எழுத்துரு அளவு Larger Font Smaller Font

ஓமலூர், செப். 16 மேட்டூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம், பகுத்தறிவு ஆசிரியரணி கலந்துரையாடல் கூட்டம் 10.9.2017 அன்று மாலை 5 மணி யளவில் ஓமலூர் முரளி தங்கும் விடுதியில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் மேட்டூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் கோவி.அன்புமதி தலைமை தாங்கினார். மேட்டூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் த.மதியழகன் வரவேற்புரையாற்றினார்.

சேலம் மண்டல திராவிடர் கழகத் தலைவர் கவிஞர் த.சுப்பிரமணியன், மேட்டூர் மாவட்ட தலைவர் க.கிருஷ் ணமூர்த்தி, மேட்டூர் மாவட்ட செயலாளர் கா.நா.பாலு, ஓமலூர் ஒன்றிய கழக தலைவர் பெ.சவுந்திரராசன், மேட்டூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் கே.ஏ.சந்திர சேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

திராவிடர் கழக தலைமை செயற்குழு உறுப்பினர் பழனி. புள்ளையண்ணன், பகுத்தறி வாளர் கழக மாநில செயல் தலைவர் தகடூர் ஜெ.தமிழ்ச் செல்வி, பகுத்தறிவாளர் கழக பொதுச்செயலாளர் மா.அழகிரி சாமி, பகுத்தறிவு ஆசிரியரணி மாநில அமைப்பாளர் த.ரமேஷ் ஆகியோர் நிகழ்வில் கலந்து கொண்டு பகுத்தறிவாளர் கழ கத்தின் எதிர்கால செயல் திட் டங்கள் பற்றி கருத்துரை வழங்கினர்.

கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர் மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

1) பாசாளியூர் அய்யனார் மற்றும் நீட் நுழைவுத் தேர்வின் காரணமாக மனமுடைந்து மர ணமடைந்த மாணவி அனிதா அவர்களின் மறைவிற்கு இக் கூட்டம் வீர வணக்கம் செலுத் துகிறது.

2) ஈரோட்டில் தமிழர் தலைவர் ஆசிரியர் பிறந்த நாள் விழாவில் மேட்டூர் பகுத்தறி வாளர் கழகத்தின் சார்பில் 50 விடுதலை சந்தாக்கள் வழங் குவது என தீர்மானிக்கப் படுகிறது.

3) தந்தை பெரியார் பிறந்த நாளையொட்டி பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பேச்சு போட்டி, கட்டுரை போட்டி நடத்துவதென தீர்மானிக்கப் படுகிறது.

4) பகுத்தறிவு ஆசிரியரணி மாவட்ட பொறுப்பாளர்கள், மாவட்ட தலைவர் பு.வீரமணி, மாவட்ட செயலாளர் க.வேல் முருகன் என்று கூட்டத்தில் தேர்வு செய்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பகுத்தறிவு ஆசிரியரணி தலைவர் பு.வீரமணி நன்றி கூற விழா இனிதே முடிந்தது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner