எழுத்துரு அளவு Larger Font Smaller Font

காரைக்குடி, செப். 26 காரைக்குடி அழகப்பா பல் கலைக்கழகத்தில் அறிஞர் அண்ணா ஆய்வு இருக்கை சார்பில் அறிஞர் அண்ணா பிறந்த நாள் விழா சிறப்புச் சொற்பொழிவு 15.-9.-2017 அன்று பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா கலையரங்கில் நடை பெற்றது.

பல்கலைக்கழகப் பதிவாளர் (பொ.) முனைவர் வி. பாலச் சந்திரன் இந்நிகழ்ச்சிக்கு தலை மையேற்று உரை நிகழ்த்தினார்.  அவர் தமது தலைமையுரையில் அறிஞர் அண்ணா சிறந்த பண் பாளர் மக்கள் போற்றும் மாண் பாளர் இலக்கியப் படைப்பாளர் அனைவரையும் நண்பர்களாக நட்பு பாராட்டும் உயர்ந்த உள் ளம் கொண்டவர் எனப்புகழாரம் சூட்டினார்.  அறிஞர் அண்ணா மொழிப் புலமை மிக்கவர். அடுக்குமொழியிலும் சிலேடை நயம் அமையும் விதத்திலும் பேசுவதில் வல்லவர். கடமை கண்ணியம் கட்டுப்பாடு என் னும் கோட்பாடுகளை தம் வாழ்க்கையில் பின்பற்றிய தோடு பிறரையும் பின்பற்று மாறு செய்தவர். சமூக சீர்திருத் தங்களை தமது எழுத்துக்கள் மூலமாகவும் திரைப்படங்கள் வாயிலாகவும்  மக்களிடம் கொண்டு சேர்த்தவர். மூடநம் பிக்கைக்கு எதிரானவர்.  தமிழ் உணரவையும் தமிழ்ப்பற்றை யும் மக்களுக்கு ஊட்டியவர் எனக் குறிப்பிட்டார்.

மயிலாடுதுறை கங்காதர புரம் பணி நிறைவு பெற்ற தமி ழாசிரியர் கங்கைமணிமாறன் 'செந்நாவிற் சிறந்த அண்ணா' என்ற தலைப்பில் சிறப்புச் சொற்பொழிவாற்றினார்.  அவர் தமது சிறப்புரையில் அறிஞர் அண்ணா எளிமைக்கு இலக் கணமாக விளங்கியவர். மூட நம்பிக்கைகளில் அழுந்திக் கிடந்த சமுதாயத்தை விழித் தெழச் செய்வதற்காக பாடுபட் டவர். அரசியல் பண்பாட்டை யும் அரசியல் நாகரிகத்தையும் அனைவருக்கும் கற்றுக் கொடுத் தவர். தம் எழுத்து மூலமாகவும் பேச்சு மூலமாகவும் புரட்சி செய்தவர். அறிஞர் அண்ணா மொழி உணர்வையும் தமிழ் உணர்வையும் மக்களுக்கு ஊட் டியவர். அண்ணாவின் எழுத்துக் களை படித்தால் மாணவர்கள் சிறந்த தலைமைப் பண்புகளை கொண்டவர்களாகவும் மனித நேயம் மிக்கவர்களாகவும் உருவாக முடியும். இன்றைய மாணவர்கள் அண்ணா போன்ற தலைவர்களின் வரலாற்றை அவசியம் படித்து தெரிந்து கொள்ள வேண்டும். அறிஞர் அண்ணாவின் பேச்சு மக்களி டையே மிகப் பெரியதாக்கத்தை ஏற்படுத்தியது என்றால் அது மிகையாகாது. அண்ணாவின் எழுத்துக்களையும் படைப்பு களையும் இன்றைய இளம் தலைமுறையினர் கட்டாயம் படித்து தெரிந்து கொள்ள வேண்டும் என்று கூறினார்.

இந்நிகழ்ச்சியில் அண்ணா பிறந்த நாள் விழாவையொட்டி பல்கலைக்கழக முதுநிலைத் துறை மற்றும் இணைவுக் கல்லூரி மாணவர்களுக்கிடையே நடைபெற்ற கவிதை கட்டுரை பேச்சுப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, -மாணவிகளுக்கு ரொக்கப் பரிசுகளையும் சான் றிதழ்களையும் பதிவாளர் நேரில் வழங்கிச் சிறப்பித்தார்.

இந்நிகழ்ச்சியில் பல்கலைக் கழக ஆட்சிக் குழு உறுப்பினர் முனைவர் அ. நாராயணமூர்த்தி கல்லூரி வளர்ச்சிக் குழும முதன்மையர் முனைவர் இராஜ்மோகன் பேரா. இராம.இராம நாதன், பேரா.அய்க்கண், பேரா. ந. சுப்பிரமணியன் பொற்கிழி கவிஞர் நாகப்பன், நாச்சியப்பன் மற்றும் துறைத்தலைவர்கள் பேராசிரியர்கள் மாணவ,-மாண வியர்கள் உட்பட 750 பேர் கலந்து கொண்டனர்.

முன்னதாக அறிஞர் அண்ணா ஆய்வு இருக்கை முனைவர் பட்டஆய்வாளர் வ.பாவரசன் நன்றி கூறினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner