எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

பெரம்பூர், செப். 27- அறிஞர் அண்ணாவின் 109ஆம் ஆண்டு பிறந்த நாளான 15.9.2017 அன்று மாலை 6 மணிக்கு செம்பியம் - அகரம் பெரவள்ளூர் காமராஜர் சிலை அருகில் கழகப் பொதுக்கூட்டமும், சுழலும் சொற்போர் அரங்கமும் பெரம்பூர் பகுதி கழகம் சார்பில் சிறப்பாக நடைபெற்றன.

நிகழ்ச்சிக்கு வடசென்னை மாவட்ட துணைச் செய லாளர் கி.இராமலிங்கம் தலைமை வகித்தார்.மாணவ ரணித் தோழர் கா.காரல்மார்க்சு வரவேற்புரையாற்றினார். பெரம்பூர் தலைவர் து.தியாகராசன், ஓட்டேரி தலைவர் க.சிட்டிபாபு முன்னிலை வகித்தனர்.

மந்திரமா? தந்திரமா?

நிகழ்ச்சியின் தொடக்கமாக நாத்திகன் சம்பூகன் அவர்களின் பகுத்தறிவு விளக்க மந்திரமா? தந்திரமா? நிகழ்ச்சி நடைபெற்றது. சாமியார்கள் செய்யும் மோசடிச் செயல்களை விளக்கியும், மக்கள் எவ்விதமெல்லாம் ஏமாற்றப்படுகிறார்கள் என்பதை விளக்கியும் நிகழ்ச்சி களைச் செய்து காட்டினார்.

அடுத்து தலைமைக் கழகப்பேச்சாளர் தஞ்சை இரா.பெரியார்செல்வன் அவர்களை நடுவராகக் கொண்டு "அறிஞர் அண்ணாவின் பெரும் பணிகளில் பெருமைக் குரியது" என்னும் தலைப்பில் சுழலும் சொற்போர் நடைபெற்றது.

பெரியார் செல்வன் உரை

தந்தை பெரியாரின் தலை மாணாக்கராகத் திகழ்ந்த அறிஞர் அண்ணா அவர்களின் ஆற்றலை, அரசியல் பண்புகளை, பகுத்தறிவுப் பணிகளில் அவரது ஆழ்ந்த பங்களிப்பை, இன மொழி உணர்வைத் தட்டியெழுப் பியதை, இலக்கியப் பணிகளில் ஈடுபட்டு முத்திரைப் பதித்த சிறப்பினை விளக்கி முதன்மை உரையினை தஞ்சை இரா.பெரியார்செல்வம் நிறைவு செய்தார்.

கா.அமுதரசன் உரை

அறிஞர் அண்ணாவின் பெரும்பணிகளில் பெருமைக் குரியது. "இனமொழி உணர்வே" என்னும் தலைப்பில் கா.அமுதரசன் இனத்தையும், மொழியையும் இணைத்து அண்ணா ஆற்றிய அரும் பணிகளையும், சமுதாயத் துறையிலே சமதர்மம், வடநாட்டு ஏகாதிபத்தியத்தில் இருந்து விடுதலையையும் வெளிப்படுத்தும் அண்ணா வின் கருத்துகளையும், இருமொழிக் கொள்கையை நிலைநிறுத்தி, சுயமரியாதைத் திருமணச் சட்டத்தை நிறைவேற்றியது குறித்தும் விளக்கிப் பேசினார்.

பொன்னேரி செல்வி உரை

கும்மிடிப்பூண்டி மாவட்ட மகளிர் பாசறை செயலா ளர் பொன்னேரி செல்வி அறிஞர் அண்ணா அவர்கள் "ஆரிய மாயை" நூல் எழுதி ஆரியப் பொய் மாயைகளை, புரட்டுகளை வெளிப்படுத்தியது, உலகத் தமிழர் தமி ழால் ஒன்றுபட உலகத் தமிழ்மாநாடு நடத்தியது, ஓரி ரவு, வேலைக்காரி, சொர்க்கவாசல் உள்ளிட்ட திரைப் படங்கள் வாயிலாக பகுத்தறிவுக் கருத்துகளை எடுத்து வைத்தது, உடல் நலிவுற்று கோவில் வழிபாட்டுக்கு வற்புறுத்தப்பட்ட நிலையில் கோவிலுக்குள் நுழைய மறுத்தது குறித்தெல்லாம் தனது உரையில் கோடிட்டு உரையாற்றினார்.

பா.மணியம்மை உரை

அடுத்து அண்ணாவின் "இலக்கியப் பணிகளே" என் னும் தலைப்பில் சென்னை மண்டல மாணவரணிச் செயலாளர் பா.மணியம்மை உரையாற்றுகையில், அண் ணாவின் புதினங்கள், நாவல்கள், நாடகங்கள், திரைப் படங்கள், எழுத்தோவியங்கள், கவிதைகள், கட்டுரை களில் சீர்திருத்த இயக்கக் கொள்கைகளை விளக்கிய பாங்கையும், தொய்வில்லாத இலக்கியப்பணிகள், தம்பிக்குக் கடிதங்கள் மூலமாக இன மொழி உணர்வை வளர்த்து, இயக்க மாண்பினை நிலைநாட்டியதையும் எடுத்துக்கூறினார்.

சு.குமாரதேவன் உரை

வடசென்னை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் சு.குமாரதேவன் "அரசியல் அணுகுமுறையே" என்னும் தலைப்பில் உரையாற்றினார். அரசியல் கட்சியை அண்ணா வழி நடத்தியபோதும், நயத்தகு பண்புகளை கடைபிடித்ததையும், தரக்குறைவாக தன்மீது தாக்குதல் களைத் தொடுத்த போதும் "வாழ்க வசவாளர்கள்!" என மாற்றாரை வாழ்த்தி "மாற்றான் தோட்டத்து மல்லிகைக் கும் மணமுண்டு" என்று குறிப்பிட்டு அரசியலில் கண் ணியத்தை வலியுறுத்தியதையும், அரசியலில் ஈடுபட்டு ஆட்சியிலமர்ந்த போதும் சட்டமன்றத்தில் காங்கிரசு கட்சியினரது கடும் விமர்சனங்களை பொறுமையுடன் எதிர்கொண்டு தனது நாவன்மையால் நகைச்சுவையுடன் பதிலளித்து தனது அணுகுமுறைகளால் அனைவராலும் போற்றப்பட்டதையும், மதிக்கப்பட்டதையும் வரலாற்று நிகழ்வுகளைக் குறிப்பிட்டு உரையாற்றினார்.

நடுவர் உரை

அடுத்து சுழலும் சொற்போர் அரங்கத்தில் உரை யாற்றிய கழகப் பேச்சாளர்களது உரைகளைத் தொகுத்து நடுவர் தஞ்சை இரா.பெரியார் செல்வன் உரையாற்றினார்.

"அறிஞர் அண்ணா அவர்கள் அரசியல் அணுகு முறைகளில் பண்பாடு காத்து, இலக்கியப் பணிகளில் வரலாறு படைத்து, இனமொழி உணர்வை நாட்டில் வளர்த்தெடுத்த பெருமையினை பெற்றவரென்றாலும் பகுத்தறிவு ஆட்சியை நிறுவியது குறிப்பிடத் தக்கதாகும்.

கடவுளர் படங்களும், மத அடையாளங்களும் அரசு அலுவலகங்களில் இடம் பெறக்கூடாது என்று உத்தர விட்டது சிறப்புக்குரியதாகும். ஒப்பிடுதற்கரிய பகுத்தறி வாளராக அண்ணா வாழ்ந்து காட்டியதால் தான் தந்தை பெரியார் திராவிட லெனின் என அண்ணாவைப் பாராட் டினார்.

பகுத்தறிவுப் பணிகளே...

எனவே அறிஞர் அண்ணாவின் பெரும் பணிகளில் பெருமைக்குரியது "பகுத்தறிவுப் பணிகளே" என்று குறிப்பிட்டு தஞ்சை இரா.பெரியார் செல்வன் தனது நடு வர் உரையினை நிறைவு செய்தார்.

சுழலும் சொற்போர் அரங்கத்தின் நடுவர் தஞ்சை இரா.பெரியார் செல்வனுக்கு வழக்குரைஞர் சு.குமார தேவனும், மாணவத்தோழர், கழக சொற்பொழிவாளர் கா.அமுதரசனுக்கு சென்னை மண்டல செயலாளர் வி.பன்னீர்செல்வமும், பொன்னேரி செல்விக்கு தங்க.தனலட்சுமியும், பா.மணியம்மைக்கு சுயமரியாதைத் திருமண நிலைய இயக்குநர் பசும்பொன் செந்தில்குமாரி யும், வழக்குரைஞர் சு.குமாரதேவனுக்கு கழக மகளிர ணித் தோழியர் சி.வெற்றிச்செல்வியும் சால்வைகள் அணிவித்து சிறப்புச் செய்தனர்.

நிகழ்ச்சி முன்னிட்டு சுவரொட்டி விளம்பரம் நல்ல முறையில் செய்யப்பட்டிருந்தது. தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, அன்னை மணியம்மையார், ஆசிரியர் கி.வீரமணி உருவப் படங்களுடன் பேனர் மேடையில் வைக்கப்பட்டிருந்தது.

நிகழ்ச்சி நடைபெற்ற பெரவள்ளூர் சதுக்கம் மற்றும் பேப்பர் மில்ஸ் சாலையில் டியூப் லைட்டுகளுடன் கூடிய கழகக் கொடிக்கம்பங்கள் நடப்பட்டிருந்தன. ஒளி யுமிழ் ஆலோஜன் விளக்குகளும் ஆங்காங்கே அமைக்கப் பட்டிருந்தன.

மக்கள் இருக்கைகளில் அமர்ந்து ஆர்வத்துடன் கழகப் பேச்சாளர்களது உரையினை செவி மடுத்தனர். மற்ற கட்சிகளைச் சேர்ந்தவர்களும் பாராட்டினர்.

பங்கேற்றோர்

இந்நிகழ்ச்சியில் கழக வழக்குரைஞரணி மாநில செயலாளர் வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி, பெரியார் நூலக வாசகர் வட்ட செயலாளர் கி.சத்தியநாராயணன், வடசென்னை மாவட்ட துணைச் செயலாளர் சி.பாசுகர், அமைப்பாளர் சி.இரகுபதி, தென்சென்னை மாவட்ட துணைச் செயலாளர் சா.தாமோதரன், செந்துறை சா.இரா சேந்திரன், செம்பியம் கழக தலைவர் ப.கோபாலகிருட் டிணன், செயலாளர் டி.ஜி.அரசு, கொடுங்கையூர் செயலாளர் தே.செ.கோபால், கண்ணதாசன் நகர் கழக அமைப்பாளர் வி.இரவிக்குமார், எருக்கமா நகர் சொ.அன்பு, தாம்பரம் நகர செயலாளர் சு.மோகன்ராஜ், மாநில கழக மாணவ ரணித் துணைச் செயலாளர் நா.பார்த்திபன், வடசென்னை இளைஞரணி அமைப்பாளர் வ.தமிழ்ச்செல்வன், கும்மிடிப்பூண்டி மாவட்ட இளைஞ ரணிச் செயலாளர் புழல் க.ச.க.இரணியன், வடசென்னை மகளிர் பாசறை செயலாளர் த.மரகதமணி, அமைப்பாளர் க.சுமதி, பொறியாளர் இ.ப.சீர்த்தி, க.வெண்ணிலா, ஆவடி நகர செயலாளர் க.கலைமணி, ஆவடி கழக ஒருங்கிணைப் பாளர் வை. கலையரசன், சு.சுதன், ரெ.யுவராஜ், அரும் பாக்கம் க.தமிழ்ச்செல்வன், திமுக இலக்கிய அணி ஓவியர் கிருபா, 68ஆவது வட்ட திமுக அவைத் தலைவர் மு.இரத்தினம், கு.சவுந்தரராசன், ஒளிப்படக் கலைஞர் ப.கலைமதி, ஓவியர்சிகரன் பிரபாகரன், ந.நாத்திகன், ர.சா.வெற்றிச் செல்வன், செ.பிரவின்குமார் மற்றும் பல கழகத் தோழர் கள் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சி இரவு 10 மணிக்கு முடிவுற்றது. நிறைவாக வடசென்னை மகளிரணிச் செயலாளர் பொறியாளர் ச.இன்பக்கனி நன்றி கூறினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner