எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பக்கிரிபாளையம், செப். 28 திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தலைவர் பச்சியப்பன் வாழ்விணையர் சுயமரியாதைச் சுடரொளி மங்கையம்மாள் 22.8.2017 அன்று மறைவுற்றார்.

அன்றே எவ்வித மூட நம்பிக்கை சடங்குமின்றி அடக் கம் செய்யப்பட்டது. மங்கையம் மாள் அவர்களின் படதிறப்பு செங்கம் பக்கிரி பாளையம் அசோக் ரைஸ்மில்லில் செப். 3  ஆம் தேதி காலை 11.30 மணிக்கு நடைப்பெற்றது.

மாநில பகுத்தறிவாளர் கழக து.தலைவர் அண்ணா.சரவணன் நிகழ்ச்சிக்கு தலைமையேற்று படத்தினை திறந்து வைத்து நினைவுரையாற்றினார். அசோக்குமார் வரவேற்று உரை யாற்றினார்.

தொடர்ந்து புலவர் ஏழுமலை, எல்.அய்.சி.குமரேசன், முன்னூர் மங்கலம் பழன், செங்கம் நகர பொறுப்பாளர் ராஜா, மேல் செங்கம் பலராமன், முன்னால் பிடிஓ சட்டநாதன் உள்பட பலர் நினைவுரையாற்றினர்.

நிறைவாக பச்சியப்பன் அவர்கள் தனது வாழ்விணையர் குறித்து உரையாற்றும் போது, தனது வாழ்வு மேம்பட அவர் தனக்கு எல்லா வகையாலும் ஒத்துழைத்தது குறித்து நீண்ட உரையாற்றினார். மேலும் தான் பகுத்தறிவாளராக மாறியது குறித்தும் தந்தை பெரியார் கொள் கையை தான் ஏற்றதால் பெற்ற வெற்றிகள், தன் நடத்தையில் ஏற்பட்ட மாற்றம் குறித்து உரை யாற்றினார்.

வாழ்க்கையில் முன்னேற, பொதுத் தொண்டில் ஈடுபட, வந் திருக்கும் உறவினர்கள் விடு தலை நாளிதழை வாங்கி படி யுங்கள்; தமிழர் தலைவர் எங்கள் குடும்ப தலைவர் ஆசிரியர் கி.வீரமணி எழுதும் வாழ்வியலை படித்து பயன் பெறுங்கள் எனக் கேட்டுக்கொண்டார். ப.ஆனந்தன் நன்றி கூறினார்.சென்னசமுத்திரம் திராவிடர்கழக தலைவர் இராமன் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். தனது வாழ்விணையர் மங்கை யம்மாளின் 84.ஆவது பிறந்த நாளை நினைவு கூர்ந்து திருச்சி நாகம்மையார் குழந் தைகள் இல்லத்திற்கு பச்சியப்பன் ரூ. 484 வழங்கினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner