எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

 

 

மயிலாடுதுறை

மயிலாடுதுறை மாவட்ட பகுத் தறிவாளர் கழகம் மற்றும் பகுத்தறிவு ஆசிரியரணியின் மாவட்ட கலந்துரை யாடல் கூட்டம் 24.-9.-2017 அன்று மாலை 5 மணிக்கு வைத்தீசுவரன்கோயில் பழ னியம்மாள் மினி ஹாலில் நடை பெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட பகுத் தறிவாளர்கழகத் தலைவர் ஞான. வள் ளுவன் தலைமை வகித்தார். மாவட்ட பகுத்தறிவாளர் கழகச் செயலாளர் அ. சாமிதுரை வரவேற்புரை ஆற்றிளார்.

மண்டல தலைவர் ச.மு.செகதீசன், மாவட்ட தலைவர் கடவாசல் குண சேகரன், மாவட்ட செயலர் தளபதிராஜ், கொள்ளிடம் ஒன்றிய துணைத் தலைவர் பாண்டுரெங்கன், செம்பனார்கோயில் ஒன்றிய பக. துணைத் தலைவர் ஆற்ற லரசு, வைத்தீசுவரன் கோயில் நகர பக. செயலாளர் இராசேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில், மாநில பகுத்தறிவாளர் கழக செயலாளர் மா.அழகிரிசாமி, மாநில பகுத்தறிவு ஆசிரியரணி அமைப்பாளர் சி.ரமேசு, மற்றும் குடந்தை மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் வி. மோகன் ஆகியோர் கழக செயல்பாடுகள், நீட்,  நவோதயா, புதிய கல்விக்கொள்கை ஆகியனவற்றின் ஆபத்துகள் பற்றியும் அவற்றுக்கெதிரான பிரச்சாரங்கள் பற்றி யும் விரிவாக எடுத்துரைத்தனர்.

கூட்டத்தில் மறைந்த மாணவி அனி தாவின் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்தும், நீட், புதிய கல்விக்கொள் கைகட்கெதிரான பிரச்சார கருத்தரங்கு கள், கூட்டங்கள்  நடத்துவது என்றும், டிசம்பரில் ஈரோட்டில் நடைபெறவுள்ள நிகழ்ச்சியில் மாவட்ட சார்பாக அய்ம் பது விடுதலை சந்தாக்களை அளிப்பது என்றும், வரும் 2018 சனவரியில் திருச்சி யில் நடைபெறவுள்ள் உலக நாத்திகர்கள் மாநாட்டில் மாவட்ட சார்பில் பெரு மளவு கலந்து கொள்வது என்றும் தீர் மானங்கள் நிரைவேற்றப்பட்டன.

மாவட்ட ஆசிரியரணியின் புதிய தலைவராக விடுதலைக்கனியும், மாவட் டச் செயலாளரராக  வெங்கடேசனும் நியமிக்கப் பட்டார்கள்.

கூட்டத்தில் மா. ராசாங்கம். ஓவியர் மணி, ராமலிங்கம், சத்தியமூர்த்தி, முத்துக்கிருட்டிணன், செந்தில்குமார், ராசசேகரன், ராம்குமார், ராமச்சந்திரன், பக்கிரிசாமி, சாமிநாதன், வெண்மணி யழகன், அய்யாசாமி, சீனிமுத்து, அமிர் தலிங்கம்,  முகில்வேந்தன் ஆகிய பகுத் தறிவாளர் கழகத் தோழர்களும், ஓய்வு பெற்ற அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களும் திரளாக வருகை தந்து சிறப்பித்தனர்.

நகர பகுத்தறிவாளர் கழகப் பொரு ளாளர் கமலநாதன் நன்றி கூறினார்.

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்ட திராவிடர் கழகம் மற்றும்  சிந்தனைக்களம் வாச கர் வட்டம் இணைந்து நடத்திய தந்தை பெரியாரின் 139 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா அம்மையார்குப்பம் குறள் நெறி அரிமா சங்க மழலையர் பள்ளியில் மருத்துவ மாணவி அனிதா மற்றும் எழுத் தாளர் கவுரி லங்கேஷ் அவர்களுக்கு இரங்கல் தெரிவித்து தந்தை பெரியாரின் படத்தினை ஓய்வு பெற்ற மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ச.மு.அவி னாசி திறந்து வைத்திட பெரியார் பெருந்தொண்டர் பு.வெ.முருகேசனார்  தலைமை உரையாற்றிட பகுத்தறிவு ஆசிரியரணி ப.ந.மாசிலாமணி அவர் கள் வரவேற்புரை நிகழ்த்தினார்கள்.

மாவட்ட தலைவர் வழக்குரைஞர் மா.மணி தந்தை பெரியாரின் கொள் கைகளை எடுத்து உரைத்தார். பகுத்தறி வாளர் கழக மாவட்ட தலைவர் எழில் முன்னிலை வகித்திட பெரியார் பிஞ்சு தோழியர். ல.கவிபாரதி அவர்கள் இணைப்புரை வழங்கிட, பெரியார் ஓரு சகாப்தம் என்ற தலைப்பில் சிறப்பு அழைப்பாளராக வருகை தந்த கழக சொற்பொழிவாளர் பொதட்டூர் புவி யரசன் எடுத்துரைத்தார். பகுத்தறிவாளர் கழக மாவட்ட செயலாளர் பேராசிரியர் சி.நீ.வீரமணி நன்றி கூறிட விழா நிறை வுற்றது. இந்நிகழ்வில் காஞ்சி மண்டல மேனாள் செயலாளர் கா.ஏ.மோகன வேலு, ச.த.கார்த்திகேயன், அறிவொளி பழனி, தோழர்  எம்.எஸ். விநாயகம், புலவர் சோமநாதன், மோகனகிருஷ்ணன் மற்ற தோழர்களும் கலந்து கொண்டனர்.

செங்கற்பட்டு

செங்கற்பட்டு மாவட்ட பகுத்தறி வாளர் கழக கலந்துரையாடல் கூட்ட 20.8.2017 அன்று காலை 11 மணியளவில் செங்கற்பட்டு (ஆசிரியர் நா.வீரமணி இல்லத்தில் பவுத்த அரங்கில் நடை பெற்றது.

இக்கூட்டத்தில் ஓவியர், கவிஞர், தமிழாசிரியரான நா.வீரமணி அவர் களின் ஏற்பாட்டில் இக்கலந்துரையாடல் கூட்டத்தில் கலந்து கொண்ட தோழர்களுக்கு "சாதீயம் தகர்ப்போம் மனிதம் வளர்ப்போம்" என் நினைவுப் பரிசை தோழர் சாக்கியா வழங்கினார்.

இந்நிகழ்வுக்கு மாவட்ட செயலாளர் செங்கை சுந்தரம், மாணவரணி பொன்.இராசேந்திரன், செங்கை நகர கழகத் தலைவர் நா.நாகப்பன், பாரதிஜிப்ரான் முன்னிலை வகித்தனர். நினைவுப் பரிசை பெற்று கொண்ட தோழர்கள்:

ப.க. மாநில பொதுச் செயலாளர் மா.அழகிரிசாமி, ப.க. மாநில ஆசிரிய ரணி அமைப்பாளர் சி.ரமேசு, பொதுக் குழு உறுப்பினர் இரா.கோவிந்தசாமி, ப.க. மாவட்ட தலைவர் அ.சிவக்குமார், ப.க. மாவட்ட அமைப்பாளர் கோ.இராதாகிருட்டிணன், மறைமலை நகர ப.க. தலைவர் மு.பிச்சைமுத்து, நகர கழக செயலாளர் திருக்குறள் வெங்க டேசன், மாவட்ட ப.க. செயலாளர் இரா.இராம்மோகன், டி.பாபு, ப.க. மாவட்ட ஆசிரியரணி மு.இரவி ஆகி யோருக்கு வழங்கப்பட்டது.

கோ.இராதாகிருட்டிணன் நன்றியுரை கூற கூட்டம் முடிந்தது. தமிழாசிரியர் நா.வீரமணி அனைவருக்கும் தேநீரு, காரமும் வழங்கினார்கள்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner