எழுத்துரு அளவு Larger Font Smaller Font

மதுரை, ஆக.4 மதுரை மாநகர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பாக ‘பெருந் தலைவர் காமராசர்’ பிறந்த நாள் சிறப்புக்கூட்டம், மதுரை யானைக்கல்லில் உள்ள எஸ்.ஏ. எஸ். அரங்கில் 29.07.2017 மாலை 6 மணிக்கு நடைபெற்றது.

சிறப்புக்கூட்டத்திற்கு பகுத்த றிவாளர் கழகத்தின் மாவட்டத் தலைவர் சுப.முருகானந்தம் தலைமையேற்றார். மதுரை மாநகர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகச்செயலாளர் பெரி.காளியப் பன் அனைவரையும் வரவேற்றார்.  தலைமைச்செயற்குழு உறுப்பினர் தே.எடிசன்ராசா, மாநில அமைப் புச் செயலாளர் வே.செல்வம், மாநில வழக்குரைஞர் அணிச்செய லாளர் ஓய்வு பெற்ற நீதிபதி பொ.நடராசன், மண்டலச் செயலாளர் மா.பவுன்ராசா ஆகியோர் முன் னிலை வகித்தனர்.

கல்வியின் அவசியம் பற்றி தந்தை பெரியாரும், பெருந்தலை வர் காமராசரும் கொண்டிருந்த மன ஓட்டத்தைப்பற்றியும், தந்தை பெரியாருக்குப்பின் கல் விக்கு முக்கியம் அளித்து திரா விடர் கழகத்தலைவர்   ஆசிரியர்  ஆற்றி வரும் பணிகள் பற்றியும் பகுத்தறிவாளர் கழகத்தின் மாநிலத் தலைவர் முனைவர் வா.நேரு கருத்துரையாற்றினார்.

சிறப்புரையாற்றிய மதச்சார் பற்ற ஜனதாதளத்தின் பொதுச் செயலாளர்  க.ஜான்மோஸஸ் அவர்கள் திராவிடர் கழகத்தின் தொண்டர்கள் எந்தப்பதவிக்கும் ஆசைப்படாதவர்கள், சமரசம் செய்துகொள்ளாதவர்கள், உங்கள் மத்தியில் பெருந்தலைவர் குறித்து பேசுவதில் மட்டற்ற மகிழ்ச்சி எனக்கூறினார்.

தந்தை பெரியார் அவர்கள் காங்கிரசு கட்சியின் தலைவராக இருந்தபோது, 1922-களிலேயே தந்தை பெரியாரின் கூட்டத்தை முன்னின்று நடத்தியவர் காமராசர். பின்னர் தந்தை பெரியார் அவர்கள் சுயமரியாதை இயக்கம், நீதிக்கட்சி, திராவிடர் கழகம் என இருந்து காங்கிரசை ஒழிப்பதே தன் வேலை என்று இருந்த நேரத்திலும், இராஜாஜிக்கு எதிராக காமராசர் அவர்கள் முதலமைச்சராக அமைவதற்கு காரணமாக இருந்தார்.

பெருந்தலைவர் காமராசரின் சாதனை பட்டியல்கள் மக்கள் அனைவருக்கும் தெரியும். இன்றைக்கு அப்படிப்பட்ட ஒரு தலைவரை பார்க்க இயலுமா? தந்தை பெரியாரை போல, பெருந்தலைவர் காமராசரைப் போல அனைத்தும் மக்களுக்காக என வாழ்ந்த தலைவர்களின் வரலாறுகள் இளைய சமுதாயத் திற்கு தெரிய வேண்டும் எனக் குறிப்பிட்டு பெருந்தலைவர் காமராசர் அவர்கள் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச்சார்ந்த பரமேஸ்வரன் அவர்களை இந்து அற நிலையத் துறைக்கு அமைச்சராக்கி அழகு பார்த்தவர், எவன் நம்மைத்தீண்டி னால் தீட்டு என்று சொன்னானோ, அவர்களை வைத்தே பரிவட்டம் கட்ட வைத்தவர்.சாதி ஒழிப்பை முதன்மையாகக் கருதியவர்.

பெருந்தலைவர் காமராசர் செய்த கல்விச்சாதனைகள், தொழிற்சாலைகள், அணைகள் என வரிசையாகக் குறிப்பிட்டு, பெல் கனரகத்தொழிற்சாலை திருச்சியில் அமைவதற்குக் காரணமாக இருந்தவர் எனக் குறிப்பிட்டு பெல் கனரகத் தொழிற்சாலை எப்படி அமைந் தது என்னும் வரலாற்றைக் கூறினார். அவர் காங்கிரசு கட்சியில் இருந்தபோதும், டில் லிக்கு அடிபணிந்து போகாமல் சுயமரியாதை மிக்கவராக இருந் தார். முதல் அரசியல் சட்டத் திருத்தம் அமையக் காரண மாக தந்தை பெரியாரின் போராட்ட மும், அதனை பிரதமர் நேருவிடம் பெருந்தலைவர் காமராசர் அவர்கள் தந்தை பெரியாரின் நியாயமான போராட்டத்தை விளக்கியதும் காரணம் என்றார்.

தமிழகத்தில் காமராசர் அவர் கள் முதல்வராக இருந்தபொழுது டில்லியில் இருந்து இந்தியில் கடிதம் வந்தது. ஆங்கிலத்திலும் அனுப்புங்கள் என்று காமராசர் சொல்லிப்பார்த்தார். நடக்க வில்லை.

தமிழக அதிகாரிகளிடம் இனிமேல் இந்தியில் கடிதம் வந்தால்,நீங்கள் தமிழில் பதில் அனுப்புங்கள் என்றார். அதன் படியே தமிழில் பதிலை, டில்லிக்கு அனுப்பியதும் அவர் கள் முறையிட்டார்கள்.

பின்னர் ஒழுங்காக அவர்கள் ஆங்கிலத்தில் அனுப்ப ஆரம்பித் தார்கள். காங்கிரசின் திட்டத்தை ஏற்று , பெருந்தலைவர் காமராசர் அவர்கள் முதலமைச்சர் பதவியிலிருந்து விலகியபோது, வேண் டாம் என்று அறிக்கை விடுத்தவர், இது தமிழ் நாட்டின் தற் கொலைக்குச்சமம் எனச்சொன் னவர் தந்தை பெரியார் எனப் பல்வேறு நிகழ்வுகளை குறிப் பிட்டுச்சொல்லி உணர்ச்சி மிகுந் தும், சில இடங்களில் நகைச் சுவையோடும் இன்றைய அர சியல் நிலமைகளைக் குறிப்பிட்டு நையாண்டி செய்தும் ஆற்றிய உரையாக  க.ஜான்மோஸஸ் அவர்களின் உரை அமைந்தது.

சிறப்பு கூட்டத்தின் முடிவில் பகுத்தறிவாளர் கழகத்தின் மாவட்ட துணைத்தலைவர் செல்வ.சேகரன் நன்றியுரையாற்றி னார்.  திரளாகத் தோழர்கள், பொறுப்பாளர்கள் கலந்து கொண் டனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner