எழுத்துரு அளவு Larger Font Smaller Font

தருமபுரி, ஆக.8 தருமபுரி மாவட்ட பகுத்தறிவாளர் கழக துணைத் தலைவர் இர. கிருட் டிணமூர்த்தி அவர்களின் தாயார் இரா. சின்னத்தாயம்மாள் (வயது 82) அவர்கள் வயது முதிர்வின் காரணமாக 5.8.2017ஆம் தேதி மாலை 6 மணி அளவில் மறை வுற்றார்.

அவருடைய உடல் எஸ். கொட்டாவூரில் தோழர் கிருட் டிணமூர்த்தி இல்லத்தில் பொது மக்கள் பார்வைக்காக வைக்கப் பட்டிருந்தது. மறைவு செய்தி யறிந்து மாவட்ட தலைவர் வீ. சிவாஜி தலைமையில் உடலுக்கு மாலை வைத்து கழக தோழர்கள் வீர வணக்கம் செலுத்தினர். அதைத் தொடர்ந்து சுடுகாட்டில் உடலடக்கம் செய்யப்பட்டது.

இரங்கல் உரை

முன்னதாக திராவிடர் கழகத் தலைமை செயற்குழு உறுப்பினர் கே.சி. எழிலரசன் மாலை வைத்தார் - கழக தோழர்கள் வீர வணக்கம் செலுத்தினர். அங்கு நடைபெற்ற இரங்கல் கூட்டம் மாவட்ட தலைவர் வீ. சிவாஜி தலைமையில் நடைபெற்றது. முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கந்தசாமி, தர்மலிங்கம் ஆகியோர் முன்னிலையில் கழக மண்டல தலைவர் பழ. வெங்கடா சலம், மாநில பகுத்தறிவாளர் கழக துணைத் தலைவர் அண்ணா சரவணன், மாவட்ட பகுத்தறி வாளர் கழக தலைவர் கதிர் செந்தில் ஆகியோர் இரங்கலுரை யாற்றினர்.

இந்நிகழ்வில் மாவட்ட செய லாளர் சி. காமராஜ், மாவட்ட அமைப்பாளர் இ. மாதன், பொதுக் குழு உறுப்பினர்கள் அ. தமிழ்ச் செல்வன், இரா. வேட்ராயன், மாவட்ட துணைத் தலைவர்கள் கதிர், பீம. தமிழ்பிரபாகரன், மாவட்ட துணை செயலாளர் பெ. கோவிந்தராஜ், திருப்பத்தூர் மாவட்ட செயலாளர் வி.ஜி. இளங் கோவன், மண்டல மாணவரணி தலைவர் எழில், சிற்றரசு, சங்கீதா, தோழர்கள் சகாதேவன், பழனி, கோவிந்தராஜ், மத்தூர் ஒன்றிய தலைவர் முருகேசன், காமலா புரம் கிளை தலைவர் சரவணன், காரிமங்கலம் ஒன்றிய தலைவர் இராமசாமி, சின்னசாமி, மார்டன் ரேசனலிஸ்ட் வாசகர் வட்ட செயலர் க. சின்னராஜ், சுந்தரம், மாவட்ட இளைஞரணி தலைவர் பகத்சிங், தருமபுரி நகர தலைவர் மு. பரமசிவம், மாணவரணி பொறுப்பாளர்கள் வி.பி.சிங், பிரபாகரன், முனியப்பன், பாப் பாரப்பட்டி வினோபாஜி,  தீ, ஏங்கல்ஸ், இளையதீபன், கனக ராஜ், தவமணி, ஓகேனக்கல் தனசேகர் மதிமுக சிவபாதம் மற்றும் பகுத்தறிவாளர் கழக ஆசி ரியர்கள் மற்றும் பல  அரசியல் கட்சியினர் கலந்து கொண்டு கிருட்டிணமூர்த்தியின் சகோ தரர்கள் சேட்டு, ஆறுமுகம் மற்றும் உறவினர்களுக்கு ஆறுதல் கூறினர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner