எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, செ. 2- தமிழகத்தில் நீட் தேர்வு திணிக்கப்பட்டதால் ஆசைப்பட்டபடி மருத்துவராக முடியாத அரியலூர் மாணவி அனிதா நேற்று மதியம் தற் கொலை செய்து கொண்டதாக வந்த அவலச் செய்தியை அறிந்த திராவிடர் மாணவர் கழகத்தினர் சென்னை அண்ணா சாலையிலுள்ள தந்தை பெரியா ரின் சிலையின் முன்பு ஆர்ப் பாட்டம் செய்து கைதாகினர்.

சமூகநீதி, கூட்டாட்சி, மக்க ளாட்சியின் மாண்புகளை புறந் தள்ளும் நீட் தேர்வு தமிழகத்தின் மீது வலுக்கட்டாயமாக திணிக் கப்பட்டது. கடந்த ஓராண்டு காலமாக திராவிடர் கழகம் உள்ளிட்ட அனைத்து எதிர்க் கட்சிகளும் இதனை எதிர்த்து பல்வேறு வகைகளில் போராடி வந்தனர். இதுதொடர்பாக நீதி மன்றங்களில் வழக்குகளும் தொடரப்பட்டிருந்தது. அதில் பன்னிரண்டாம் வகுப்பில் 1200க்கு 1176 மதிப்பெண்கள் பெற்ற அரியலூர் மாணவி அனி தாவும் தன்னை இணைத்துக் கொண்டு உச்சநீதிமன்றம் வரை சென்று போராடினார். ஆனால், மத்திய அரசு செய்த துரோகத்தினால் மருத்துவர் இடம் கிடைக்காத மாணவி அனிதா நேற்று மதியம் (1.-9.2017) தற்கொலை செய்து கொண் டதாக தகவல்கள் பரவியது. இதையறிந்து கொதித்தெழுந் தனர் திராவிடர் மாணவர் கழ கத்தினர். உடனடியாக திராவி டர் கழக மாநில மாணவரணிச் செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார் அவர்களின் தலை மையில் வை.கலையரசன், கு. செல்வேந்திரன், சோ.சுரேஷ், ரெ.யுவராஜ், க.கலைமணி,

மு.பவானி, சு.விமல்ராஜ், சே.பிரபாகரன், ரா.அருள், க.அமுதரசன், த.யாழ்திலீபன், இராமநாதன், மகேந்திரவர்மா, ஆர்.கார்த்திகேயன் ஆகியோர் நீட் தேர்வுக்கு முதல் பலி அரி யலூர் அனிதா என்றெழுதிய பதாகைகளை ஏந்தியபடி சிம் சன் தந்தை பெரியார் சிலைய ருகில் மாலை 5 மணியளவில் ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆர்ப்பாட்டத்தில் மத்திய மாநில அரசுகள்தான் அனிதா மறைவுக்குக் காரணம் என்று ஆவேசமாக முழக்கமிட்டனர். இந்த திடீர் ஆர்ப்பாட்டத்தால் அண்ணா சாலையில் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பொதுமக்களும், மருத்துவ கவுன்சிலிங் நடைபெற்றுக் கொண்டிருந்த ஓமந்தூரார் வளாக பன்னோக்கு மருத்துவ மனைக்கு வருகை தந்த மாண வர்கள் மற்றும் பெற்றோர்கள் ஆர்ப்பாட்டத்தை நின்று பார்த் துவிட்டுச் சென்றதால் நெரிசல் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து சிந்தாதிரிப்பேட்டை காவல் துறையினர் ஆர்ப்பாட்டம் செய்த மாணவர் கழகத்தினரை கைது செய்து சிந்தாதிரிப் பேட்டை சிங்கண்ணன் தெரு விலுள்ள சமூகநலக்கூடத்தில் அடைத்து வைத்தனர். கைது செய்யப்பட்டவர்களை துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன் றன், பெரியார் திடல் மேலா ளர் சீதாராமன், விடுதலை மேலாளர் சரவணன், வழக்கு ரைஞர் குமாரதேவன், தென் சென்னை மாவட்டத்தலைவர் இரா.வில்வநாதன், இரா.பிர பாகரன், வழக்குரைஞர் தளபதி பாண்டியன், மாணவரணி மண் டல செயலாளர் பா.மணியம்மை ஆகியோர் நேரில் சந்தித்து பேசி னர்.

கைதானவர்களில் கார்த்தி கேயன் என்பவர் பொறியியல் பயிலும் மாணவராவார். இவர் தாம்பரத்திலிருந்து செங்குன்றம் செல்வ தற்காக பேருந்தில் வந்து கொண்டிருந்தவர் ஆர்ப்பாட்டம் காரணமாக ஏற்பட்ட நெரிச லால் நின்ற பேருந்திலிருந்து இறங்கி தன்னெழுச்சியாக ஆர்ப் பாட்டத்தில் கலந்துகொண்டு சிறைப் பட்டவராவார். இந்த உணர்வுகள் மாணவர்களி டையே எவ்வளவு தீவிரமாக இருக்கின்றது என்பதற்கு கார்த் திகேயன் ஓர் எடுத்துக்காட்டு. கைதுசெய்யப்பட்டவர்கள் இரவு 9:30 மணிக்கு மேல் விடு தலை செய்யப்பட்டனர். திரா விடர் மாணவர் கழகத்தினர் தொடங்கி வைத்த இந்த உணர் வுகள் தமிழகம் முழுவதும் பரவி மற்ற மற்ற அமைப்பு களும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner