எழுத்துரு அளவு Larger Font Smaller Font

திருப்பத்தூர், செப்.15 11.09.2017   திங்கள் மாலை 5.00 மணியளவில் திருப்பத்தூர் மாவட்ட திராவிடர் கழக தலைவர்  அகிலா எழிலரசன் அவர்கள்  இல்லத்தில் அவரது தலைமையில்  கலந்துரையாடல் கூட்டம் நடைப்பெற்றது.

தந்தை பெரியார் அவர் களின் 139--ஆம் ஆண்டு பிறந்த நாளை மிகவும் எழுச்சியோடும், சிறப்போடும் கொண்டாட இக் கூட்டத்தில் முடிவுகள் மேற் கொள்ளப்பட்டது.

தந்தை பெரியார்  படங் களை கிராமங்கள் மற்றும் நகரங்களில் ஆங்காங்கே வைத்து மாலை அணிவித்தும், சிலை களுக்கு மாலை அணிவித்தல், மரக்கன்றுகள் நடுதல், மற்றும் தந்தை பெரியாரின் படங்களை அலங்கரித்து வாகனத்தில் வைத்து ஊர்வலமாக எடுத்துச் செல்லுதல், இரு சக்கர வாக னங்களில் அணிவகுத்தல்  என மிகவும் சிறப்பாக கொண்டாட முடிவுகள் எடுக்கப்பட்டது.

முன்னதாக 10.09.2017  அன்று பிறந்தநாள் கொண் டாடிய மாவட்ட தலைவர்  அகிலா எழிலரசன் அவர் களுக்கு பயனாடை அணிவித்து வாழ்த்துகள் தெரிவிக்கப்பட் டது. இக் கலந்துரையாடல்  கூட்டத்தில் மண்டல தலைவர்  பழ.வெங்கடாசலம்,மாநில. ப.க. துணை தலைவர் அண்ணா சரவணன், மாவட்ட செயலாளர் வி.ஜி. இளங்கோ,  மாவட்ட ப.க. தலைவர் சி.தமிழ் செல்வன் மாவட்ட துணை செயலாளர் எம்.கே.எஸ். இளங்கோவன், பழனிசாமி, மகளிர் அணி மாவட்ட செய லாளர் ம.கவிதா, வெண்ணிலா, கே.கே.சி. கமலம்மாள் ஆகி யோர்  பங்கேற்றனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner