எழுத்துரு அளவு Larger Font Smaller Font

மலேசியா, அக். 1- மலேசிய நாட்டில், பகாங் மாநிலத்தில் பெந்தா தோட்டத் தில் அமைந்துள்ள அரசு தமிழ்ப் பள்ளி யில் பெரியார் நூலகம் அமைக்கப்பட் டது. கடந்த 6-.9.-2017இல், பெரியார் நூல கத்தை தோட்டத் தொழில் மேலாண் மைத்துறை ஆலோசகர் மு.கோவிந்த சாமி திறந்து வைத்து உரை நிகழ்த்தினார். பெந்தா தமிழ்ப்பள்ளியின் தலைமை ஆசிரியர் விக்னேசுவரி இராமலிங்கம்  தலைமையேற்றார்.

நிகழ்வில், மாவட்ட காவல்துறை துணை ஆணையர் சந்திரன், ஏ.எஸ்.பி., பெந்தா தோட்ட துணை மேலாளர் திரு. யோகேசுவரன் கலந்துச் சிறப்பித்தனர். மேலும், கோல லிப்பிஸ் தமிழ்ப் பள் ளித் தலைமை ஆசிரியர் இரா.அம்மாலு,  செல்போன், புடு, ஆகிய தமிழ்ப் பள்ளி களின் தலைமை  ஆசிரியர்கள்,  திரா விடர் கழகத் தோழர்கள்,  பெற்றோர்கள்,  மாணவர்கள் என சுமார் 150க்கும் மேற் பட்டோர் கலந்துக் கொண்டனர்.

நிகழ்ச்சி நெறியாளராக அய்யை பி.நவமணி சிறப்பாக பணியாற்றினார்.

பெரியார் படத்திறப்பு

கடந்த 19.6-.2017இல் மலேசிய நாட் டில், சிலாங்கூர் மாநிலம், கிள்ளான் நகருக்கு அருகில் அமைந்துள்ள புக்கிட் ராசா தோட்டத் தமிழ்ப் பள்ளியில் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் உருவப்படமும், செய்திக்குறிப்புப் பட மும் அதிகாரப்பூர்வமாக திறப்பு செய் யப்பட்டது.

பள்ளியின் தலைமை ஆசிரியர் மல் லிகா, ஆசிரியர்கள், பள்ளி மாணவர்கள், கழகத்தோழர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். பெரியாரியல் பயி லரங்க ஒருங்கிணைப்பாளர் மு.கோவிந் தசாமி அவர்கள் பெரியார் படத்தையும், கடந்த 25.12.1954ஆம் ஆண்டில் கிள் ளான் இலட்சுமி தோட்டத்திற்கு (புக் கிட் ராசா) தந்தை  பெரியாரின்  வருகையை நினைவு கூறும் நாளிதழ் செய்திக் குறிப் புப் படங்களையும் திறந்து வைத்தார்.

கலந்து கொண்ட தோழர்கள்

நாக.பஞ்சு, த.பரமசிவம், பெரியார் பெருந்தொண்டர் இரா.பெரியசாமி, பெரியார் பெருந்தொண்டர் கோ. ஆவு டையார் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் பலரும் கலந்துச் சிறப்பித் தனர்.

திராவிடர் கழகத்தோழரும், பெரியா ரியல் பயிலரங்க ஒருங்கிணைப்பாளரு மான மு.கோவிந்தசாமி, தன் சொந்த செலவில் இதுநாள்வரை, மலேசியாவில் 200 தமிழ்ப்பள்ளிகளின் நூலகங்கள், மாணவர்களுக்கு நூல்களை அன்பளிப் பாக வழங்கியுள்ளார்.

தந்தை பெரியார் அவர்களின் சமூக நீதிக் கொள்கைகளை, சிந்தனைகளைப் பரப்பிடும் வண்ணம், தலைவர் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, முத்தமி ழறிஞர் கலைஞர், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி ஆகியோரின் பகுத்தறிவுக் கொள்கைகளைத் தாங்கிய கட்டுரைகள், சிறுகதைகள் அடங்கிய புலவர் குழந்தை அவர்களின் திருக்குறள், தமிழ் இலக்கணப் பயிற்சி நூலினை அச்சிட்டு இதுநாள்வரை சுமார் 9000 படிகளைத் தமிழ்ப்பள்ளி மாணவர் களுக்கு அன்பளிப்பாக வழங்கி வந்துள் ளார். அப்பணியை தம் தொண்டாகக் கருதி தொடர்ந்து செய்தும் வருகின்றார்.

அண்மையில், மலேசியாவில் கீழ்க் காணும் மூன்று மாநிலங்களில், ஒன்பது தமிழ்ப்பள்ளிகளில் 500 மாணவர்களுக்கு புலவர் குழந்தை அவர்களின் திருக்குறள் தெளிவுரை நூலினை அன்பளிப்பாக வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. விவரம் வருமாறு:

நெகிரி செம்பிலான் மாநிலம்: 1.   கெய்ரோ தமிழ்ப்பள்ளி, மந்தின், 2. செம்பாக்கா தமிழ்ப்பள்ளி, சாலாக், 3.துன் சம்பந் தன் தமிழ்ப்பள்ளி, பாஜம். மந்தின்.

பகாங் மாநிலம்: 1. இந்திரா மக் கோத்தா தமிழ்ப்பள்ளி, குவாந்தான்,

2.குவாலா ரேமான் தமிழ்ப்பள்ளி, குவாந்தான்.

சிலாங்கூர் மாநிலம்: 1. இராசாக் தமிழ்ப்பள்ளி, சா ஆலாம், 2. சாலாக் திங்கி தமிழ்ப்பள்ளி, சிப்பாங், 3.புக் கிட் செராக்கா தமிழ்ப்பள்ளி, ஜெராம். காப்பார், 4. பிராஃப்பதன் தமிழ்ப் பள்ளி, காப்பார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner