தருமபுரி, அக். 1- திராவிடர் மாணவர் கழகம் சார்பாக கிராமப்புற இரண்டாம் கட்ட பிரச்சாரம் செப் - 29 தருமபுரி மாவட்டம் பொம்மிடியில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் 18 கல்லூரி மாணவர்கள் கலந்துக்கொண்ட னர். "தந்தை பெரியாரின் இன் றைய தேவைகள் " என்கிற தலைப்பில் மாநில மாணவ ரணி கூட்டுச் செயலாளர் சே.மெ.மதிவதனி, மற்றும் மாநில மாணவரணி துணை செயலா ளர் த.மு.யாழ்திலீபன் ஆகி யோர் உரையாற்றினார்.
இந்நிகழ்வை ஒருங்கி ணைப்பு செய்தார் தந்தை பெரியார் மன்றத்தின் தலைவர் தோழர் சூர்யா அவர்கள் மற் றும் பாப்பிரெட்டிப்பட்டி ஒன் றிய மாணவரணி தலைவர் அ.பூவரசன் மற்றும் தோழர்கள் கலந்துக்கொண்டனர்..
தாக்கம்: விடுதலை மற்றும் உண்மை ஆண்டு சந்தாக்கள் வழங்குவதாகவும் மற்றும் மாதம் ஒருமுறை பகுத்தறிவு சார்ந்த தலைப்பில் நிகழ்ச்சி நடத்துவதாக முடிவு செய்யப் பட்டுள்ளது.