எழுத்துரு அளவு Larger Font Smaller Font

மதுரை, செப்.30 16.09.2017 சனிக்கிழமை மாலை 6.30 மணிக்கு முருகானந்தம் பழக் கடையில் மதுரை விடுதலை வாசகர் வட்டத்தின் 57ஆவது சொற்பொழிவு நடைபெற்றது.

கூட்டத்திற்கு விடுதலை வாசகர் வட்டத்தின் தலைவர் நீதிபதி (பணி நிறைவு) பொ. நடராசன் அவர்கள் தலைமை தாங்கினார். வந்திருந்தோரை வரவேற்று தனராஜ்,  உரையாற் றினார். "பெரியார் கொட்டிய போர் முரசு" என்ற நூலினை  அறிமுகம் செய்து பா. சட கோபன் (புத்தக தூதன்) உரை யாற்றினார். சிறப்பு சொற் பொழிவாளர். முனைவர் சங்கீத் ராதா. (மன்னர் கல்லூரி, மதுரை) அவர்கள் "செக்கிழுத்த செம்மல்" என்ற தலைப்பில் சிறப்பான ஒரு உரையை நிகழ்த்தினார்.

அவரது உரையில் வ.உ. சிதம்பரம் அவர்கள் குடும் பத்தில் உள்ளவர்கள் வழக்குரை ஞர்களாக இருந்தார்கள் என் றும், காங்கிரசு பேரியக்கத்தில் தலைவர்களுக்கெல்லாம் தலை வராக திகழ்ந்தவர் வ.உ.சி. என்று புகழாரம் சூட்டினார்.

ஆங்கில ஏகாதிபத்தியத்தை எதிர்க்கும் முகமாக இரண்டு கப்பல்கள் வாங்கி வணிகம் செய்தார். விடுதலை போராட் டத்தில் இவரது தீவிரமான பங்களிப்பை தாங்கிக் கொள் ளாத ஆங்கில அரசு விடுதலை போராட்டத்தில் கலந்து கொண் டவர்களில் யாருக்குமே இல் லாத தண்டனையாக நாற்பது  ஆண்டுகள் தேவாந்திர தண்ட னையை அளித்தது, வ.உ.சி.க் கான  சிறைத் தண்டனை கொடுமையைக் கண்டு   நாடே கொதித்து எழுந் தது. சிறையில் இருக்கும் பொழுது "மெய் யறிவு - திருக் குறள் அறத்துப் பால்" என்ற நூலை எழுதினார்.

அவர் சிறையிலிருந்து வெளியே வரும் போது அவரை வரவேற்க யாருமே வரவில்லை என்ற நிகழ்ச்சியை சொற்பொழிவாளர் விளக்கும் போது பார்வையாளர்கள் கண் கலங்கினர்.

தனித்தமிழில் பேச முடியும் என்பதை நிரூபித்தவர் வ.உ.சி அவர்கள் என்றும் வ.உ.சிக்கும் தந்தை பெரியாருக்கும் இடையிலான சந்திப்புகளையும் உரையாடல்களையும் மிக விரிவாக எடுத்து விளக்கியது பார்வையாளர்களுக்கு மிகுந்த பரவசத்தை ஏற்படுத்தியது. இறுதியில் விடுதலை வாசகர் வட்ட செயலாளர் அ.முருகா னந்தம் நன்றி கூற நிகழ்ச்சி இனிதே முடிவுற்றது.

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி யின் தியாகத்தினை உணர்ச்சிப் பெருக்குடன் உரை யாற்றிய முனைவர். சங்கீத் ராதாவை அனைவரும் பாராட் டியது குறிப்பிடத்தக்கது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner