தலைவர் ராஜாராமன், திமுக வழக்குரைஞர் அணி பொறுப் பாளர் சோம.செந்தமிழ்ச் செல் வன், திமுக முன்னாள் நகர் மன்றத்தலைவர் ராஜசேகரன், சிபிஅய் ஒன்றியச் செயலாளர் நடேச தமிழார்வன், அதிமுக முன்னாள் நகர்மன்றத் தலைவர் கோ.செந்தமிழ்செல்வன், மதிமுக ஒன்றியச் செயலாளர் ராஜ மாணிக்கம் ஆகியோர் இரங்க லுரை ஆற்றினார்.

இறுதி ஊர்வலத்தில் பட்டுக் கோட்டை மா.து. தலைவர் அரு.நல்லதம்பி, ப.க. மாவட்டப் புரவலர், ஆசிரியர் வேலு, மாவட்ட துணை செயலாளர் நீலகண்டன், மண்டல இளை ஞரணிச் செயலாளர் சோம.நீல கண்டன், தஞ்சை மாவட்ட ப.க. செய லாளர் கோபு.பழனிவேல், திராவிடர் மகளிர் பாசறை மாநிலச் செயலாளர் கோ.செந்தமிழ்ச் செல்வி, திருவாரூர் மாவட்ட ப.க. தலைவர் சிவக் குமார், மாவட்டச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, மயிலாடுதுறை மாவட்டத் தலைவர் ஜெகதீசன், செயலாளர் கி.தளபதிராஜ், திரு வாரூர் மாவட்ட துணைத்தலைவர் அருண்காந்தி, மாவட்ட மகளி ரணித் தலைவர் சரசு, மண்டலச் செயலாளர் முனியாண்டி, பட்டுக்கோட்டை மாவட்ட ப.க. செயலாளர் கவுதமன், முன்னாள் மாவட்ட அமைப்பாளர் ஊமைத் துரை, கோட்டூர் ஒன்றியத் தலைவர் புட்பநாதன், நீடா. ஒன்றியச் செயலாளர் நா.இரவிச் சந்திரன், மாவட்ட இளைஞரணி து.தலைவர் வீரத்தமிழன், பேரா வூரணி ஒன்றியத் தலைவர் சி. சந்திரமோகன், பட்டுக்கோட்டை மாவட்ட ப.க.புரவலர் ப.சிவ ஞானம், கழக நகரச் செயலாளர் ராஜேந்திரன், ப.க.அமைப்பாளர் நா.உ.கல்யாண சுந்தரம், திமுக ஒன்றியத் தலைவர் பரமசிவம், ம.பொன்னுசாமி, மன்னை நகரச் செயலாளர் செல்வராஜ், சேதுபா சத்திரம் ஒன்றியத் தலைவர் த.பெரியராஜன், குடந்தை விடு தலை வாசகர் வட்டத் தலைவர் குருசாமி, மாவட்ட துணைச் செயலாளர் நிம்மதி, மாவட்டச் செயலாளர் துரை ராஜ், குடந்தை மாவட்ட ப.க. செயலாளர் ப.மோகன், தஞ்சை மண்டலச் செயலாளர் அய்யனார், தலைமை கழகப் பேச்சாளர்கள் இராம. அன்பழகன், பூவை. புலிகேசி, பெரியார் செல்வன், சு.சிங்கார வேலு ஆகியோரும் பட்டுக் கோட்டை, தஞ்சாவூர், திரு வாரூர், கும்பகோணம், திருத் துறைப்பூண்டி மயிலாடுதுறை, நாகை மாவட்டங்களில் இருந்து ஏராளமான தோழர்களும், பொது மக்களும் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். மாலை 6 மணியளவில் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner