எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பெரம்பலூர், அக். 4- பெரம்பலூர் டாக் டர் குணகோமதி மருத்துவமனையில் 26.9.2017 அன்று மாலை 5 மணிக்கு 8 ஆவது விடுதலை வாசகர் கூட்டம். ஆசிரியர் பயிற்றுநர் ஆ.பொன்மலர் தலைமையில் நடைபெற்றது.

பகுத்தறிவாளர் கழக மாவட்டச் செயலாளர் பெ.நடராசன் அனைவ ரையும் வரவேற்றார். தலைவர் தனது உரையில் அனைத்து மதங்களும் பெண்களை இழிவுபடுத்துகின்றன.

இந்து மதம், கிறித்தவ மதம், முசுலீம் மதம் இவைகளில் பெண்கள் தலைமை பொறுப்பிற்கு வரமுடிய வில்லை. மதங்களை பாதுகாப்பதும், பின்பற்றுவதும் பெண்களே என்றும் கடவுளை வழிபட செல்லும்போது விபத்தில் இறப்பை தடுக்காதவர். மனித நேயமுள்ள கடவுளாக இருக்க முடியுமா? என்று கேள்வி எழுப்பி தனது தலைமை உரையை நிறைவு செய்தார்.

சிறப்புரையாளர் தோழர் சிற்பி இராஜன் அவர்கள் "தந்தை பெரியார் பிறவாமல் இருந்தால்" என்ற தலைப் பில் பெரியார் மனிதநேயப் பண்பாளர் மனித நேயத்தை சமுதாயத்தில் வளர்க்க தனது 95 வயது வரை ஓயா மல் உழைத்தார். தமிழக முதலமைச் சர்கள் அறிஞர் அண்ணா, பெருந்தலை வர் காமராஜர், டாக்டர் கலைஞர் போன்ற தலைவர்களை முதலமைச்ச ராக உருவாக்கி அரசியலில் பாடுபட வைத்தார். சமுதாயத்தை பிடித்துள்ள சாதி, மதம், கடவுள், ஆணாதிக்கம், ஜோதிடம், புராணம் போன்ற நோய் களை ஒழிக்க பாடுபட்டார். வைக்கம் போராட்டம், இடஒதுக்கீடு, பெண்ண டிமை ஒழிப்பு, தாலி அடிமை சின் னம் நீக்கம், அரசு தலைமை செயலா ளர் திராவிடர் இனத்தவரை நியமிக்க ஆலோசனை கூறுதல், பெண்கள் கல்வி கற்க கல்லூரிகளை நிறுவுதல், தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப் பட்ட மக்களை வாழ்வில் முன்னேற்ற இடஒதுக்கீட்டை நமது எதிரிகள் மூலம் உயர்த்தியது. பெரியாரின் மனித நேய பணியான சமுதாய சமத்துவம், சுய மரியாதை, பெண்ணுரிமை, உயர் பத வியில் தாழ்த்தப்பட்டோர் நியமனம். பெண்களுக்கு ஓட்டுரிமை, சொத்து ரிமை, அரசு பதவியில் நியமனங்கள் போன்றவை பெரியாரின் உழைப்பால் நமக்கு கிடைத்தது. இவைகளை மறைத்து சமுதாயத்தில் பார்ப்பனர்கள் பெரியார் கடவுள் இல்லை என்றார், எங்களை வெறுத்தார் என்று பொய் பிரச்சாரம் செய்கின்றனர். ஆனால் பார்ப்பன பெண்களுக்கும் சேர்த்தே பாடுபட்டார் என்று கூறினார். பார் வையாளர்களின் கவனத்தை ஈர்க்க அவ்வப்போது தந்திரக்கலை செய்து மகிழ்ச்சியை ஏற்படுத்தினார்.

நிகழ்ச்சியில் பெண்கள் மற்றும் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், விடுதலை சிறுத்தை அமைப்பினர், திராவிடர் கழகத்தினர் என்று பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இறுதியாக நகரச் செயலாளர் வெ.சித்தார்த்தன் நன்றி கூறினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner