எழுத்துரு அளவு Larger Font Smaller Font

திருவரங்கம், செப்.14 திருவரங்க நகர திராவிடர் கழகத்தில் 05.9.2017 அன்று கலந்துரையாடல் கூட்டம் திருவரங்கம் பெரியார் மய்யத்தில் நகர தலைவர் சா.கண்ணன் தலைமையில் நடை பெற்றது. நகர செயலாளர் இரா.முருகன் வரவேற்புறையாற்றினார். மாவட்ட தலைவர் ஞா.ஆரோக்யராஜ், மாவட்ட செயலாளர் இரா.மோகன் தாஸ், மாவட்ட இ.அணி செயலாளர் பி.தேவா, நகர செயலாளர் இர.முருகன், நகர து.தலைவர் த.அண்ணாதுரை, காட்டூர் கனகராஜ், வி.வா.வ.ஆலோசகர் த.ஜெயராஜ் மற்றும் வாசகர் வட்ட தலைவர் மு.மீனாட்சி சுந்தரம், இளைஞர் அணி சுதாகர் ஆகியோர் முன்னிலையாற்றினார்கள். கூட்டத்தில்   கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தீர்மானம்:

1) தந்தை பெரியார் 139ஆ-வது பிறந்தநாளை மிக சிறப்பாகக் கொண்டாடுவது என முடிவு செய்யப்பட்டது

2) 23 இடங்களில் கழக கொடியேற்றி இனிப்புகள் வழங்குவது, தந்தை பெரியார் சிலையை சுத்தம் செய்து வண்ணம் தீட்டுவது

3) விடுதலை வாசகர் வட்டம் சார்பாக அய்யா சிலையை அலங்கரிப்பது.

4) மதியம் சிறப்பாக புலால் உணவு வழங்குவது

5.திருவரங்கத்தில் அதிக அளவு விடுதலை சந்தா சேர்ப்பது என முடிவு எடுக்கப்பட்டது.

இறுதியாக அண்ணாதுரை நன்றி கூறினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner