எழுத்துரு அளவு Larger Font Smaller Font

கீரமங்கலம், ஜூலை 3 அறந்தாங்கி கழக மாவட்டம் கீரமங்கலத்தில் 24.6.2017 அன்று மாலை 6 மணிக்கு பேரூராட்சி பொது மேடையில் நகர திராவிடர் சார்பில் நடந்த பொதுக் கூட்டத் திற்கு பெரியார் பெருந்தொண்டர் மாவட்ட அமைப்பாளர் அ.தங்கராசு தலைமையேற்று உரையாற் றினார்.

அனைவரையும் இனிய மாலை பொழுதினிலே வருக வருக என வரவேற்று மாவட்ட இளைஞர் அணி செயலர் க.வீரையா வரவேற்றார். திராவிடர் கழக பேச்சாளர் தஞ்சை பெரியார் செல்வன் அவர்கள் நீண்ட நேரம் சிறப்புரையாற்றினார். அவர் பேச்சின்போது பள்ளிப் பாட புத்தகத்தில் தொழில் செய்வோர் படங்களைப் போட்டு இவன் வெளுக்கிறான். இவன் செருப்பு தைக்கிறான். இவன் சவரம் செய்கிறான் என்று பள்ளிப் பாட புத்தகத்தில் இருந்தது.

பூணூல் போட்டு ஒரு படம், இவர் படிக்கிறார் என்று இருந்தது. ஏன் இந்த வேறுபாடு என பாட புத்தகத்தில் தனது போராட்டத்தின் மூலமாக நீக்கச் செய்தவர் தந்தை பெரியார் என்றும், இன்று யாருக்கும் தெரி யாமல் கடை உணவை தாழ்த் தப்பட்டோர் வீட்டில் வைத்து சாப்பிட்டும் பார்ப்பனர்கள் நாடகமாடுகிறார்கள். தந்தை பெரியார் ஒடுக்கப்பட்ட மக் களுக்காக வாழ்நாளெல்லாம் பாடுபட்டார்.காமராசர், பேரறிஞர் அண்ணா போன்றவர்களின் உழைப்பால் தமிழர்களாகிய நாம் முன்னேற்றம் பெற்றுள்ளோம் எனவும் பேசினார்.

புதுகை மண்டல தலைவர் பெ.இராவணன், திமுக மாவட்ட இலக்கிய அணிச் செயலாளர் கணேசன், மாவட்ட தலைவர் மாரிமுத்து, மாவட்ட செயலர் இளங்கோ, ஒன்றிய தலைவர் சவுந்தரராசன், ஒன்றிய செயலர் துரை குமார், மாவட்ட இளைஞ ரணி தலைவர் மகாராசா, அறந்தை சுப்ரமணியன் குழ.சந் திரகுமார், ஒன்றிய தலைவர் மு.தேவேந்திரன், மகளிரணி டார்வி, பட்டுக்கோட்டை திரா விடர் கழக துணைச் செயலாளர் வை.சிதம்பரம், சித்தக்கிகாடு பொறியாளர் கதிர்வேல், விடு தலை வாசகர் வட்டம் செயலர் நெடுவால்வேலு ஆசிரியர், படப்பனர் வயல், நீலகண்டன், பெரியார் பிஞ்சுகள் கு.சிந்தனை செல்வன், கொத்தமங்கலம் இராமையன் பி.எல்.ராஜ்குமார், பட்டுக்கோட்டை அறந்தாங்கி கழக மாவட்ட தோழர்கள் பெரு மளவில் கலந்து கொண்டு சிறப் பித்தார்கள். பொது மக்கள் அதிக அளவில் பங்கேற்று கருத்துகளை கேட்டு ஊக்கப்படுத்தி சிரித்து மகிழ்ந்து வரவேற்றார்கள்.

முடிவில், இளைஞரணி துணைச் செயலாளர் வழக்குரை ஞர் குமார் நன்றி கூறினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner